search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sakshi"

    • திருமண நாளை தோனி - சாக்ஷி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
    • 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி சாக்ஷி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    எம்.எஸ்.தோனி - சாக்ஷி தம்பதிக்கு ஸிவா என்ற ஒரு மகள் இருக்கிறாள்.

    இந்த நிலையில், இன்று தங்களது 15வது திருமண நாளை தோனி - சாக்ஷி தம்பதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    திருமண நாளை ஒட்டி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் 15 ஆவது வருடத்தில் அடி எடுத்து வைக்கிறோம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    மேலும், சாக்ஷி வீடியோ ஒன்றையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தோனியின் ரசிகர்கள் இருவரைக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • கிராமத்து பெண் போல் எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் பாலிவுட் படத்திலும் நடிக்க உள்ளார்

    ரஜினி நடித்த காலா, அரண்மனை-3, நான் கடவுள் இல்லை, திருட்டு வி.சி.டி. உள்பட பல்வேறு தமிழ், மலையாள படங்களில் நடித்து வருபவர் சாக்ஷி அகர்வால். தற்போது மலையாளத்தில் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக தற்காப்பு கலை பயிற்சி, களறி பயிற்சிகளை பயின்று வந்தார்.

    மேலும் கிராமத்து பெண் போல் எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.




    இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மருமகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழில் இவருக்கு பல படங்கள் கைவசம் உள்ளன.

    மேலும் கன்னடம், மலையாளம் மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், பல மொழிகளிலிருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குவிகிறது.தமிழில் வித்தியாசமான வேடங்கள் மூலம் கதாநாயகியாக  அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என அசத்தி வருகிறார்.




    மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் சாக்ஷி நடிக்க இருக்கிறார்.




    மேலும் சாக்ஷிக்கு தென்னிந்திய சினிமாவைத் தொடர்ந்து,  பாலிவுட்டிலும் அழைப்புகள் வரத் தொடங்கியுள்ளன. விரைவில் பாலிவுட் படத்திலும் அவர் நடிக்க உள்ளார்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது.
    • டெல்லி அணி 20 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

    ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 171 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த டோனிக்கு எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர் ஆஃப் தி மேட்ச் என்ற ஸ்பெஷல் விருது வழங்கப்பட்டது. அதைப் பார்த்த அவருடைய மனைவி சாக்ஷி, தோல்வியை சந்தித்த சோகம் கொஞ்சமாவது முகத்தில் தெரியுதா பாருங்க என்ற வகையில் இன்ஸ்டாகிராமில் கலாய்த்துள்ளார்.

    இது பற்றி இன்ஸ்டாகிராமில் சாக்ஷி கூறியதாவது:-

    ஹேய் மஹி. நாம் போட்டியில் தோல்வியை சந்தித்தோம் என்பதை உணர முடியவில்லை என்று சிரிக்கும் ஸ்மைலியை போட்டு கலாய்த்துள்ளார். அத்துடன் வெற்றி பெற்ற ரிஷப் பண்ட்க்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்து பின்வருமாறு, அனைத்துக்கும் முதலாக ரிஷப் பண்ட்டுக்கு வரவேற்பு கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

    • டோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டில் வெளியிட்டுள்ளார்.
    • வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். டோனி 75-வது குடியரசு தினத்தை ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் சிறப்பாக கொண்டாடினார். இது தொடர்பான வீடியோவை எம்.எஸ். டோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுன்டில் வெளியிட்டுள்ளார்.

    வீடியோவில் கொடி கம்பத்தில் உயரமாக பறக்கும் தேசிய கொடியை எம்.எஸ். டோனி பார்த்து கொண்டே நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பலரும் இந்த வீடியோவிற்கு லைக் மற்றும் கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

     


    விரைவில் துவங்க இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடரில் எம்.எஸ். டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் களமிறங்க இருக்கிறார். கடந்த ஆண்டுடன் ஐ.பி.எல்.-இல் இருந்து டோனி ஓய்வு பெறுவார் என பலமுறை தகவல்கள் வெளியாகி வந்தது.

    அந்த வகையில், இது தொடர்பான கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பதில் அளித்துள்ளார். அதில், இது அவரின் கடைசி தொடராக இருக்குமா என்பதை எம்.எஸ். டோனி தான் முடிவு செய்வார் என தெரிவித்து இருக்கிறார்.



    உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதால் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு எம்எஸ் டோனி மனைவி சாக்‌ஷி விண்ணப்பித்துள்ளார். #MSDhoni #Sakshi
    இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. இவர் தலைமையிலான இந்திய அணி 2007-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியது. அதன்பின் அவரது புகழ் உலகளாவிய அளவில் உயர்ந்தது. நட்சத்திர வீரரான அவர், கடந்த 2010-ம் ஆண்டு தன் பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் வாங்கினார்.

    இந்நிலையில் அவரது மனைவியான சாக்‌ஷி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எண்ணி, தற்போது துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். பிஸ்டல் அல்லது .32 ரிவால்வர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு லைசென்ஸ் தரும்படி கேட்டுள்ளார்.



    டோனி கிரிக்கெட் விளையாட சென்றுவிடுவதால், தான் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் தனியாக இருப்பதாகவும், மேலும் தனிப்பட்ட வேலைக்காரணமாக வெளியில் தனியாக செல்ல இருப்பதாலும், உயிருக்கு ஆபத்து உள்ளது. இதனால் துப்பாக்கி வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று சாக்‌ஷி விண்ணப்பத்தில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

    2008-ம் ஆண்டு டோனி 9எம்எம் துப்பாக்கி வைத்திருக்க லைசென்ஸ் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். அதனை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்புவதற்கு முன்பாக, டோனியிடம் நற்சான்றிதழ் வழங்குமாறு ராஞ்சி நிர்வாகம் கேட்டிருந்தது. இந்த விவகாரம் காரணமாக அந்த சமயத்தில் அவருக்கு லைசென்ஸ் கிடைக்கவில்லை. அதன்பிறகு 2010-ல் டோனிக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது.
    இந்தோனேசியால் நடைபெற இருக்கும் ஆசிய போட்டிக்கான இந்திய மல்யுத்த அணிக்கு சாக்‌ஷி, வினேஷ் தலைமை தாங்குகிறார்கள். #AsianGames
    இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 18-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை ஆசிய போட்டிகள் நடைபெறுகிறது. இதில் மல்யுத்தம் பிரிவில் இந்தியா சார்பில் பெண்கள் பிரிவில் 6 பேர் இடம்பிடிக்க இருக்கிறார்கள். இதில் சாக்‌ஷி, வினேஷ் பயிற்சி ஆட்டத்தில் விளையாடாமல் நேரடியாக தகுதி பெற்றனர். இவர்கள் இரண்டு பேரும் பெண்கள் அணிக்கு தலைமை தாங்குகிறார்கள்.



    மற்ற நான்குபேர் இன்று நடைபெற்றும் பயிற்சியின் மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். சாக்‌ஷி கோல்டு கோஸ்டில் நடைபெற்ற போட்டியிலும், 2016 ரியோ ஒலிம்பிக்கிலும் வெண்கல பதக்கம் வென்றார். வினேஷ் போகத் காமன் வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
    ×