search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salary increase"

    • பின்னலாடை தொழிலாளருக்கு 4 சதவீத சம்பள உயர்வு முழுமையாக வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    • கூட்டுக்கமிட்டி சார்பில் அனைத்து தொழிலாளருக்கும், 4 சதவீத சம்பள உயர்வு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    திருப்பூர்:

    தீபாவளி பண்டிகை விடுமுறைக்கு பிறகு, பின்னலாடை தொழிலாளருக்கு 4 சதவீத சம்பள உயர்வு முழுமையாக வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா), திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் (டீ), பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா), திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா), தென்னிந்திய இறக்குமதி எந்திர துணி உற்பத்தியாளர் சங்கம்(சிம்கா), திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (டெக்மா) உள்ளிட்ட தொழில் அமைப்புகள் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப்., அண்ணா தொழிற்சங்கம், எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., எம்.எல்.எப்., பி.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்று, இவற்றின் பிரதிநிதிகள் சம்பள ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

    கடந்த 2021 செப்டம்பர் மாதம் உருவான ஒப்பந்தப்படி, 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறை சம்பளத்தில் இருந்து 4 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும். அடிப்படை சம்பளம், பஞ்சப்படி, பயணப்படி மற்றும் 4 சதவீத சம்பள உயர்வுடன் புதிய சம்பளம் வழங்க வேண்டும். தொழிலாளர்களும் அந்தந்த நிறுவனங்களில் சம்பளத்தை கேட்டுப்பெற வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. தீபாவளி பண்டிகை ஆர்டர் ஓரளவுக்கு சாதகமாக இருந்தது. இருப்பினும் 10 நாட்கள் வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போனஸ் கணக்கீடு செய்வதற்காக புதிய சம்பள உயர்வு இடையில் வழங்கப்படாமல் இருந்தது. அதன்படி இவ்வாரத்தில் இருந்து புதிய சம்பள உயர்வை கணக்கிட்டு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

    இதுகுறித்து சி.ஐ.டி.யு., பனியன் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சம்பத் கூறுகையில், தொழிற்சங்கம் இயங்கும் நிறுவனங்களில் ஒப்பந்தப்படி கடந்த மாதமே 4 சதவீத சம்பள உயர்வு கிடைத்துவிட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் தீபாவளிக்கு பிறகு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். எப்படியிருந்தாலும் ஒப்பந்தம் செய்தபடி 4 சதவீத சம்பள உயர்வு வழங்கியாக வேண்டும். எனவே கூட்டுக்கமிட்டி சார்பில் அனைத்து தொழிலாளருக்கும், 4 சதவீத சம்பள உயர்வு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சம்பள ஒப்பந்தப்படி கட்டிங், டெய்லர், அயர்ன், பேக்கிங், சிங்கர், நிட்டிங் மெஷின் தொழிலாளருக்கு ஷிப்டுக்கு 512.66 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். செக்கிங் பணியாளருக்கு 391.08 ரூபாய், லேபிள் தொழிலாளிக்கு 375.89 ரூபாய், கை மடித்தல் பணிக்கு 371.95 ரூபாய், டேமேஜ் தொழிலாளிக்கு 343.67 ரூபாய், அடுக்கி கட்டும் தொழிலாளிக்கு 312.34 ரூபாய் அளவுக்கும், லோக்கல் மெஷின் பிரிவுக்கு 493.98 ரூபாயும் சம்பளம் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

    • தொழிற்சங்கத்தினர் ஏற்று கொள்ளாததால், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
    • பித்தளைப் பாத்திரம் உற்பத்திக்கான சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் பாத்திர தொழிலாளர்களுக்கு புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து எவர் சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் அனைத்து தொழிற் சங்க கூட்டு கமிட்டி சார்பில், அதன் தலைவர் வேலுச்சாமி (எல்.பி.எப்.,), செயலாளர் ரங்கராஜ் (சி.ஐ.டி.யு.,), பொருளாளர் தேவராஜ் (ஏ.டி.பி.,), கவுரவ தலைவர் முத்துகிருஷ்ணன் (காமாட்சியம்மன் சங்கம்), எவர் சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கம் தரப்பில் தலைவர் துரைசாமி, துணை தலைவர் குமாரசாமி, துணை செயலாளர் மதிவாணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கத்தினர், தொழில் மந்த நிலையில் உள்ளது. எனவே பேச்சு வார்த்தையை ஒரு ஆண்டுக்கு ஒத்தி வைப்பது. அதுவரை பழைய ஒப்பந்தத்தை கடை பிடிப்பது என்ற கருத்தை முன்வைத்தனர். இதனை தொழிற்சங்கத்தினர் ஏற்று கொள்ளவில்லை.இதற்கு உற்பத்தியாளர் சங்கத்தினர், 28ல் சிறப்பு மகாசபை கூட்டம் நடத்த உள்ளோம். அதில் நிர்வாகிகள் கருத்தை கேட்டு தகவல் தெரிவிக்கிறோம் என்றனர். அதனை தொடர்ந்து, பித்தளைப் பாத்திரம் உற்பத்திக்கான சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பித்தளை பாத்திர வியாபாரிகள் சங்க துணை தலைவர் மனோகர், செயலாளர் முத்தையா, பொருளாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர்கள் கூறிய கருத்தையே இவர்களும் தெரிவிக்கவே, தொழிற்சங்கத்தினர் ஏற்று கொள்ளாததால், பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மறு தேதி குறிப்பிடாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.

    • தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் அனுப்பர்பாளையம் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்தது.
    • தொழிலாளர்களுக்கு சம்பள பேச்சு வார்த்தை குறித்த விளக்க கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    அனுப்பர்பாளையம் : 

    திருப்பூர் பாத்திர அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் அனுப்பர்பாளையம் சி.ஐ.டி.யு., தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்தில் தேவராஜ் (ஏ.டி.பி.,), குப்புசாமி (சி.ஐ.டி.யு.,), பாண்டியராஜன் (எச்.எம்.எஸ்.,), நாகராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.,), ரத்தினசாமி (எல்.பி.எப்.,), அசோக் (ஐ.என்.டி.யு.சி.,), சீனிவாசன் (பி.எம்.எஸ்.,), அர்ஜூனன் (காமாட்சியம்மன் சங்கம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பில் புதிய சம்பள ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்து கடந்த டிசம்பர் மாதம் 31ந் தேதி கடிதம் கொடுக்கப்பட்டது.கடிதத்திற்கு பதில் வராத காரணத்தால், பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு கோரிக்கையை சுமூகமாக முடிக்க திருப்பூர் தொழிலாளர் துணை ஆணையரை சந்தித்து கடிதம் கொடுப்பது, தொடர்ந்து, அனைத்து பாத்திர தொழிற்சங்கங்களின் கூட்டம் கூட்டி, தொழிலாளர்களுக்கு சம்பள பேச்சு வார்த்தை குறித்த விளக்க கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    • கடந்த முறை ஏற்படுத்தப்பட்ட சம்பள ஒப்பந்தம் நேற்று முன்தினம் 31ந் தேதி நிறைவு பெற்றது.
    • அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பினர்.

    அனுப்பர்பாளையம்,ஜன.2-

    திருப்பூர் அனுப்பர் பாளையத்தில் 250 பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

    கடந்த முறை ஏற்படுத்தப்பட்ட சம்பள ஒப்பந்தம் நேற்று முன்தினம் 31ந் தேதி நிறைவு பெற்றது. புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வருமாறு அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பினர்.

    இதனையொட்டி எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்கத்தினர் தொழில் மந்த நிலையில் உள்ளதால் பழைய சம்பள ஒப்பந்தத்தையே மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பது, அதன்பின் புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து பேசுவது என தொழிற்சங்க கூட்டு கமிட்டிக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து விவாதிக்க அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி கூட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யு., சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் உற்பத்தியாளர் சங்கத்தினர் அனுப்பிய கடிதத்தின்படி தற்போதைய கூலியை ஓராண்டுக்கு நீட்டிப்பது என்ற கருத்தை முற்றிலும் நிராகரிப்பது,ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் இன்றைய விலைவாசி உயர்வும் பாத்திர தொழிலாளர்களின் வாழ்வு நிலையையும் கணக்கில் கொள்ளாத தாங்கள் சங்கத்தின் இந்த அணுகுமுறை பாத்திர உற்பத்தியாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான சமூக உறவை பாதிக்கும்.இத்தகைய நிலைப்பாட்டிலிருந்து மாற்றத்தை உருவாக்கி சம்பள உயர்வு குறித்து ஒருவார காலத்திற்குள் அழைத்துப்பேசி தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அனைத்து பாத்திரத்தொழிற்சங்கங்களின் கூட்டுக்கமிட்டிக் கூட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யு. பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
    • புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து சங்கங்களின் தலைவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.

    அனுப்பர்பாளையம், டிச. 22 -

    திருப்பூர் அனுப்பர்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் 200- க்கும் மேற்பட்ட எவர்சில்வர், பித்தளை, செம்பு உள்ளிட்ட பாத்திர பட்டறைகள் உள்ளன. அங்கு பாத்திர தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் முடிவடைய உள்ளது.

    இந்த நிலையில் அனைத்து பாத்திரத்தொழிற்சங்கங்களின் கூட்டுக்கமிட்டிக் கூட்டம் அனுப்பர்பாளையத்தில் உள்ள சி.ஐ.டி.யு. பாத்திரத் தொழிலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், பாத்திரத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து சங்கங்களின் தலைவர்கள் கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.

    இதன் முடிவில் எவர்சில்வர் வகை பாத்திரத்திற்கு 50 சதவிகிதமும், பித்தளை, தாமிரம், வார்பு பொருட்களுக்கு 60 சதவிகிதமும், ஈயப்பூச்சுக்கு 70 சதவீதமும் ஊதிய உயர்வு கேட்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இதுகுறித்து எவர்சில்வர் பாத்திரப் பட்டறைதாரர் சங்கத்திற்கும், பித்தளை பாத்திர உற்பத்தியாளர் சங்கத்திற்கும் கோரிக்கைக்கடிதம் அனுப்புவது என்றும், தொழிலாளர் துறைக்கும் கோரிக்கை கடிதம் அனுப்புவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

    கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பல்கலைக்கழக மானியக்குழு அமைத்த சம்பள மறுஆய்வு குழு, பல்கலைக்கழக மானியக்குழுவின் ஆளுகைக்கு உட்பட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களுக்கு இணையான அதிகாரிகளுக்கு ஊதியத்தை உயர்த்த சிபாரிசு செய்தது. அதை ஏற்றுக்கொண்டு ஊதியத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உயர் கல்வித்துறை இயக்குனர் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    அதன் அடிப்படையில், அந்த சிபாரிசை தமிழக அரசு ஆய்வு செய்து இந்த அரசாணையை பிறப்பிக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஊதியம் உயர்த்தப்படுகிறது.

    இந்த சம்பள உயர்வு, 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியிட்டு அமல்படுத்தப்படும். கல்லூரி ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆகவும், பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கான ஓய்வு வயது 60 ஆகவும் நீடிக்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×