என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sacked"

    • தமிழிசை கூறும்போது சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுவிட்டார் என்றார்.
    • கடற்கரை சாலையில் உள்ள வீட்டுக்கு பாதுகாப்பு இன்னும் தொடர்கிறது.

    புதுச்சேரி:

    காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா, தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் மாளிகைக்கும், முதலமைச்சர் அலுவலகத்துக்கும் தனித் தனியாக அனுப்பியிருந்தார்.

    கவர்னரும் கடிதத்தை ஏற்று மத்திய அரசுக்கு அனுப்பியதாக தகவல்கள் வெளியானது. ஆண் ஆதிக்கம், பாலின தாக்குதல் என கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறும்போது அமைச்சர் சந்திரபிரியங்கா நீக்கம் செய்யப்பட்டது முதல்வரின் தனிப்பட்ட முடிவு. நிர்வாக காரணங்களுக்காக எடுத்துள்ளார். அமைச்சராக இருந்தபோது, சந்திர பிரியங்கா சிறப்பாக செயல்படவில்லை என கருதி முதலமைச்சர் நீக்கியுள்ளார்.

    இதையடுத்து சந்திரா பிரியங்கா, ராஜினாமா செய்வதற்கு முன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் பொதுமக்களுக்கு தெரியவந்தது.

    இதற்கிடையில் சென்னையில் கவர்னர் தமிழிசை கூறும்போது சந்திர பிரியங்கா ராஜினாமா செய்வதற்கு முன்பே ரங்கசாமியின் பரிந்துரையின் பேரில் நீக்கப்பட்டுவிட்டார், என்றார். இது குறித்து முன்னாள் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில்:-

    சந்திரபிரியங்காவின் பதவியை டிஸ்மிஸ் செய்ய கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் கவர்னர் தமிழிசை உள்துறைக்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்து அவரது பதவியை பறித்து கடிதமும் வந்துவிட்டது.

    ஆனால் அதற்கான அரசாணை இன்னும் வெளியிடாமல் நாடகம் ஆடுகின்றனர். தலித் பெண் அமைச்சர் பதவியை பறித்ததால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வெளியிடாமல் உள்ளனர்.

    விரைவில் அவரது பதவி பறிக்கப்பட்டதாக அரசாணை வெளியிடுவார்கள், என்றார்.

    தற்போது தெலுங்கானாவில் கவர்னர் தமிழிசை உள்ளதால் அவர் புதுச்சேரி வரும்போது, சந்திரா பிரியங்கா ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதா? அல்லது முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின் பேரில் அவரது பதவி பறிக்கப்பட்டதா என்ற முழு விவரம் தெரியவரும்.

    சட்டசபையில் உள்ள அமைச்சர் அலுவலகத்தில் அவரது பெயர் பலகை மாற்றப்படவில்லை. புதுவை கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அரசு வீடும், கார்களும் ஒப்படைக்கப்படவில்லை. அந்த வீட்டுக்கு போலீசாரின் பாதுகாப்பும் தொடர்கிறது.

    அரசின் முறையான நடவடிக்கை எதுவும் தெரியவில்லை. சந்திரபிரியங்கா ராஜினாமா செய்தாரா? அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாரா? என்ற குழப்பம் பொதுமக்களிடையே எழும்பியுள்ளது.

    மக்களை குழப்பம் செய்யாமல் முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

    • மருத்துவர்களில் பலர், சரியாக பணிக்கு வராமல் தொடர்ந்து விடுப்பில் இருந்து வருகின்றனர்.
    • பணி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர்கள் பல ஆண்டுகளாக பணிக்கு வராமல் இருந்ததுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களில் பலர், சரியாக பணிக்கு வராமல் தொடர்ந்து விடுப்பில் இருந்து வருகின்றனர்.

    இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் பணிக்கு வராமல் இருப்பதற்காக விளக்கத்தை தெரிவிக்குமாறு சம்பந்தப் பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் பதிலளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் உரிய அனுமதி பெறாமல் பணிக்கு வராமல் இருந்த 36 அரசு டாக்டர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 33 டாக்டர்களை சுகாதாரப்பணிகள் இயக்குனரும், 3 டாக்டர்களை மருத்துவக் கல்வி இயக்குனரும் பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    பணி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக பணிக்கு வராமல் இருந்தது மட்டுமின்றி, துறை ரீதியாக கேட்கப்பட்ட விளக்கத்திற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் அவர்கள் மீது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இவர்கள் தனியார் துறைகளில வேலை கிடைத்து சென்றிருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அவர்கள் அது தொடர்பாக எந்த தகவலும் கொடுக்காமல் இருக்கிறார்கள். துறை வெளியிட்ட காரண நோட்டீசுக்கு பதிலளிக்காத மேலும் 17 டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

    இதேபோன்று மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் டாக்டர்கள் உள்பட 337 பேர் அனுமதியின்றி பணிக்கு வராமல் இருக்கின்றனர். அவர்களில் 291 பேருக்கு பணிக்கு வராமல் இருப்பதற்காக காரணத்தை கேட்டு நோட்டிசு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தென்கொரியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வை சரிசெய்யாத காரணத்தால் நிதி மந்திரி மற்றும் நிதி கொள்கை செயலாளர் ஆகியோரை அதிபர் மூன் ஜே பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். #SouthKorea #MoonJae
    சியோல்:

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதனால் தென் கொரியாவின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் உள்ளது.

    இதையடுத்து, தென் கொரியாவின் பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. அந்நாடு பொருளாதார ஏற்றத்தாழ்வை சந்தித்து வருகிறது.



    இந்நிலையில், பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலையை சரிசெய்யாத காரணத்தால் தென் கொரியா நிதி மந்திரி கிம் டாங் யென் மற்றும் நிதி கொள்கை செயலாளர் ஜங் ஹா சங் ஆகியோரை அதிபர் மூன் ஜே பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் என அதிபரின் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #SouthKorea #MoonJae
    ×