search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samattva Pongal festival"

    • முதல் இரண்டு நாட்கள் மாலை நேரத்தில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .
    • திருப்பூர் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    திருப்பூர்  : 

    திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வளர்மதி பாலம் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.

    மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்வில் முதல் இரண்டு நாட்கள் மாலை நேரத்தில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது . அதனை தொடர்ந்து மூன்றாவது நாளான இன்று திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளை சேர்ந்த 3000 பெண்கள் கலந்துகொண்டு வைக்கக்கூடிய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது .

    இதில் அனைத்து மதத்தை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்தனர் . இதனை முன்னிட்டு நடைபெற்ற துவக்க விழாவில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் வினீத் , மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி , மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு , சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் கலந்து கொண்ட பொங்கல் விழாவினை துவக்கி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து பொங்கல் விழா நடைபெற்றது . சமத்துவ பொங்கலின் ஒரு பகுதியாக வள்ளி கும்மியாட்டம் , பெருஞ்சலங்கை ஆட்டம் , பறை இசை நடனம் உள்ளிட்டவை நடைபெற்றது . இதை காண திருப்பூர் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.

    • பொங்கல் சீர்வரிசைகளோடு புத்தக ங்களும் மரக்கன்று களும் வழங்கப்பட்டது.
    • 25-வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சாமுண்டிபுரம் பகுதியில் நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு சாமுண்டிபுரம் பகுதியில் மதிமுக சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவின் போது சமத்துவ பொங்கல் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

    25-வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா

    அந்த வகையில் இன்று திருப்பூர் மாநகராட்சி 24 வது வார்டு கவுன்சிலரும் திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக செயலாளருமான நாகராஜ் ஏற்பாட்டில் 25-வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சாமுண்டிபுரம் பகுதியில் நடைபெற்றது.

    இதில் அனைத்து மதத்தை சார்ந்த 5000 பெண்கள் கலந்துகொண்டு சூரிய பொங்கல் வைத்தனர்.

    இந்நிகழ்வை மதிமுகவின் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

    பெண்கள் முளைப்பாரி

    நிகழ்ச்சியின் முன்னதாக சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வ லமாக வந்தனர் .

    இதனைத் தொடர்ந்து மதிமுக கொடியினை தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ ஏற்றி வைத்து பொங்கல் விழாவை துவக்கி வைத்தார்.

    பொங்கல் சீர்வரிசை

    இந்நிகழ்வின் ஒரு பகுதியாக சாமுண்டி புரத்தை சேர்ந்த புதுமண தம்பதிகளுக்கு மதிமுக சார்பில் பொங்கல் சீர்வரிசைகளோடு புத்தக ங்களும் மரக்கன்று களும் வழங்கப்பட்டது.

    பரிசு பொருட்கள்

    இதனைத் தொடர்ந்து பொங்கல் வைத்த பெண்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்த 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.

    ×