என் மலர்
நீங்கள் தேடியது "Sajid Khan"
- பாகிஸ்தான் செய்தி சேனலுக்கு பாகிஸ்தான் வீரர் சஜித் கான் பேட்டி அளித்தார்.
- 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
கிரிக்கெட் வீரர் ஆகவில்லை என்றால் தான் ஒரு கேங்ஸ்டராக ஆகியிருப்பேன் என்று பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சஜித் கான் தெரிவித்துள்ளார்.
நீங்கள் கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் என்னவாக இருந்திருப்பீர்கள் என்று பாகிஸ்தான் செய்தி சேனலில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சஜித் கான் 59 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பென் டக்கெட் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
- பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
முல்தான்:
பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி முல்தானில் நேற்று தொடங்கி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 259 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து இன்று 2-வது நாளில் விளையாடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்சில் 366 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக கம்ரான் குலாம் 118 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேக் க்ராவ்லி மற்றும் பென் டக்கெட் களம் இறங்கினர். இதில் க்ராவ்லி 27 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த போப் 29, ரூட் 34 என ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டக்கெட் சதம் அடித்த நிலையில் 114 ரன்னில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய ஹாரி புரூக் 9 ரன், பென் ஸ்டோக்ஸ் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து தனது 53 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் எடுத்துள்ளது. ஜேமி ஸ்மித் 12 ரன், பிரைடன் கார்ஸ் 2 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பில் சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இங்கிலாந்து அணி இன்னும் 127 ரன்கள் பின்னிலையில் உள்ளது.
- டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 267 ரன்களில் ஆல் அவுட்டானது.
- பாகிஸ்தான் சார்பில் சஜீத் கான் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
ராவல்பிண்டி:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து சாதனை படைத்ததுடன் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்டில் சுழல் ஜாலத்தால் மிரட்டிய பாகிஸ்தான் 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரை 1-1 என சமனில் கொண்டு வந்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் களமிறங்கியது. பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன்கள் திணறினர்.
பென் டக்கெட் 52 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஜேமி சுமித் 89 ரன்கள் எடுத்தார். கஸ் அட்கின்சன் 39 ரன்கள் அடித்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 6 விக்கெட்டும், நோமன் அலி 3 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்துள்ளது.
- பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 123 ரன்னில் சுருண்டது.
முல்தான்:
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
இதன் முதலாவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பனிமூட்டம் காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது.
முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 41.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 230 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. சாத் ஷகீல் 84 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ், வாரிகன் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 25.2 ஓவரில் 137 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வாரிகன் 31 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் சார்பில் நோமன் அலி 5 விக்கெட், சஜித் கான் 4 விக்கெட் வீழ்த்தினர்.
93 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் 2வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ஷான் மசூத் அரை சதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார்.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 157 ரன்களில் ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் வாரிகன் 7 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் களமிறங்கியது. அலிக் அத்தான்ஸ் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார். அவர் 55 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 2வது இன்னிங்சில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 127 ரன் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 5 விக்கெட்டும், அப்ரார் அகமது 4 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது சஜித் கானுக்கு அளிக்கப்பட்ட்டது.
