என் மலர்
நீங்கள் தேடியது "Rwanda"
- 2021-க்கும் முன்னதாக 4 ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே வந்தனர்.
- 2022-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை 45,774 ஆக அதிகரித்தது.
சமீப ஆண்டுகளில் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிறிய படகு மூலம் இங்கிலாந்து நாட்டிற்குள் அதிகமானோர் வரத் தொடங்கினர். 2021-க்கும் முன்னதாக நான்கு ஆண்டுகளில் வெறும் 299 பேர் மட்டுமே சட்டவிரோதமாக குடியேறிய நிலையில் 2022-ம் ஆண்டு 45774 பேராக அது உயர்ந்தது.
இதை கட்டுப்படுத்த முன்னாள் இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் புதிய சட்டம் கொண்டு ஒன்றை கொண்டு வந்தார்.
இந்த புதிய சட்டத்தின்படி சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் குடிபெயர்ந்தவர்கள் விமானம் மூலம் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்நிலையில், சட்ட விரோதமாகப் பிரிட்டனுக்குள் வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பும் முந்தைய பிரதமர் ரிஷி சுனக்கின் திட்டத்தை ரத்து செய்வதாக பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
- ஆயிரக்கணக்கான ஆண் கைதிகள் சிறையில் இருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.
- சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க ஐ.நா. அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினரால் சிறைக்குள் செல்ல முடியவில்லை.
காங்கோவின் கோமா நகரில் உள்ள மன்சென்ஸ் சிறையில் நூற்றுக்கணக்கான பெண் கைதிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.
ருவாண்டா ஆதரவு கிளர்ச்சிக் குழுக்கள் கடந்த வாரம் காங்கோ நகரத்திற்குள் நுழைந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் போது மன்சென்ஸ் சிறையில் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஆண் கைதிகள் சிறையில் இருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பெண் கைதிகள் நூற்றுக்கணக்கானோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதுடன், அவர்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த சிறை பகுதி தீவைத்து கொளுத்தப்பட்டதில் ஏராளமான பெண்கள் உடல் கருகி உயிரிழந்ததாக ஐ.நா.அமைதிப் பேச்சுவார்த்தை குழுவின் துணை தலைவர் விவியன் வான் டி பெர்ரேவின் தெரிவித்துள்ளார்.
ருவாண்டா ஆதரவு பெற்ற M23 கிளர்ச்சியாளர்கள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, சம்பவம் குறித்து மேலும் விசாரிக்க ஐ.நா. அமைதிப் பேச்சுவார்த்தை குழுவினரால் சிறைக்குள் செல்ல முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து அதிக விவரங்கள் இல்லை என்றாலும், கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் சமீபத்தில் நடந்த M23 தலைமையிலான மோதலில் இந்த அட்டூழியங்கள் மிக மோசமானவை என்று கூறப்படுகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சிறை வளாகப் பகுதியில் சுமார் 2,000 உடல்கள் அடக்கம் செய்யப்படுவதற்காக வைக்கப்பட்டிருப்பதாக விவியன் வான் டி பெர்ரேவின் கூறினார்.


பிரதமர் நரேந்திர மோடி ருவாண்டா, உகாண்டா, தென்ஆப்பிரிக்கா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ளார். 5 நாட்கள் சுற்றுப்பயணத்தின் முதல் பயணமாக ருவாண்டா நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். ருவாண்டா தலைநகர் கிகாலி சர்வதேச விமான நிலையம் சென்றடைந்த மோடியை அந்நாட்டின் அதிபர் பால் ககமே நேரில் சென்று வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து, பால் ககமே மற்றும் மோடி இருவரும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர், இருவரும் கூட்டாக பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, ’தன்னை அதிபர் ககமே விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்றது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் கிடைத்த மரியாதையாக கருதுகிறேன். ருகாண்டாவில் இந்திய தூதரகம் திறக்கப்பட உள்ளது. இதனால், பாஸ்போர்ட் மற்றும் விசா பெருவதற்கான வசதிகள் உருவாக்கப்படும். ருகாண்டாவின் பொருளாதர வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பும் இருப்பது பெருமை அளிக்கிறது’ என குறிப்பிட்டார்.
மேலும், இருநாடுகளுக்கும் இடையே தோல் மற்றும் விவசாயம் ஆராய்ச்சி தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்திய பிரதமர் ஒருவர் ருவாண்டாவிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. #Rwanda #PMModi