search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RSS leader"

    • சாவர்க்கர் சிறையில் சித்தரவதை அனுபவித்தார்.
    • அரசியல் கட்சித் தலைவர்கள் பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

    நாக்பூர்:

    சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடமிருந்து உதவித் தொகை பெற்றதாகவும், அவை வரலாற்று உண்மை என்றும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளதாவது:

    இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரே புரட்சியாளர் சாவர்க்கர் மட்டுமே. அவர் சித்திரவதைகள் நிறைந்த சிறை தண்டனையை அனுபவித்தார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் சிறையில் நிம்மதியாக கழித்தனர். எனவே, (அவரது ) தேசபக்தியை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது, மனிதாபிமானமற்றது.

    உங்களால் அவரை மதிக்க முடியாவிட்டால், அவரை அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை. அரசியல் கட்சித் தலைவர்கள் பொய் சொல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் அனைத்து சாதியினரும் மதிக்கப்படுகிறார்கள். தீண்டாமை என்பது அதர்மம், பாவம். பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பு ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னாவை பேச்சுவார்த்தை நடத்துமாறு மகாத்மா காந்தி தெரிவிக்கவில்லை.அப்படி நடத்தியிருந்தால் நாடு பிரிக்கப்பட்டிருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்துவார் மாவட்டத்தில் இன்று பிரபல ஆர் எஸ் எஸ் தலைவர் மற்றும் மெய்க்காப்பாளர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. #Kishtwar #MilitantsAttack
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்தவர் சந்திரகாந்த் சர்மா. இவர் தனது மெய்க்காப்பாளருடன்  கிஷ்த்துவார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற பயங்கரவாதி ஒருவன் சந்திரகாந்த் சர்மா, அவரது மெய்க்காப்பாளரை நோக்கி சரமாரியாக சுட்டான்



    இந்த திடீர் தாக்குதலில் சர்மாவின் மெய்க்காப்பாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த சந்திரகாந்த் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதைத்தொடர்ந்து, கிஷ்த்துவார் மற்றும் பதெர்வா நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இண்டர்நெட்டுக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளோம். பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர். #Kishtwar #MilitantsAttack
    ×