search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saba Karim"

    • டோனி, விராட் கோலி போன்று வேறு எந்த இந்திய கேப்டனும் செய்யாதை ரோகித்சர்மா செய்து காட்டியுள்ளார்.
    • ரோகித் சர்மா முதல் பந்தில் இருந்தே வெற்றிக்காக அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுகிறார்.

    புதுடெல்லி:

    கான்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டம் மழையால் சில மணி நேரங்களே நடந்தது. 2-வது மற்றும் 3-வது நாள் போட்டி மழையால் ரத்தானது. இதனால் இந்த டெஸ்ட் 'டிரா'வை நோக்கி செல்வது தெளிவாக தெரிந்தது.

    ஆனால் நேற்றைய 4-வது நாளில் இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 20 ஓவர் போட்டியை போல ஆடியது. கடைசி நாளில் முடிவு ஏற்பட்டு விட வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடியது.

    கேப்டன் ரோகித்சர்மா 2 சிக்சர்களுடன் 2-வது ஓவரில் அதிரடியை வெளிப்படுத்தினார். அவரும் ஜெய்ஷ்வாலும் 23 பந்தில் 55 ரன் தொடக்க விக்கெட்டும் எடுத்தனர். ரோகித் சர்மா 11 பந்தில் 3 சிக்சருடன் 23 ரன் எடுத்தார். ஜெய்ஷ்வால், கே.எல். ராகுல் ஆகியோரும் மிகவும் அதிரடியாக விளையாடினார்கள். டெஸ்ட் போட்டிக்கு உயிர் கொடுத்த இந்த அதிரடி ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது.

    ரோகித்சர்மாவின் இந்த அணுகுமுறையை முன்னாள் கிரிக்கெட் கீப்பரும், முன்னாள் தேர்வாளருமான சபாகரீம் பாராட்டி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டோனி, விராட் கோலி போன்று வேறு எந்த இந்திய கேப்டனும் செய்யாதை ரோகித்சர்மா செய்து காட்டியுள்ளார். அவரது அணுகுமுறை பாராட்டத்தக்கது. அவரது குணாதியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பையை தொடர்ந்து அவர் டெஸ்டிலும் தற்போது மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதை நாம் பார்க்கிறோம். இதுதான் ரோகித் சர்மாவின் தலைமையில் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியான விஷயமாகும்.

    கடந்த காலத்தில் இருந்த கேப்டன்கள் நல்ல நிலையில் இருக்கும்போது தான் வெற்றியை நோக்கி செல்வோம் என்ற மனநிலையை கொண்டிருந்தனர். முதல் 6 ஓவர்கள் நேரம் எடுத்து பின்னர் அதிரடி காட்டுவோம் என்ற அணுகு முறையை பின்பற்றினர். ஆனால் ரோகித் சர்மா முதல் பந்தில் இருந்தே வெற்றிக்காக அதிரடியாக விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுகிறார்.

    இவ்வாறு சபாகரீம் கூறியுள்ளார்.

    • ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் 3 அல்லது 4 வீரர்கள் பெரிய அளவில் எழுச்சி பெற வேண்டியது அவசியம்.
    • ஆசிய கோப்பையிலும் உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மா நின்று ஆடி கடைசி வரை நிற்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 17-ந் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து அக்டோபர் 5-ந் தேதி தொடங்கி நவம்பர் 19-ந் தேதி முடிகிறது. இதற்காக அனைத்து அணியினரும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய அணி 2013-ம் வருடம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபின் பல தொடர்களில் நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியுள்ளது.

    இந்நிலையில் ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வியடைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்தான் காரணம் என முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    டாப் ஆர்டர்தான் இந்திய அணியின் பெரிய பலம். ஆனால் நாம் எப்படி செயல்படப்போகிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கின்றது. நான் இதுவரை பார்த்த வரையில் பெரிய போட்டிகள், முக்கியமான போட்டிகளில், அல்லது ஐசிசி தொடர்களில் இந்தியாவின் டாப் ஆர்டர்தான் சொதப்புகின்றனர்.

    எனவே அதுதான் இந்திய அணி கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். எனவே வரவிருக்கும் ஆசியக்கோப்பையிலும் உலகக்கோப்பையிலும் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட வேண்டும். ரெகுலராக இவர்கள் நன்றாக ஸ்கோர் செய்ய வேண்டும். குறிப்பாக பெரிய போட்டிகளில் இவர்கள்தான் ஆட வேண்டும்.

    ஆகவே ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட டாப் 3 அல்லது 4 வீரர்கள் பெரிய அளவில் எழுச்சி பெற வேண்டியது அவசியம். இவர்களிடத்தில் ஏகப்பட்ட அனுபவம் உள்ளது. ஷுப்மன் கில்லை அனைத்து வடிவ வீரர் ஆக்கியுள்ளோம். அவர் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க இதுதான் சிறந்த வாய்ப்பு எனவே அவரும் கிடைத்த வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்த வேண்டும்.

    கில் மிக முக்கியமான வீரர். ஏனெனில் ரோகித் சர்மா தொடக்கத்தில் மெதுவாகவே ஆடுவார். பிறகுதான் விளாசத்தொடங்குவார். அந்தத் தருணங்களில் சுப்மன் கில்தான் ரன் ரேட்டைத் தக்கவைக்க வேண்டும். சில வேளைகளில் ரோகித் சர்மா தொடக்கத்திலிருந்தே அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுகிறார். இது ரிஸ்கான விஷயம்.

    ஆனால் ஆசிய கோப்பையிலும் உலகக்கோப்பையிலும் ரோகித் சர்மா நின்று ஆடி கடைசி வரை நிற்க வேண்டும் என்பதுதான் முக்கியம். ஆகவே ஷுப்மன் கில் மீது அதிக சுமை உள்ளது. அவர் ஆடும் விதம் பல எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே அவருக்கு இது முக்கியமான தொடர்களாகும்.

    இவ்வாறு சபா கரீம் கூறுகிறார். 

    • இளம் வீரர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும்.
    • ஆடுகளம் கொஞ்சம் சவால்கள் நிறைந்ததாக இருந்தால் நமது பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க திணறுகிறார்கள்.

    மும்பை:

    2022 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் ஏமாற்றம் கொடுக்கும் ஆண்டாகவே உள்ளது. இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து வெற்றியைப் பெற்றது. எனினும் டி20 உலக கோப்பையில் தோல்வியை தழுவி அரை இறுதியில் இருந்து இந்திய அணி வெளியேறியது. இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இதனால் இந்திய அணியை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும் என்று முன்னாள் தேர்வு குழு உறுப்பினரும் , கிரிக்கெட் வீரருமான சபா கரிம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் நமது கவனத்தை செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. முதலில் நமது ஒருநாள் மற்றும் டி20 அணியில் பிரச்சனை இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    அந்த பிரச்சனைகளை நீங்கள் சரி செய்தாலே போதும். இந்திய அணியின் வடிவத்தை ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் இதை பல நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்திய அணியில் பிரச்சனை இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால், அதனை எப்படி தீர்க்க முயற்சி செய்வீர்கள். நம்முடைய கேம் பிளானை மாற்ற வேண்டும். நாம் விளையாடும் கிரிக்கெட் ஸ்டைலையும் அடியோடு மாற்ற வேண்டும்.

    ஒரு நாள் கிரிக்கெட்டை அணுகும் முறையை நாம் ஒட்டுமொத்தமாக மாற்ற வேண்டும். அப்படி நீங்கள் மாற்றினால் அதற்கு தகுந்த மாதிரி வீரர்கள் உங்கள் அணியில் இருக்கிறார்களா? இல்லையா? என்பது குறித்து யோசிக்க வேண்டும். அப்படி வீரர்கள் இருந்தால் அவர்களுக்கு ஏற்ற சூழல் நிலவுகிறது என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும்.

    இளம் வீரர்களை சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும். நீ அதிரடியாக விளையாடு என்று சொன்னால் மட்டும் போதாது. ஆடுகளம் கொஞ்சம் சவால்கள் நிறைந்ததாக இருந்தால் நமது பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க திணறுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு பொறுப்பை கொடுத்து அவர்களுக்கு என்று ஒரு ஸ்டைலை உருவாக்க வேண்டும். அப்படி செய்தால் தான் உங்களால் அதிரடியாக விளையாட முடியும் என்று கூறினார்.

    இங்கிலாந்து அணியில் 2015 உலகக் கோப்பை படுதோல்விக்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர்கள் புதிய கண்ணோட்டத்தில் அணுகி தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.இதே போன்ற நிலையை இந்திய கிரிக்கெட்டிலும் கொண்டு வர வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் சீனியர்கள் நீக்கப்பட்டு அதிரடி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ×