என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "sabharimalai"
- பம்பை நதியில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு 6000க்கும் மேல் கடந்துள்ளது.
- கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் நிறைந்த தண்ணீரில் குளித்தால் டைபாய்டு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கவும், பெருவழிப்பாதை வழியாக சன்னிதானம் செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.
சபரிமலை வரும் பக்தர்கள் அங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். அதன்படி, பல்வேறு இடங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் பம்பை ஆற்றில் அனைத்து பகுதிகளிலும் புனித நீராடி வருகின்றனர். இதுபோல அங்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்தும் வருகின்றனர்.
இந்நிலையில், பம்பை நதியில் கோலிஃபார்ம் என்கிற பாக்டீரியாக்கள் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது பம்பை நதியில் வாரத்திற்கு ஒரு முறை கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் மொத்த கோலிஃபார்ம் மற்றும் பீக்கல் கோலிஃபார்ம் அளவு பரிசோதிக்கப்படுகிறது.
இதில் கோலிஃபார்ம் என்பது மொத்த பாக்டீரியாக்களின் தொகுப்பாகும். மொத்த கோலிஃபார்மின் அளவு 500க்கு மேல் இருந்தால் குளிக்க உபயோகிக்க முடியாது. ஆனால், பம்பை நதியில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு 6000க்கும் மேல் கடந்துள்ளது.
இதற்கு, பம்பை நதியில் குளிப்பதும் அவர்களது ஆடைகளை ஆற்றிலேயே விட்டு செல்வதும் பாக்டீரியாக்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் நிறைந்த தண்ணீரில் குளித்தால் டைபாய்டு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், பாக்டீரியாக்களை கட்டுப்படுத்த குள்ளார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
- 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
- சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தியது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.
பின்னர், உத்தரவுக்கு எதிர்ப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளதாகவும், இதையடுத்து, சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சபரிமலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் அறிவுறுத்தல் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
தவறாக அச்சிடப்பட்டு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், வழிகாட்டு நெறிமுறை புத்தகம் அனைத்தும் திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 வயதுக்கு கீழும், 50 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
- சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன.
உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.
பின்னர், உத்தரவுக்கு எதிர்ப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை அமல்படுத்தப்படாமல் இருந்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என போலீசாருக்கு கேரள அரசு அறிவுறுத்தி உள்ளது.