search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samalapuram"

    • பொதுமக்கள் திறந்த வெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
    • பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.

    மங்கலம் :

    சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு பகுதிகளிலும் பொதுமக்கள் திறந்த வெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. அதனால் பொதுமக்கள் பொதுக்கழிப்பிடத்தையோ அல்லது தனிநபர் கழிப்பிடத்தையோ பயன்படுத்த வேண்டும். இதனை பயன்படுத்தாமல் திறந்த வெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால் ரூ.100 மற்றும் ரூ.500 அபராதம் விதிக்கப்படுவதுடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் கூறப்பட்டுள்ளது.

    • காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாமில் பொதுமக்கள் 76 பேர் பங்கேற்றனர்.
    • 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

     மங்கலம் :

    சாமளாபுரம் பேரூராட்சி காளிபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் 76 பேர் பங்கேற்றனர்.

    இதில் 25 பேருக்கு கொரோனா பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.க.சாந்தகுமாரி மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர் பூங்கொடிசண்முகம் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளப்பாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.
    • கால்நடை வளர்ப்போர் மாடுகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி 12-வது வார்டு கள்ளப்பாளையம் பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி முன்னிலை வகித்தார். முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றதுணைத்தலைவர் குட்டிவரதராஜன்,சாமளாபுரம் பேரூராட்சி 12-வது வார்டு கவுன்சிலர் பிரியாசெந்தில் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இம்முகாமில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பிரியலட்சுமி, இச்சிப்பட்டி கால்நடை ஆய்வாளர் சத்யா, கால்நடை ஆய்வாளர் காயத்ரி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கள்ளப்பாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.

    வருகிற 31-ந்தேதி வரை சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கருகம்பாளையம், செந்தேவிபாளையம், சாமளாபுரம், பள்ளபாளையம், காளிபாளையம்,வி.அய்யம்பாளையம், பரமசிவம்பாளையம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கோமாரிநோய் தடுப்பூசிமுகாம் நடைபெறவுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை(திருப்பூர்) கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், வருகிற 31-ந்தேதி வரை சாமளாபுரம் பேரூராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.ஆகவே சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் கால்நடை வளர்ப்போர் தங்களுடைய மாடுகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றனர். 

    • 7நாட்கள் சிறப்பு நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது/
    • சாமளாபுரம் பெரியகுளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் 7நாட்கள் சிறப்பு நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது/

    அதன்படி கடந்த 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சாமளாபுரம் பெரியகுளத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளானது கோவை இயற்கை கழகத்தின் தலைவர் செல்வராஜ் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சாமளாபுரம் குளத்தில் பறவைகள் கணக்கெடுப்பும் ,பின்னர் சாமளாபுரம் பகுதியில் தூய்மைப்பணியும் மேற்கொண்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு இயற்கையை பாதுகாப்போம் என்ற தலைப்பில் மழைகாடுகள் ஆராய்ச்சியாளர் மாணிக்கம் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.பின்னர் கடந்த 31-10-2022-ந்தேதி (திங்கட்கிழமை) ரோட்டரி சோமனூர் மற்றும் லிட்ரசி பள்ளி நிர்வாகம் இணைந்து சாமளாபுரம் பேரூராட்சி க்குட்பட்ட அய்யம்பாளையம்,காளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்கள் (6 இடங்களில்) ஆபத்தான வளைவுகளில் குவிகண்ணாடி அமைத்தனர். மேலும் 7 இடங்களில் குவிகண்ணாடி அமைக்கவுள்ளனர்.பின்னர் மாலை 6 மணிக்கு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நீர்மேலாண்மை என்ற தலைப்பில் நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார்.

    அதனைத்தொடர்ந்து 1-11-2022-ந்தேதி (திங்கட்கிழமை) சாமளாபுரம் பகுதியில் லிட்ரசி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் கள்ளப்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் தூய்மைப்பணியை மேற்கொண்டனர். பின்னர் மாலை 6 மணிக்கு சமுதாய பொறுப்பும் தனிமனித ஒழுக்கமும் என்ற தலைப்பில் கோடங்கிபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் கா.வி.பழனிச்சாமி லிட்ரசி நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார். அதனைத்தொடர்ந்து இன்று சாமளாபுரம் பேரூராட்சி க்குட்பட்ட பகுதிகளில் லிட்ரசி பள்ளியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிகளை சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் வருகிற 4-11-2022-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.இந்த நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் சாமளாபுரம்- லிட்ரசி மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் ஆர்.ராமமூர்த்தி, நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள்,ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

    • 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத்தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
    • 15 நாட்கள் கூட தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளது.

    மங்கலம் :

    அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் விசைத்தறி தொழிலை நம்பி சுமார் 2 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் இருக்கின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கூலி உயர்வு பெறாமல் சென்ற மார்ச் மாதம் தான் தமிழக அரசு முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் 19 சதவீதம் கூலி உயர்வு பெற்று விசைத்தறி தொழிலை நடத்திக் கொண்டு இருக்கின்றனர். மேலும் வரலாறு காணாத பஞ்சுவிலை ஏற்றத்தால் மாதம் 15 நாட்கள் கூட தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளனர்.ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ள இந்த தொழிலுக்கு மின்கட்டண உயர்வு பேரிடியாக அமைந்துள்ளது.

    விவசாயத்திற்கு அடுத்த படியாக உள்ள ஜவுளித்தொழில் ஏற்கனவே கடும் நெருக்கடியில் இயங்கிகொண்டு உள்ளது.குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களும் இரவு பகல் பாராமல் உழைத்தும் பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். விசைத்தறி தொழில் கஷ்டங்களை கருத்தில் கொண்டு ஏற்கனவே தமிழக அரசு விசைத்தறிக்கு தனியாக சாதா விசைத்தறி என டேரிப் பிரித்து மானியமாக 750 யூனிட் மின்சாரம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் விசைத்தறிக்கு சுமார் 30சதவீத மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவ்வளவு வருடம் செய்து வந்த தொழிலை விட்டு கூலி வேலைக்கு செல்லும் நிலை ஏற்படும் . எனவே அழிந்து வரும் இத்தொழிலையும் நேரடியாகவும் ,மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறும் சுமார் 10 லட்சம் நபர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் . இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    • கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    • கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவுதினம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் கழகத்தின் சார்பாக கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியானது கட்சியின் சாமளாபுரம் பேரூர் செயலாளர் பி. வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது .இதில் தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் துணைச் செயலாளர் தியாகராஜன், மாவட்ட பிரதிநிதி தங்கராஜ் , சாமளாபுரம் பேரூராட்சி மன்ற 11 -வது வார்டு கவுன்சிலர் தயாளன்வினோஜ்குமார் , ஒன்றிய பிரதிநிதி சண்முகம், எழிலரசன் மற்றும் வார்டு செயலாளர்கள் பாலசுப்பிரமணியம், பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, சீனிவாசன், பாலு, ஆறுமுகம், பழனிச்சாமி, மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகள் ,பொதுமக்கள் உள்பட கலந்துகொண்டனர்.

    திருப்பூர் மாவட்டம்,மங்கலத்தில் மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கருணாநிதி நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியானது மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இதில் மலர்களால் அலங்கரிங்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இதில் மங்கலம் தி.மு.க. கட்சியை சேர்ந்த தம்பணன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜுனைத், தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணகுமார், கிளை செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பிரதிநிதி சகாப்தீன், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற 9வது வார்டு உறுப்பினர் முகமது இத்ரிஸ், ஒன்றிய பொறுப்புகுழு பாபு, நீலி,ஆதிதிராவிடர் காலனி கிளை செயலாளர் முருகசாமி, சுல்தான்பேட்டை ஆதி திராவிடர் காலனி கிளை செயலாளர் கிட்டான் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆதார் கார்டில் ஆதார் கைரேகை புதுப்பித்தல், தொலைபேசி எண் மாற்றம் ஆகியவை செய்யப்பட்டன.
    • புதிதாக ஆதார் கார்டு எடுக்கப்பட்டன.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் உள்ள சாமளாபுரம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு ஆதார் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ஆதார் கார்டில் பெயர் திருத்தம், பிறந்த தேதி மாற்றம், ஆதார் கைரேகை புதுப்பித்தல், தொலைபேசி எண் மாற்றம், புதிதாக ஆதார் கார்டு எடுத்தல் ஆகியவை செய்யப்பட்டன.

    சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஏராளமான பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன்,சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார், மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்களான பட்டீஸ்வரன், நித்யா ஆரோக்கியமேரி, மைதிலி, வேலுச்சாமி, மேனகா, கிருஷ்ணவேணி, பூங்கொடி, மகாலட்சுமி, கனகசபாபதி, தமாளன்வினோஜ்குமார், பிரியா, பெரியசாமி,துளசிமணி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
    • தலைமை கழக பேச்சாளர் சிங்கை சவுந்தர் அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி பேசினார்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம்,சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளபாளையம் பகுதியில் தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியானது தி.மு.க. கட்சியின் சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேலுச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சிங்கை சவுந்தர் அரசின் ஓராண்டு சாதனையை விளக்கி பேசினார். கூட்டத்தில் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா க.மனோகரன், சாமளாபுரம் பேரூர் தி.மு.க. அவைத்தலைவர் ராமசாமி , தி.மு.க. சாமளாபுரம் பேரூர் துணைச்செயலாளர் தியாகராஜன்.

    சூலூர் தொகுதி தகவல்தொழில்நுட்ப அணி வினோஜ் குமார், இளைஞர் அணி கருணாநிதி, மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், ரங்கசாமி, சன்முகம்,இருதயசாமி,கார்த்தி, ஆறுமுகம், மற்றும் வார்டு செயலாளர்கள், கழக நிர்வாகிகள்,உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×