என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "saif alikhan"

    • பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சையிப் அலிகான்.
    • இவர் புகைப்படக்காரர்களை கோபமாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சையிப் அலிகான். இவர் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சையிப் அலிகானும் கரீனா கபூரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்து இருவரும் காரில் வீட்டுக்கு திரும்பினார்கள்.


    சையிப் அலிகான் - கரீனா கபூர்

    அப்போது வீட்டின் எதிரே சில புகைப்படக்காரர்கள் காத்து நின்றனர். சையிப் அலிகான் மனைவியுடன் வந்ததும் இருவரையும் புகைப்படம், எடுக்க அவர்கள் முண்டியடித்தனர். அதோடு அவர்களை பின் தொடர்ந்து கேட்டை தாண்டி அத்துமீறி வீட்டின் கட்டிட வளாகத்துக்குள் சென்றுவிட்டனர். இதனால் கோபமான சையிப் அலிகான் ஒன்று செய்கிறீர்களா. அப்படியே எங்கள் படுக்கை அறைக்கே வந்து விடுங்கள் என்று கோபமாக கூறியுள்ளார்.


    சையிப் அலிகான் - கரீனா கபூர்

    உடனே புகைப்படக்காரர்கள் பின்வாங்கினர். பின்னர் புகைப்படக்காரர்கள் பார்த்து கோபமாக கையை அசைத்தபடி வீட்டுக்குள் சென்றார். சயீப் அலிகான் கோபப்பட்டு பேசும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகிறது. சமீபத்தில் இந்தி நடிகை அலியாபட் வீட்டுக்குள் அறையில் இருந்ததை எதிர்வீட்டு மாடியில் நின்று சிலர் புகைப்படம் எடுத்தது சர்ச்சையானது.

    • தேவரா திரைப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார்.

    நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்  இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.

    இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது.

    தொடர்ந்து, இப்படத்தில் இரண்டாவது பாடலான 'சுத்தமல்லி' வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்பாடலை காவாலா பாடலை பாடிய சில்பா ராவ் பாடியுள்ளார்.

    இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தேவராவின் படத்தின் படப்படிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சயிஃப் அலிகான் கதாப்பாத்திரத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.

    கிலிம்ப்ஸ் வீடியோவில் மல்யுத்த சண்டை வீரராக காட்சியளிக்கிறார். இப்படத்தில் பைரா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பட்னாவிஸ் தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலத்தின் பாந்த்ராவில் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் வசித்து வருகிறார். நேற்று அதிகாலை இவரது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், அங்கிருந்த பணிப்பெண்ணுடன் வாக்குவாதம் செய்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த சைஃப் அலிகானை அந்த நபர் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடினார்.

    படுகாயம் அடைந்த சைஃப் அலிகான் லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர். இதற்கிடையே, குற்றவாளியின் சிசிடிவி புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர்.

    சைஃப் அலிகான் மீதான கத்திக்குத்து தாக்குதலுக்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருவது பற்றி மாநில அரசை கடுமையாக சாடினர்.

    இந்நிலையில், கத்திக்குத்து சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். மும்பையை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது சரியல்ல என தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

    மும்பை நாட்டின் மிகவும் பாதுகாப்பான மெகா நகரம். இந்த சம்பவம் தீவிரமானது மற்றும் துரதிர்ஷ்டவசமானது.

    ஆனால் நகரத்தை பாதுகாப்பற்றது என முத்திரை குத்துவது தவறு. இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் போலீசார் வழங்கி உள்ளனர்.

    இது என்ன வகையான தாக்குதல், உண்மையில் இதற்குப் பின்னால் என்ன இருக்கிறது, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் என்ன என்பது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

    கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    ×