என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sabarimala temple"

    • சபரிமலை வரும் பக்தர்களுக்கு உணவு பொருள்கள் விற்பனை செய்ய ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
    • சபரிமலை, பம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 175 கடைகளில் இந்த சோதனை நடைபெற்றது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

    இதற்காக கடந்த 16-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. 17-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இம்முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு இருமுடி கட்டி வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கேரள தேவசம் போர்டு செய்துள்ளது.

    சபரிமலை வரும் பக்தர்களுக்கு உணவு பொருள்கள் விற்பனை செய்ய ஏராளமான தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இவற்றில் விற்கப்படும் பொருட்களுக்கு மாவட்ட நிர்வாகம் விலை நிர்ணயம் செய்துள்ளது. அந்த விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர்.

    ஆனால் சபரிமலையில் மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று மாலை சபரிமலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.

    பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா? கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா? என்பது பற்றி அவர்கள் சோதனை நடத்தினர்.

    சபரிமலை, பம்பை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 175 கடைகளில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்ற 6 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

    மேலும் இதுபோன்று தொடர்ந்து விதிமீறல் நடந்தால் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • பம்பை ஆற்றில் குளித்தால் பக்தர்களின் பாவம் நீங்குவதாக ஐதீகம்.
    • பம்பையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

    மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 89 ஆயிரம் பக்தர்கள் சபரிமலை செல்ல முன்பதிவு செய்திருந்தனர்.

    இதில் 80 ஆயிரம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை சன்னிதானம் சென்ற பக்தர்கள் காலை 10 மணிக்குத்தான் சாமி தரிசனம் செய்தனர். இதன்மூலம் 18-ம் படி ஏற பக்தர்கள் சுமார் 8 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    இதுபோல நெய்யபிஷேகம் செய்வதற்கும், பிரசாதம் வாங்கவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பையில் புனித நீராடுவது வழக்கம். பம்பை ஆற்றில் குளித்தால் பக்தர்களின் பாவம் நீங்குவதாக ஐதீகம். இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் அனைவரும் பம்பையில் நீராடிவிட்டுதான் செல்வார்கள்.

    இவ்வாறு பம்பையில் குளிக்கும் பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் விட்டு செல்வது வழக்கம். இதனால் ஆறு மாசடைந்து வந்தது. எனவே பக்தர்கள் ஆற்றில் ஆடைகளை வீசி எறிவது தற்போது தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் சபரிமலையில் குளிக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி பம்பையில் பக்தர்கள் குளிக்கும் பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாயில்கள் வழியாக மட்டும் தான் பக்தர்கள் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டும்.

    ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தால் இந்த பாதைகள் அடைக்கப்படும். மேலும் இந்த பகுதியில்தான் பக்தர்கள் குளிக்க வேண்டும் எனவும் இங்கு தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு உள்ளது.

    சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தற்போது ஐயப்பன் கோவில் வருவாயும் அதிகரித்து வருகிறது.

    10 நாட்களில் கோவில் வருவாய் சுமார் 52.55 கோடியாக இருந்தது. இதுபோல கேரள போக்குவரத்து கழகமும் கடந்த 10 நாட்களில் மட்டும் 4 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.
    • டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் சில நாட்களில் சபரிமலை தரிசனத்திற்கு ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன் பதிவு செய்து உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    இன்று (செவ்வாய்க்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவும் சபரிமலை போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. கமாண்டோ படையினர் துப்பாக்கி ஏந்தி கோவிலை சுற்றி கண்காணிப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு உள்ளனர்.

    சபரிமலை ஐயப்பன் கோவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சபரிமலை மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட்டு பி.விஷ்ணு ராஜ் ஆய்வு செய்தார். அவர் சன்னிதானம், பம்பை மற்றும் மரக்கூட்டம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

    அவரின் உத்தரவின் பேரில் சன்னிதானம் பாதுகாப்பு சிறப்பு அதிகாரி ஹரீந்திரநாயிக் தலைமையில் கமாண்டோ படை, கேரள போலீஸ், அதி விரைவு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, வனம் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய படையினர் சன்னிதானம் நடை பந்தல் முதல் மரக்கூட்டம் வரை அணிவகுப்பு நடத்தினர்.

    அதே சமயம் சபரிமலைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.

    பம்பை கணபதி கோவில் முதல் சன்னிதானம் வரை பல்வேறு இடங்களில் வெடிகுண்டை கண்டறியும் (மெட்டல் டிடெக்டர்) கருவி அமைத்து பக்தர்கள் சோதனை நடத்தப்பட்டு, சன்னிதானத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். சந்தேகப்படும் படியாக செல்வோரை கண்காணிக்க பம்பை முதல் சன்னிதானம் வரை கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதே போல் வான் வழியாக கண்காணிக்க இந்த ஆண்டு பறக்கும் கண்காணிப்பு கேமரா ஈடுபடுத்தப்படுகிறது.

    இதேபோல் வனத்துறை சார்பிலும் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்தும் சோதனை நடந்து வருகிறது.

    சபரிமலை சீசன் காலங்களில் வழக்கமாக வார நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாகவும் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. நடப்பு சீசனையொட்டி நேற்று அதிகபட்சமாக 89 ஆயிரத்து 737 பக்தர்கள் முன்பதிவு செய்து இருந்தனர்.

    டிசம்பர் மாதம் 2-வது வாரத்தில் சில நாட்களில் சபரிமலை தரிசனத்திற்கு ஒரே நாளில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன் பதிவு செய்து உள்ளனர்.

    • சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சம முக்கியத்துவம் வழங்க வேண்டும். கோவிலில் அனைவரும் ஒன்றே.
    • சபரிமலை கோவிலுக்கு இம்முறை மலைபாதையும் திறந்து விடப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது.

    மண்டல பூஜை விழாவுக்காக கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு வந்தனர்.

    அன்று முதல் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர். விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

    இதற்கிடையே சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் அறிவித்தது. இதனை கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை செய்தது.

    மேலும் அந்த தனியார் நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    இந்த வழக்கு விசாரணையின்போது கேரள ஐகோர்ட்டு, திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு மேலும் சில உத்தரவுகளை பிறப்பித்தது.

    அதில் சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சம முக்கியத்துவம் வழங்க வேண்டும். கோவிலில் அனைவரும் ஒன்றே. எனவே இக்கோவிலில் வி.ஐ.பி. தரிசன முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவித்தது.

    சபரிமலை கோவிலுக்கு இம்முறை மலைபாதையும் திறந்து விடப்பட்டுள்ளது. எரிமேலி, வண்டிபெரியார் மற்றும் சத்திரம் வழியாக பக்தர்கள் சன்னிதானம் செல்கிறார்கள். நேற்று வரை இந்த பாதை வழியாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த எண்ணிக்கை இனிவரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் இதற்காக பக்தர்களுக்கு இந்த பாதையில் கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தேங்காய்கள் அனைத்தும் கோவில் அருகே உள்ள ஒரு ஷெட்டில் வைக்கப்பட்டிருக்கும்.
    • ஷெட் அருகே இன்னொரு ஷெட்டும் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் இந்த ஷெட் தீயில் இருந்து தப்பியது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி செல்வார்கள். மேலும் கோவிலில் நெய் தேங்காய் அபிஷேகமும் செய்வார்கள்.

    இந்த தேங்காய்கள் அனைத்தும் கோவில் அருகே உள்ள ஒரு ஷெட்டில் வைக்கப்பட்டிருக்கும். பின்னர் அதனை ஒப்பந்தம் எடுத்தவர் அங்கிருந்து எடுத்து செல்வார்.

    இந்த ஷெட் நேற்றிரவு 11.45 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட பக்தர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த ஷெட் அருகே இன்னொரு ஷெட்டும் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் இந்த ஷெட் தீயில் இருந்து தப்பியது.

    இதையடுத்து சபரிமலையில் கூடுதல் கண்காணிப்பை ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

    • சபரிமலை செல்லும் அனைத்து பக்தர்களும் கோவிலில் தரிசனம் செய்ய உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
    • சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்யாமல் செல்லும் நிலை ஏற்படக்கூடாது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேரள ஐகோர்ட்டு தேவசம்போர்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருந்தனர்.

    அப்போது சபரிமலை செல்லும் அனைத்து பக்தர்களும் கோவிலில் தரிசனம் செய்ய உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறியிருந்தது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரிசனம் செய்யாமல் செல்லும் நிலை ஏற்படக்கூடாது எனவும் அறிவுறுத்தி இருந்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கோவில் வருவாயும் அதிகரித்து உள்ளது.
    • கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்ய அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

    இவ்விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வருகிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தே வரவேண்டும் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. அதன்படி தினமும் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்தனர்.

    இதையடுத்து பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தினமும் 90 ஆயிரம் பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க தேவசம்போர்டு அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும் கோவில் தரிசன நேரமும் அதிகரிக்கப்பட்டது. பக்தர்கள் 19 மணி நேரம் 18-ம் படி ஏறவும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்யவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதற்காக பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வரை அவர்களை குழுக்களாக அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

    பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கோவில் வருவாயும் அதிகரித்து உள்ளது. அதன்படி கோவில் நடை திறந்த நாள் முதல் நேற்று முன்தினம் வரை கோவிலின் வருவாய் ரூ.150 கோடியை தாண்டியுள்ளது.

    இதில் அப்பம், அரவணை மூலமும் கோவிலுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. மண்டல பூஜைக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில் கோவில் வருவாய் இன்னும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சபரிமலை கோவிலுக்கு வரும் முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் தனி வரிசை ஏற்படுத்தவும் கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
    • சபரிமலைக்கு வரும் வெளிமாநில பக்தர்களின் வாகனங்களாலும் பம்பையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

    இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தினமும் சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள்.

    அவர்களை நெரிசலின்றி 18-ம் படி ஏற பாதுகாப்பு போலீசாரும், கோவில் ஊழியர்களும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். என்றாலும் சன்னிதானம் சென்று பக்தர்கள் 18-ம் படி ஏற பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.

    இதையடுத்து கோவிலுக்கு வரும் முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்கும், குழந்தைகளுக்கும் தனி வரிசை ஏற்படுத்தவும் கோவில் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    மேலும் கூட்ட நெரிசல் உள்ள நாட்களில் 18-ம் படியில் ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்களை ஏற்றி விடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சபரிமலைக்கு வரும் வெளிமாநில பக்தர்களின் வாகனங்களாலும் பம்பையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களும், தரிசனம் முடிந்து ஊர் திரும்பும் பக்தர்களும் அவர்களின் வாகனங்களை எடுத்து செல்ல முடியாத அளவுக்கு அங்கு நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

    இதனை சீர்படுத்தவும், போக்குவரத்து நெருக்கடியை போக்க பார்க்கிங் வசதியை அதிகப்படுத்த வேண்டும் எனவும் வெளிமாநில பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து வெளிமாநில பக்தர்களின் வாகனங்களை நிறுத்த சபரிமலை வனபகுதியில் கூடுதல் இடவசதி செய்து கொடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    இதற்காக வனத்துறையுடன் பேசி பார்க்கிங் பகுதிகளை கண்டறிந்து அங்கு பக்தர்களின் வாகனங்களை நிறுத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். மேலும் இந்த பணிகளை உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • சபரிமலையில் இன்று மத்திய ரிசர்வ் பட்டாலியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    • நாளை தரிசனம் செய்ய 1 லட்சத்து 4 ஆயிரத்து 945 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் தனி வரிசை செயல்பாடு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால், சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.

    ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தே வருகிறது. விடுமுறை நாட்களில் இந்தக் கூட்டம் மேலும் அதிகமாகிறது. தினமும் சராசரியாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் பெற்று வருகின்றனர்.

    இதனால் சபரிமலையில் பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தரிசன நேரத்தை திருவதாங்கூர் தேவசம் போர்டு அதிகரித்தது. ஒரு நாளில் 19 மணி நேரம் நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்கு தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இருப்பினும் காத்திருப்பு நேரம் குறைந்தபாடில்லை. சில நேரங்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மயக்கம் அடையும் நிலையும் உருவானது. இதுபற்றி தெரியவந்ததும், அவர்களுக்கு தரிசனத்தில் சிறப்பு சலுகை அளிக்க தேவசம்போர்டுக்கு, கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த 3 அமைச்சர்கள் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து தனி வரிசை ஏற்படுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கேரள போலீஸ் டி.ஜி.பி. அனில்காந்த் சபரிமலை வந்து ஆய்வு செய்தார். அப்போது அவர் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பக்தர்களின் பாதுகாப்புக்காக சபரிமலையில் மத்திய ரிசர்வ் பட்டாலியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.

    அதன்படி இன்று சபரிமலையில் மத்திய ரிசர்வ் பட்டாலியன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நாளை (19-ந் தேதி)முதல் குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கான சிறப்பு தனி வரிசை செயல்படும் என தேவசம்போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை தரிசனம் செய்ய 1 லட்சத்து 4 ஆயிரத்து 945 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் தனி வரிசை செயல்பாடு பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மரக்கூட்டம் வரை நெரிசல் நீடித்தால் குழந்தைகள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வரிசையில் இருந்து நகர்ந்து, சந்திரானந்தன் சாலை வழியாக நடை பந்தலுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அங்கிருந்து 1-வது அல்லது 9-வது வரிசை வழியாக 18-ம் படிக்கு கீழே உள்ள திருமுட்டத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    குழுவாக வரும் பக்தர்களில் சிறப்பு வரிசை தேவைப்படுவோர், வரிசையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டு தரிசனம் முடிந்ததும் சந்நிதானத்தில் சக பக்தர்களுக்காக காத்திருக்க வேண்டும். அவர்களுக்கு குடிநீர் மற்றும் சிற்றுண்டி வழங்க ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து உள்ளது.

    • மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக, கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது.
    • 18-ம் படியில் இந்தியன் பட்டாலியன் படை வீரர்கள் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது.

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக, கடந்த மாதம் 16-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அன்று முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    சில நாட்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனத்திற்கு முன் பதிவு செய்திருந்தனர். இதனால் சபரிமலையில் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு தரிசன நேரத்தை அதிகரித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு உத்தரவிட்டது. ஆனாலும் சராசரியாக நாளொன்றுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

    தற்போது சபரிமலையில் 19 மணி நேரம் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும் சரம்குத்தியில் இருந்து பக்தர்கள் காத்திருப்பு நிலை தொடர்ந்தே வந்தது. இதனை தொடர்ந்து ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பேரை மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

    மேலும் கூட்ட நெரிசலில் பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கென தனி வரிசை ஏற்படுத்தவும் கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று முதல் சபரிமலையில் தனிவரிசை முறை அமல்படுத்தப்பட்டது. நேற்று தரிசனத்திற்கு 1 லட்சத்து 4 ஆயிரத்து 478 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இருப்பினும் தனிவரிசை அமல்படுத்தப்பட்டு இருந்ததால் பக்தர்கள் காத்திருப்பு நேரம் குறைந்தது. சரம்குத்தி பகுதியில் இருந்து முன்பு பக்தர்கள் காத்திருப்பது 6 மணி நேரமாக இருந்த நிலை மாறி தற்போது 2 மணி நேரத்தில் தரிசனம் பெற்றனர்.

    மேலும் 18-ம் படியில் இந்தியன் பட்டாலியன் படை வீரர்கள் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் ஒரு நிமிடத்திற்கு 70 பக்தர்களை படியேற்றியதும் காத்திருப்பு நேரம் குறைவுக்கு மற்றொரு காரணமாகும்.

    இதற்கிடையில் தற்போது உடனடி முன்பதிவை ரத்து செய்தும் தேவசம்போர்டு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் இனி ஆன்லைன் முன்பதிவு மட்டுமே என்பதால் காத்திருப்பு நேரம் மேலும் குறைய வாய்ப்புள்ளது.

    • கடந்த 38 நாட்களில் 26 லட்சத்து 476 பக்தர்கள் தரிசனம் பெற்றுள்ளனர்.
    • மண்டல பூஜையை முன்னிட்டு நாளை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை வழிபாடு நடக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது.

    இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் அதிக அளவில் வரத் தொடங்கினர். ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என்ற நிலையிலும் பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்கவே செய்தது.

    இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் நிலவியது. இதனை தொடர்ந்து தரிசன நேரத்தை அதிகரித்து தேவசம்போர்டு உத்தரவிட்டது. ஆனாலும் காத்திருப்பு தொடரவே செய்தது. இதனை தொடர்ந்து குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்த கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த முறை அமல்படுத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய முடிந்தது. காத்திருப்பு நேரமும் குறைந்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர். கடந்த 38 நாட்களில் 26 லட்சத்து 476 பக்தர்கள் தரிசனம் பெற்றுள்ளனர்.

    முக்கிய திருவிழாவான மண்டல பூஜை, நாளை மறுநாள் (27-ந் தேதி) நடைபெற உள்ளது. அன்றைய தினம் தரிசனத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மண்டல பூஜையை முன்னிட்டு நாளை (26-ந் தேதி) ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை வழிபாடு நடக்கிறது. இதனை காண பக்தர்கள் இன்றே சபரிமலையில் குவிந்து வருகிறார்கள்.

    • சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
    • நான் மனதார ஐயப்பனை வேண்டிக்கொண்டால், சமீரா டீச்சருக்கு ஐயப்பன் அருள் புரிவார் என்று உறுதியாக நம்புகிறேன்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.

    பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மட்டுமின்றி மாற்றுத்திறனாளி பக்தர்களும் வந்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இதில் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர், தனது வாழ்க்கைக்கு உதவிய இஸ்லாமிய ஆசிரியைக்காக சபரிமலை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அவரது பெயர் கண்ணன் (வயது 49). தொழிலாளியான இவர் கடந்த 2013-ம் ஆண்டு லாரியில் இருந்து மரக்கட்டைகளை இறக்கும்போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இடது காலை அவர் இழந்தார். மனைவி மற்றும் 3 குழந்தைகளின் வாழ்வுக்காக அவர் லாட்டரி சீட்டு விற்கும் தொழிலில் ஈடுபட்டார்.

    அவரது நிலை கண்டு கொண்டோட்டி அரசு கலைக்கல்லூரி பேராசிரியை சமீரா, உதவிக்கரம் நீட்டி உள்ளார். கண்ணன் வீடு கட்டவும் அவர் உதவி புரிந்துள்ளார். இஸ்லாமியரான அவர் நலம் பெற வேண்டி, சபரிமலைக்கு சக்கர நாற்காலியில் செல்ல கண்ணன் திட்டமிட்டு பயணத்தை தொடங்கி உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    என்னுடைய வாழ்க்கையை மாற்றியவர் சமீரா ஆசிரியர். எனக்கும் என் குடும்பத்துக்கும் அவர் கடவுள் போன்றவர். அவரின் நலனுக்காக நான், கடந்த 15-ந் தேதி தடம்பரப்பா கிராமத்தில் இருந்து சபரிமலை பயணத்தை தொடங்கினேன். தினமும் காலை 6 மணிக்கு சக்கர நாற்காலியில் பயணத்தை தொடங்கி விடுவேன்.

    மதியம் சபரிமலை யாத்ரீகர்கள் தங்கும் கோவில்கள் அல்லது அன்னதான கவுண்டர்களில் உணவருந்தி விட்டு ஓய்வெடுப்பேன். தொடர்ந்து மாலை 6 மணிக்கு பயணத்தை தொடரும் நான், இரவு 11 மணி வரை பயணம் செய்கிறேன். சமீரா டீச்சருக்காகவே இந்த பயணம். நான் மனதார ஐயப்பனை வேண்டிக்கொண்டால், அவருக்கு அருள் புரிவார் என்று உறுதியாக நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×