என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Sakshi Agarwal"

    • ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் நடிகை சாக்க்ஷி தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
    • இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் "கெஸ்ட்" மற்றும் "தி நைட்" என்கின்ற இரு திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், சாக்ஷி அகர்வால். மாடலாக இருந்து பின்பு நடிகையாக மாறியவர். தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால் முதலில் ஒரு நிறுவனத்தில் மார்கெட்டிங் துறையில் இருந்தார்.

    ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் களமிறங்கிய நடிகை சாக்க்ஷி அகர்வாலுக்கு தொடக்கத்தில் பெரிய அளவில் அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "காலா", தல அஜித்தின் "விசுவாசம்" மற்றும் ஆர்யாவின் "டெடி" உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார் சாக்ஷி அகர்வால்.


    இறுதியாக தமிழில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பிரபுதேவாவின் "பகீரா" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று அவர் நடித்திருந்தார். இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் "கெஸ்ட்" மற்றும் "தி நைட்" என்கின்ற இரு திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.


    இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் கருப்பு உடையணிந்து சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சாக்ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
    • இதே போன்று செய்து என்னை டேக் செய்யுங்கள் என கூறியுள்ளார்.

    ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் களமிறங்கிய நடிகை சாக்க்ஷி அகர்வாலுக்கு தொடக்கத்தில் பெரிய கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை.

    அதன்பிறகு காலா, விசுவாசம், டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் நடித்திருந்தார். துணை நடிகையாக இருந்து, தற்போது கதாநாயகியாக சாக்ஷி அகர்வால் வளர்ந்து வளர்ந்துள்ளார். இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் "கெஸ்ட்" மற்றும் "தி நைட்" என்கின்ற இரு திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது,

    இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்ட சாக்ஷி அகர்வால், இதே போன்று செய்து என்னை டேக் செய்யுங்கள் என தலைப்பிட்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்‌ஷி அகர்வால்.
    • சாக்‌ஷி அகர்வால் தமிழில் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

    தமிழில் ரஜினிகாந்துடன் 'காலா', அஜித்குமாரின் 'விஸ்வாசம்', சுந்தர் சி.யின் 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பட வாய்ப்புக்காக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிடுவதாகவும் விமர்சனம் எழும்பியது.

     

    சாக்‌ஷி அகர்வால்

    சாக்‌ஷி அகர்வால்

    இதுகுறித்து சாக்‌ஷி அகர்வால் அளித்துள்ள பேட்டியில், ''நான் தற்போது 'பஹிரா', 'நான் கடவுள் இல்லை' என்ற இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளேன். 'கெஸ்ட்-சாப்டர் 2' எனும் திகில் கதையில் நாயகியாக நடித்து வருகிறேன். அறிமுக இயக்குனர் விக்கி இயக்கத்தில் தயாராகி வரும் படத்தில் சந்தோஷ் பிரதாப்புக்கு ஜோடியாகவும், 'கந்தகோட்டை' படத்தை இயக்கிய சக்தி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத இரண்டு படங்களிலும் நடிக்கிறேன். இரண்டு மலையாள படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன்.

     

    சாக்‌ஷி அகர்வால்

    சாக்‌ஷி அகர்வால்

    பட வாய்ப்பிற்காக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடவில்லை. என்னுடைய சமூக வலைதள பக்கத்தை கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பின்தொடர்கிறார்கள். இவர்களுடனான உறவையும், நட்பையும் ஆரோக்கியமாக பேணுவதற்கு புகைப்படங்களை பதிவிடுகிறேன். தொடர்ந்து சமூகம் குறித்த ஆக்கபூர்வமான விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்'' என்றார்.

    • தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்‌ஷி அகர்வால்.
    • சாக்‌ஷி அகர்வால் தமிழில் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

    சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.


    சாக்‌ஷி அகர்வால்

    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

    இந்நிலையில், இவர் மினுமினுக்கும் வெள்ளை நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


    • தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்‌ஷி அகர்வால்.
    • சாக்‌ஷி அகர்வால் தமிழில் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.


    சாக்‌ஷி அகர்வால்

    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில், இவர் கருப்பு நிற உடையில் உடற்பயிற்சி முடித்து விட்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • தமிழில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் சாக்‌ஷி அகர்வால்.
    • சாக்‌ஷி அகர்வால் தமிழில் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

    சாக்‌ஷி அகர்வால்

    சாக்‌ஷி அகர்வால்

    சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் இவரின் பிறந்தநாளான இன்று ரசிகர்களுக்கு பரிசளிக்கும் விதமாக பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


    • ஆறாவது வனம் படத்தை இயக்கிய இயக்குனர் ரங்கா புவனேஷ்வர் இயக்கி உள்ள படம் ‘கெஸ்ட் : சாப்டர்-2’.
    • இந்த படத்தில் சாக்‌ஷி அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    "ஆறாவது வனம்" என்கிற படத்தை இயக்கியவர் இயக்குனர் ரங்கா புவனேஷ்வர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகவுள்ள படம் 'கெஸ்ட் : சாப்டர்-2'. சாக்‌ஷி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ள  இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி, மதுமிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

    அனிமல் திரில்லர் என்கிற ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார். படத்தொகுப்பை சியான் கவனிக்கிறார். இந்த படத்தை குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் டி.கோகுலகிருஷ்ணன் தயாரிக்கவுள்ளார்.

    சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகை சினேகா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இணைந்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


    சாக்‌ஷி அகர்வால்

     இந்த படம் குறித்து இயக்குனர் ரங்கா புவனேஷ்வர் கூறும்போது, "இன்றைக்கு இதுபோன்ற வித்தியாசமான திரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த ஓநாய் மனிதன் என்கிற கதைக்களம் இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக இப்போதுதான் முழுமையாகக் கையாளப்படுகிறது.

    இதற்கு முன்னதாக இந்தியில் எழுபதுகளின் காலகட்டத்தில் ஒன்றிரண்டு படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் ஓநாய் மனிதன் என்கிற உருவத்தை அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சாதாரணமாகவே கையாண்டு இருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் ஓநாய் மனிதன் உருவாக்கத்தில் விஎஃப்எஸ் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது. மேலும் ஹாங்காங்கில் வைத்து இந்த படத்தின் விஃஎப்எக்ஸ் காட்சிகளை வடிவமைத்துள்ளோம்." என்று கூறியுள்ளார்.

    சென்னையில் பெய்து வரும் கன மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளம் சூழ்ந்து காணப்படும் நிலையில் தனது வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார் சாக்‌ஷி அகர்வால்.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

    சாக்ஷி அகர்வால்

    சமீபத்தில் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில், சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் வெளியானது. மேலும் நான் கடவுள் இல்லை திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக ‘தி நைட்’ என்னும் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

    சாக்ஷி அகர்வால்

    தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டப்பிங் பணிக்காக அடாத மழையில் தண்ணீர் நடந்து சென்று தனது வேலையை முடித்து இருக்கிறார். தற்போது இதன் புகைப்படங்கள் சமூக வலைத் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
    சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சியில் நடிகை சாக்‌ஷி அகர்வால் கலந்துக் கொண்டுள்ளார்.
    உலக பசி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஏழை குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகை சாக்‌ஷி அகர்வால் கலந்துக் கொண்டார். 

    அதன்பின் பேசிய சாக்‌ஷி அகர்வால், ‘உலகில் நிறைய பேர் பசியால் இறந்து போகிறார்கள். உலக பசி தினத்தை உலகம் முழுவதும் யாரும் கொண்டாட கூடாத நிலையை நாம் அனைவரும் உருவாக்க வேண்டும். ஒவ்வொருவரும் இரண்டு குழந்தைகளுக்கு உணவு வழங்கினால் பசி என்ற வார்த்தையை இல்லாமல் ஆக்கலாம்’ என்றார்.



    இந்த நிகழ்ச்சியில் நடிகை சாக்‌ஷி அகர்வால் குழந்தைகளுக்கு உணவு பரிமாறி, ஊட்டி விட்டு அவர்களை சந்தோஷப்படுத்தி இருக்கிறார். 
    காலா, விஸ்வாசம் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடிப்பதாக தெரிவித்துள்ளார்.
    ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்து அவர் அளித்த பேட்டியில் இருந்து,

    "ரஜினி சார் சினிமாவில் பெரிய அடையாளம் அவர் படம் மூலமாக எனக்கு ஒரு அடையாளம் வந்தது மகிழ்ச்சி. இப்போது கதையின் நாயகியாக சின்ட்ரெல்லா படத்தில் ராய் லட்சுமியோடு இணைந்து நடித்தது நல்ல அனுபவம். நிச்சயம் அப்படம் எனது சினிமா வாழ்க்கையில் மைல்கல்லாக அமையும்.



    அத்துடன் எழில் சார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் உடனும் இணைந்து நடித்து வருகிறேன். இது ஒரு ஹாரர் கலந்த காமெடி படம். எழில் சார் நம்மிடம் நமக்கே தெரியாமல் நம்மிடம் இருக்கும் திறமைகளை அற்புதமாக வெளிப்படுத்தச் செய்துவிடுவார். அவரது இயக்கத்தில் நடிப்பதில் மகிழ்ச்சி. அதேபோல் ஜி.வி.பிரகாஷ் உடன் நடிக்கும் அனைத்து நடிகைகளுக்கும் அவரோடு மீண்டும் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரும். இந்த படத்தில் பாவாடை தாவணி கட்டி நெல்லை தமிழில் பேசி நடித்திருக்கிறேன்.

    தற்போது திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அணீஸ் இயக்கத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். நிச்சயம் இந்த ஆண்டு எனக்கு தமிழ் சினிமாவில் முக்கியமான ஆண்டாக இருக்கும்" என்றார்.

    வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘மெக்பெத்’ என்ற நாடகம் தமிழில் ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற பெயரில் உருவாகும் திரைப்படத்தில் சாக்‌ஷி அகர்வால் நாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
    வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலக பிரசித்தி பெற்ற ‘மெக்பெத்’ என்ற நாடகம் தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக தமிழில் திரைப்படமாகிறது. 

    இப்படத்திற்கு ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தக் கதைக்கு திரை வடிவம் கொடுத்து  இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் இயக்குநர் அனீஸ். இவர் ஏற்கெனவே ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற படத்தை இயக்கியவர்.



    ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு 96 புகழ் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் கதாநாயகர்களாக சதீஸ் நீநாசம், சரண் சஞ்சய்யும் நடிக்கிறார்கள். தற்போது கதாநாயகியாக சாக்‌ஷி அகர்வால் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். 

    மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், மலையாளத்தில் ஓராயிரம் கினாக்கள் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்திலும், அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்திருக்கிறார்.
    மாடல் அழகியும், நடிகையுமான சாக்‌ஷி அகர்வால், பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க விருப்பம் இருப்பதாக கூறியிருக்கிறார். #SakshiAgarwal
    மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், ‘யோகன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து திருட்டி விசிடி, கககபோ, படங்களில் நடித்தார். மலையாளத்தில் ஓராயிரம் கினாக்கள் படத்தில் பிஜு மேனனுக்கு ஜோடியாக நடித்த இவர் அதன்பிறகு ரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்திலும், அஜித் நடிப்பில் வெளியான ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்திருந்தார்.

    இவர் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் கேள்வி பதிலில் ஈடுபட்டிருந்தார். இதில் ரசிகர்கள் பலரும் சாக்‌ஷி அகர்வாலுக்கு வாழ்த்துகளையும், காதலையும் வெளிபடுத்தி இருந்தார்கள்.



    இதில் ஒருவர் யாருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கேட்க, அதற்கு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க ஆசை என்று கூறியிருக்கிறார். 
    ×