search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ryan Barrack"

    • இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
    • ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்றுடன் லீக் சுற்று ஆட்டம் முடிவுக்கு வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    கவுகாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் 70-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

    ராஜஸ்தான் அணி 13 ஆட்டங்களில் 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று இருக்கிறது. தனது முதல் 9 ஆட்டங்களில் 8-ல் வெற்றிய ருசித்து கம்பீரமாக நடைபோட்ட அந்த அணி கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து சற்று தடுமாறுகிறது.

    ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் ரியான் பராக் (531 ரன்), கேப்டன் சஞ்சு சாம்சன் (504) ஜெய்ஸ்வால் (348) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஜோஸ் பட்லர் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக இடம் பெற்ற டாம் கோலர் காட்மோர், துருவ் ஜூரெல், ரோமன் பவெல் ஆகியோர் சோபிக்க வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், டிரென்ட் பவுல்ட், சந்தீப் ஷர்மா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    கொல்கத்தா அணி 13 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 19 புள்ளிகள் பெற்று முதலிடத்தை தனதாக்கி விட்டது. கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி கண்ட அந்த அணியின் முந்தைய ஆட்டம் (குஜராத்துக்கு எதிராக) மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்தானது.

    கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் பில் சால்ட் (435 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங்கும், பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோராவும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர்களாக சுனில் நரின் (461 ரன், 15 விக்கெட்), ஆந்த்ரே ரஸ்செல் (222 ரன், 15 விக்கெட்) அசத்துகிறார்கள்.

    வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

    கொல்கத்தா அணி தனது வெற்றி உத்வேகத்தை தொடர முழு பலத்தையும் வெளிப்படுத்தும். கொல்கத்தாவுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்த ராஜஸ்தான் அணி நம்பிக்கையுடன் களம் காண்பதுடன், வெற்றிப் பாதைக்கு திரும்பி 2-வது இடத்தை தக்க வைக்க போராடும். எனேவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 14 வெற்றிகள் கண்டுள்ளன.

    இந்த ஆட்டங்களை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    ×