search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samiyadis"

    • சிவராத்திரி விழாவில் நடந்த குல தெய்வ வழிபாட்டில் அரிவாள் மீது ஏறி நின்று சாமியாடிகள் அருள்வாக்கு கூறினர்.
    • இந்த ஊரில் பிறந்து வெளியூருக்கு திருமணமாகி சென்ற பெண்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுப்பட்டியில் ஆண்டி முனீசுவரர் கோவில் வீட்டில் சிவராத்திரியின் 3-ம் நாளில் பக்தர்கள் குலதெய்வ வழிபாடு நடத்தினர். ஆண்டி முனீசுவரர் கோவிலில் பக்தர்கள் தட்ட பயறு, மொச்சை, சுண்டல், பச்சரிசி, தேங்காய், பழம், அவல், மாவிளக்கு உள்ளிட்டவைகள் வேகவைத்து சாமிக்கு படையலிட்டனர். மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களான சின்ன கருப்பர், வெள்ளாளங்கருப்பர், முனீசுவரர், சன்னாசி உள்ளிட்ட சாமியாடிகளின் சாமியாட்ட நிகழ்ச்சி நடந்தது.

    கருங்காலி கம்பு, சாட்டை எடுத்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். பெண்கள் குலவையிட சாமியாடிகள் அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு கூறினர்.இதில் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் சாமி தரிசனம் செய்து அருள்வாக்கு கேட்டு சென்றனர். பின்பு அவித்த பயறு வகைகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த ஊரில் பிறந்து வெளியூருக்கு திருமணமாகி சென்ற பெண்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. பிறகு கோவில் வீட்டு வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×