search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem Sugavaneswarar temple"

    சட்ட விரோதமாக லஞ்சம் பெற்ற வழக்கில் தமிழரசு, வன்னிய திலகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விரைவில் அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று உயர் அதிகாரி தெரிவித்தார்.
    சேலம்:

    சேலம் சுகவனேஸ்வரர் கோவில் உதவி கமி‌ஷனராக இருப்பவர் தமிழரசு (வயது 55). அதே கோவிலில் தலைமை எழுத்தராக பணி புரிபவர் வன்னியர் திலகம் (48).

    கடந்த 15-ந் தேதி கோவில் அறையில் காண்டிராக்டர் லஞ்சமாக வைத்த பணத்தை தமிழரசு எடுத்தபோது லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சந்திரமவுலி மற்றும் போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். அதில் ஒரு கவரில் தமிழரசு என எழுதி 60 ஆயிரம் ரூபாயும், மற்றொரு கவரில் வன்னிய திலகம் என்று எழுதி 10 ஆயிரம் ரூபாயும் இருந்தது.

    இது குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது கணக்கில் வராத பணம் என்பதை உறுதி செய்தனர். மேலும் நூதன முறையில் கோவில் அதிகாரிகளுக்கு பணத்தை லஞ்சமாக டேபிளில் கொண்டு வைத்த 2 பேர் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவில் திருப்பணி தற்போது நடைபெறுவதால் அந்த கோவில் கட்டுமான பணிகளை காண்டிராக் எடுத்த நபர்கள் இந்த பணத்தை லஞ்சமாக மேஜை டிராயரில் கொண்டு வைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உயர் அதிகாரிகளுக்கும் அறிக்கை அனுப்பினர்.

    இதற்கிடையே தமிழரசு மற்றும் வன்னியர் திலகம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதற்கு அனுமதி கிடைத்ததையடுத்து சட்ட விரோதமாக லஞ்சம் பெற்றதாக தமிழரசு மற்றும் வன்னிய திலகம் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதையடுத்து 2 பேர் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுத்து விரைவில் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    ×