என் மலர்
நீங்கள் தேடியது "Sadananda Gowda"
- காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள்.
- பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான்.
பெங்களூரு:
பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா எம்.பி. சதானந்தகவுடா. முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் முதல்-மந்திரியுமான இவருக்கு 71 வயதாகிறது. வயது மூப்பு உள்ளிட்ட காரணங்களால் சதானந்தகவுடாவிடம் இருந்து மத்திய மந்திரி பதவி பறிக்கப்பட்டு இருந்தது. மேலும் பாராளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா சார்பில் மீண்டும் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார்.ஆனால் அவருக்கு பதிலாக பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி ஷோபா அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இதன் காரணமாக சதானந்தகவுடா பா.ஜனதா தலைமை மீது அதிருப்தியில் உள்ளார். அவரை காங்கிரசுக்கு இழுத்து, பெங்களூரு வடக்கு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைவர்களும் முடிவு செய்தார்கள். இதுபற்றி சதானந்தகவுடாவுடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவும் சதானந்தகவுடா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று சதானந்தகவுடாவுக்கு பிறந்தநாள் ஆகும். இதையடுத்து பெங்களூரு வடக்கு தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஷோபா மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் சதானந்தகவுடாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். பின்னர் சதானந்தகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-
என்னுடைய அரசியல் எதிர்காலம், நிலைபாடு என்ன? என்பது குறித்து கூற நாளை (அதாவது இன்று) டாலர்ஸ் காலனியில் உள்ள எனது வீட்டில் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளேன். அங்கு எனது அரசியல் நிலைபாடு பற்றி தெரிவிப்பேன். பா.ஜனதாவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் சேரும்படி எனக்கு, அக்கட்சியின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருப்பது உண்மை தான். அதுபற்றி எனது குடும்பத்தினருடன் ஆலோசிக்க வேண்டியது உள்ளது. நான் எப்போதும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவையும் எடுப்பதில்லை. அதனால் குடும்பத்தினருடன் கலந்து பேசி, எனது அரசியல் எதிர்காலம் குறித்து தெரிவிப்பேன். எங்கள் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் என்னை சந்தித்து பேசினார்.
அவர் என்ன சொன்னார் என்பதை இப்போது பகிரங்கப்படுத்த முடியாது. எனது மனதில் இருக்கும் அனைத்து விஷயங்கள் குறித்தும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது தெரிவிக்கிறேன். ஈசுவரப்பா தனது மகனுக்கு சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள் பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்கு முடிவு செய்திருந்தோம். அதற்குள் சுயேச்சையாக போட்டியிடுவதாக ஈசுவரப்பா தெரிவித்துள்ளார். இது அவரது தனிப்பட்ட முடிவாகும். சுயேச்சையாக போட்டியிடுவது பற்றி எங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி சதானந்தகவுடா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆயினும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. இந்த நிலையில் மந்திரி என்.மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்த கூட்டணி ஆட்சி தானாகவே கவிழ்ந்துவிடும் என்று நாங்கள் கூறி வருகிறோம். அது கண்டிப்பாக நடக்கும். இந்த ஆட்சியை கவிழ்க்க நாங்கள் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை.
ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள கட்சி பா.ஜனதா. அதன் அடிப்படையில் எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்க பா.ஜனதா தொடர்ந்து முயற்சி செய்யும். ஆபரேஷன் தாமரை மூலம் மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதா இழுப்பதாக கூறுவது தவறு. பா.ஜனதா அத்தகைய முயற்சிைய மேற்கொள்ளவில்லை.
இவ்வாறு சதானந்தகவுடா கூறினார். #SadanandaGowda
மத்திய மந்திரி சதானந்த கவுடா மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கிடையாது. அவர்களாகவே உருவாக்கிய ஆட்சி. மக்கள் பா.ஜனதாவை ஆதரித்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக மக்கள் விரும்பாத கூட்டணி ஆட்சி அமைந்துவிட்டது. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துள்ளனர். காங்கிரஸ் கட்சி மேலிடம் கூறியதால், அதற்கு அடிபணிந்து சித்தராமையா, கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டார்.
ஆனால் குமாரசாமி முதல்மந்திரியாக இருப்பதை சித்தராமையா விரும்பவில்லை. கூட்டணி ஆட்சியை சித்தராமையா கவிழ்க்க முயன்றது அனைவருக்கும் தெரியும். தற்போது சித்தராமையா, தான் மீண்டும் முதல்மந்திரி ஆவேன் என்று கூறியுள்ளதன் மூலம் அது நிரூபணமாகி உள்ளது. இன்னும் ஒரு மாதம் அல்லது 15 நாட்களில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்துவிடும். கூட்டணி ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டாம். அது தானாகவே கவிழ்ந்துவிடும்.
ரபேல் விமான கொள்முதல் விஷயத்தில் எந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இந்த விஷயத்தில் தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்கள். ராகுல்காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது. அவர் எந்தவித ஆதாரமும் இன்றி மோடி மீது குற்றம்சாட்டி வருகிறார். இது சரியல்ல.
கர்நாடகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக குடகு, தட்சிண கன்னடா மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பாக்கு மரங்கள், காபி தோட்டங்கள், மிளகு செடிகள் நாசமாகி உள்ளன. அந்த தோட்டங்களின் உரிமையாளர்கள் கூலி வேலைக்கு செல்லும் அவலநிலை உள்ளது. இதற்கு முன்பு நான் முதல்மந்திரியாக இருந்தபோது, பாக்கு மரங்களை நோய் தாக்கியதால் ஏராளமான விவசாயிகள் நஷ்டமடைந்தனர். அவர்களுக்கு நான் தக்க நிவாரணம் வழங்கினேன்.
அதேபோல, தற்போது உள்ள அரசும், இந்த விவசாயிகளுக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க கூடுதல் நிவாரணம் வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்தால், அதனை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #sadanandagowda #kumaraswamy