என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sampai Soren"

    • அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை தொடர்ந்து ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
    • சம்பாய் சோரன் ஆட்சியமைக்க உரிமைக்கோரி, முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தி வருகிறது.

    பதவி ஏற்றுக் கொண்ட சம்பாய் சோரன், 10 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.

    10 நாட்கள் இருப்பதால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.-க்களிடம் குதிரை பேரம் நடத்த முடியாத வகையில், அவர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் திங்கட்கிழமை சட்டமன்றம் கூட்டப்பட்டு அன்றைய தினம் சம்பாய் சோரன் மெஜாரிட்டியை நிரூபிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பாய் சோரன் தனக்கு 43-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் 41 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

    2022-ல் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் 48 உறுப்பினர்கள் ஆதரவை பெற்றிருந்தார். ஊழல் குற்றச்சாட்டில் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற மிரட்டல் இருந்த நிலையில், மெஜாரிட்டியை நிரூபித்தார்.

    ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கு 46 எம்.எல்.ஏ.க்கள் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 28, காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதா தளம் 1, சிபிஐ (எம்எல்) விடுதலை 1) உள்ளனர். 

    • ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்ததால், சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.
    • குதிரை பேரம் நடக்காமல் இருக்க ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் தெலுங்கான அழைத்துச் செல்லப்பட்டனர்.

    அமலாக்கத்துறை விசாரணைக்குப் பிறகு ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றதில் இருந்து 10 நாட்களுக்குள் பெரும்பான்மையை சட்டசபையில நிரூபிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

    அதன்படி ஜார்கண்ட் சட்டமன்றத்தில் சம்பாய் சோரன் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.-க்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு அழைத்துச் சென்றனர். பா.ஜனதா குதிரை பேரம் பேசிவிடக் கூடாது என முன்னெச்சரிக்கையாக இந்த ஏற்பாட்டைச் செய்தனர். இன்று காலை அவர்கள் ஜார்கண்ட் அழைத்து வரப்பட்டனர். அழைத்து வரப்பட்ட அவர்கள் நேராக சட்டமன்றம் சென்று வாக்கெடுப்பில் பங்கேற்க வைக்கப்படுவார்கள்.

    81 இடங்களை கொண்ட ஜார்கண்டில் ஆட்சியமைக்க 41 இடங்கள் தேவை. ஜார்கண்ட் மோர்ச்சா கூட்டணிக்கு 47 இடங்கள் உள்ளது. இதில் 43 எம்.எல்.ஏ.க்கள் சம்பாய் சோரனுக்கு உறுதியான ஆதரவு கொடுக்க உள்ளனர்.

    ஜார்கண்டில் பா.ஜனதாவுக்கு 25 எம்.எல்.ஏ.க்களும், அனைத்து ஜார்கண்ட் மாணவர்கள் அமைப்பிற்கு 3 எம்.எல்.ஏ.-க்களும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிக்கு தலா ஒரு எம்.எல்.ஏ.-க்களும் உள்ளனர்.

    • நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக ஜார்கண்ட் சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர்.
    • அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த சோரன் வாக்களிக்க வந்தபோது முழக்கமிட்டனர்.

    ஜார்கண்ட மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை கைதால், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார். இன்று அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.

    இதற்காக இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உரையுடன் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஹேமந்த் சோரனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சட்டசபைக்கு வந்தார். சட்டசபைக்குள் வந்ததும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர்கள் ஹேமந்த் சோரன் ஜிந்தாபாத் என முழங்கினர்.

    • நாங்கள் கண்ணீர் வடிக்க மாட்டோம். சரியான நேரத்தில் பதிலடி கொடுப்போம்.
    • மத்திய அரசின் சதிக்குப் பிறகு எனது கைது நடவடிக்கையில் ராஜ்பவன் கருவியாக செயல்பட்டது.

    ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்தில் சம்பாய் சோரன், நம்பிக்கை வாக்கெடுப்பான தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். அப்போது சம்பாய் சோரன் "ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கண்ட் அரசை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சி செய்தது. பொய் வழக்குகளில் ஹேமந்த் சோரனை சிக்க வைக்க பா.ஜனதா விசாரணை அமைப்புகளை பயன்படுத்துகிறது. என்னுடைய அரசு ஹேமந்த் சோரனின் நிர்வாகத்தில் 2-ம் பகுதி ஆகும்" என்றார்.

    ஹேமந்த் சோரன் பேசும்போது "நாங்கள் கண்ணீர் வடிக்க மாட்டோம். சரியான நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும். மத்திய அரசின் சதிக்குப் பிறகு எனது கைது நடவடிக்கையில் ராஜ்பவன் கருவியாக செயல்பட்டது.

    நான் கைது செய்யப்பட்ட ஜனவரி 31 இந்திய வரலாற்றில் கருப்பு நாள். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகுகிறேன். இதை பா.ஜனதாவுக்கு சவலாக விடுகிறேன்" என்றார்.

    ×