search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sakrabani Temple"

    • கல்யாணபுரி, சாரங்கராஜன் பட்டினம் என்று இந்த தலத்திற்கு மற்ற பெயர்களும் உண்டு.
    • ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் சுற்று மதில் சுவருடன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உண்டு.

    இந்த கோவில் அழகான பல்வகையான மந்திர-தந்திர சிறப்புகளைக் கொண்டது. காவிரி ஆற்றுக்கு சற்று தெற்கில் இத்தலம் அமைந்துள்ளது.

    கல்யாணபுரி, சாரங்கராஜன் பட்டினம் என்று இந்த தலத்திற்கு மற்ற பெயர்களும் உண்டு.

    ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் சுற்று மதில் சுவருடன் அர்த்தமண்டபம், மகாமண்டபம் உண்டு.

    மூலவர் சாரங்கபாணி, எட்டு கைகளுடன் காட்சியளிக்கிறார். தாயார் விஜயவல்லி, பஞ்சமுக ஆஞ்சநேயர் இங்கிருக்கிறார்.

    சக்ரபாணியின் எட்டு கைகளுடன் கூடிய திருக்கோலத்தை காண விரும்பிய பிரம்மா, சூரியன், அக்னி, திருமகள் ஆகியோருக்கு பெருமாள் பிரத்ட்சயம் ஆனார் என்பது மிகச்சிறப்பு.

    இங்கு எழுந்தருளியிருக்கிற பெருமாள் சக்கர வடிவமாக தாமரைப் பூவில் அறுகோண யந்திரத்தில் காட்சி தருகிறார்.

    முன்னொரு சமயம் குடந்தையில் தங்கி தவம் செய்த தேவர்களை முனிவர்களை, அசுரர்கள் பலவகையிலும் தொந்தரவு செய்து துன்புறுத்தினர்.

    ஒருகால கட்டத்தில் தொந்தரவு, அளவுக்கு அதிகமாகப் போகவே, அவர்களை அசுரர்களிடமிருந்து காப்பாற்ற பெருமாள் தனது கையிலிருந்த சுதர்சன சக்கரத்தால் அசுரர்களை கொன்று அழித்தார்.

    அன்று எந்த கோலத்தில் நின்று அசுரர்களை அழித்தாரோ அதே கோலத்தில் இன்ற நமக்கு கருணை கொண்டு அருள் பாலித்து வருகிறார்.

    ×