என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "saamana"
- பிரதமர் மோடியே அவரது தோல்விக்கு காரணமாக இருப்பார்
- மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும்
பா.ஜனதா கட்சி இரண்டு முறை நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறது. இரண்டு முறையும் மோடியே பிரதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இந்த முறையும் பா.ஜனதா பிரதமர் மோடி தலைமையில் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
பா.ஜனதாவின் வெற்றியை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. டெல்லி மாநில அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் கெஜ்ரிவால் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பா.ஜனதாவுக்கு எதிராக ஆதரவு திரட்டினார். மேலும் சில எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ஜனதாவுக்கு உத்தர பிரதேசம் (62), மத்திய பிரதேசம் (28), பீகார் (17), ராஜஸ்தான் (24), குஜராத் (26), மகாராஷ்டிரா (23) மாநிலங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியை கொடுத்துள்ளன. தற்போது மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா கட்சிதான் காரணம் என உத்தவ் தாக்கரே குற்றம்சாட்டி வருகிறார். அவர் பா.ஜனதாவை மிகப்பெரிய எதிரியாக கருதுகிறார்.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிப் பத்திரிகையான சாம்னா, பிரதமராகும் ஆசை எதிர்க்கட்சி தலைவரகளுக்கு இல்லையென்றால், பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என தலையங்கம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் ராகுல் காந்தியை வெகுவாக பாராட்டிய நிலையில் அவரது பொறுமையை மக்கள் விரும்ப தொடங்கியுள்ளனர். பிரதமர் மோடியுடன் காந்தி குடும்பத்தை சேர்ந்தவருடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்ற பிம்பத்தில் இருந்து ஒவ்வொருவரும் வெளியே வர வேண்டும்.
கர்நாடகா தேர்தலில் பா.ஜனதா தோல்வியடைந்தது 2024-ம் ஆண்டுக்கான பா.ஜனதாவின் கெட்ட சகுனம். வரவிருக்கும் மத்திய பிரதேச தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்திக்கும். சத்தீஸ்காரில் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், பா.ஜனதா கட்சியுடன் போட்டியை கடுமையாக்குவார் எனத் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் ராகுல்காந்தி தன்னந்தனியாக பிரசாரத்தை மேற்கொண்டால், தற்போதைய நிலை காங்கிரஸ் கட்சி மாறலாம். 2024-ம் ஆண்டு பா.ஜனதா தோல்விக்கு மோடியே காரணமாக இருப்பார். அதற்கு அமித் ஷா பங்களிப்பார். மோடி- அமித் ஷா மீது கோபம் உள்ளது. பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என மக்கள் நினைத்து விட்டார்கள் என எழுதியுள்ளது.
இருந்தாலும், மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளர் யார்? என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. அது அரசியலமைப்பு மற்றும் இந்திய தாயாக இருக்கும். தலைவர் மக்களிடையே இருந்து உருவாகுவார்.
இலங்கை மன்னர் ராவணனை வீழ்த்த வானர் கூட்டம் உதவியது போல், தற்போது வானர் சேவை அவசியமானது எனத் குறிப்பிட்டுள்ளது.
பாஜகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான சிவசேனா, சமீப காலங்களில் பாஜகவை தீவிரமாக சாடி வருகிறது. அதன் ஒருபகுதியாக தனது அதிகாரப்பூர்வ நாளிதழான சாமனாவில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாஜக மத்தியிலும், உத்தரப்பிரதேசத்திலும் ஆட்சிக்கு வரும்போது அயோத்தியில் நிச்சயம் ராமர் கோவில் கட்டிவிடுவார்கள் என நம்பியதாகவும், ஆனால் ஒருவார்த்தை கூட தற்போது அதைப்பற்றி பேசவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், ராமர் பாஜகவுக்கு நல்ல நாட்களை அளித்ததாகவும், ஆனால் இன்னும் ராமர் அயோத்தியில் இருந்து அன்னியமாகவே இருக்கிறார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது என கூறும் பாஜக, அந்த வழக்கு எத்தனை ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது என உச்சநீதிமன்றத்தில் கேட்கவில்லை என கூறியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்பது வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே போய்விட்டதாகவும், ஒருவேளை ராமர் கோவில் கட்டப்படவில்லை என்றால் பாஜகவை மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள் எனவும் சாமனா நாளிதழில் சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது. #ShivSena #BJP #AyodhyaRamTempleIssue
பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்ரே தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பசுக்களை பாதுகாப்பதாக நடத்தப்படும் வன்முறையால் உயிர்கள் பலியாவது குறித்து பேசிய அவர், இந்தியாவில் பசுக்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன, ஆனால் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்ரே, நாங்கள் பசுக்களை பாதுகாக்க வேண்டாம் என கூறவில்லை எனவும், பசுக்களை பாதுகாப்பதில் அரசு கவனம் செலுத்தியதால், பெண்கள் பாதுகாப்பாக வாழ தகுதியற்ற நாடாக இந்தியா மாறியதாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் யார் தேச விரோதி என்பதை பாஜக முடிவு செய்ய முடியாது எனவும், மிகவும் எதிர்ப்பார்ப்புடன் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்ததாகவும், ஆனால், கடந்த காங்கிரஸ் ஆட்சியைப் போலவே இப்போதும் ஆட்சி நடப்பதாகவும் உத்தவ் தாக்ரே குற்றம் சாட்டியுள்ளார். #ShivSena #BJP #UddhavThakre
சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த சுரேந்திர சிங், நாட்டில் நடக்கும் கற்பழிப்பு சம்பவங்களை ராமராலும் கூட தடுக்க முடியாது எனக்கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இது பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாக்கப்பட்டது.
இந்நிலையில், இதுதொடர்பாக சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் தலையங்கம் வெளியிடப்பட்டது. அதில், கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நாட்டில் பாஜக எவ்வாறு ராம ராஜ்ஜியம் அமைக்கும்? என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க நடவடிக்கைகளை எடுக்காமல், ராமராலும் கூட இதனை தடுக்க முடியாது என பாஜக கூறி வருவதாக விமர்சித்துள்ளது. இதையடுத்து, பாஜக எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரு நிலைப்பாடும், இப்போது மற்றொரு நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும் சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.
நாட்டில் ஆட்சி மாற்றம் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், பெண்கள் மீதான கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை சம்பவங்கள் மாறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கைமீறிப்போனதாகவும் சிவசேனா தெரிவித்துள்ளது.
இதுபோன்ற நிலையில் ராம ராஜ்ஜியம் எவ்வாறு அமைக்கப்படும்? அதற்கான திட்டங்கள் குறித்து பாஜக விளக்க வேண்டும் எனவும் சிவசேனா குறிப்பிட்டுள்ளது.
ராம ராஜ்ஜியம் அமைக்கப்படும் எனக்கூறி பாஜக அரசியல் செய்வதாகவும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன் பெயரை பயன்படுத்திக் கொள்ளுமாறு ராமர் கூறவில்லை எனவும் சாம்னா தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #ShivSena #BJP
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்