என் மலர்
நீங்கள் தேடியது "Samsung"
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
- தொழிற்சங்க உரிமை கோரி நடந்த போராட்டத்தின்போது தரப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றியது தமிழ்நாடு அரசு.
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் ஊதிய உயர்வு, புதிய தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் சிஐடியு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
பலதரப்பட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சிஐடியு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் செய்தனர். சிஐடியுவின் முடிவிற்கு சாம்சங் இந்தியா வரவேற்றது.
இதற்கிடையே, சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், தங்களது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்ய கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பம் செய்தனர். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்கப்படவில்லை.
இதையடுத்து, தங்களது சங்கத்தை பதிவு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் முறைப்படி பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.
தொழிற்சங்க உரிமை கோரி நடந்த போராட்டத்தின்போது தரப்பட்ட வாக்குறுதியை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சாம்சங் கேலக்ஸி S25, S25+ மற்றும் S25 Ultra ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- சாம்சங் கேலக்ஸி S25ன் ஆரம்ப விலை ரூ. 80.999 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட Samsung Galaxy S25 Series மொபைல் போன்கள் நேற்று வெளியாகின.
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்ச்சி நேற்று அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கொ மாகாணத்தில் நடைபெற்றது.
ஜெமினி ஏஐ வசதியுடன் சாம்சங் கேலக்ஸி S25, S25+ மற்றும் S25 Ultra ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. S25ன் ஆரம்ப விலை ரூ. 80.999 ஆகவும், S25+ன் ஆரம்ப விலை ரூ. 99,999 ஆகவும், S25 Ultraன் ஆரம்ப விலை ரூ. 1.29,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி S24 இந்த ஆரம்ப விலையை விட சாம்சங் கேலக்ஸி S25 இன் ஆரம்ப விலை வெறும் 1000 ரூபாய் மட்டும் தான் அதிகமாகும். ஆனால் S24 இல் 8GB ரேம் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், S25 இல் 12GB ரேம் வழங்கப்பட்டுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இன்று முதல் சாம்சங் கேலக்ஸி S25 சீரிஸ் மொபைல் போன்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். பிப்ரவரி 7 முதல் மொபைல் போன்கள் டெலிவரி செய்யப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
- செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் அறிமுகமாகிறது
- இதற்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் Galaxy S25 Series மொபைல் போன்கள் வரும் 22ம் தேதி வெளியாக உள்ளன.
சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு 2025 நிகழ்ச்சி ஜனவரி 22 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸில் இந்நிகழ்வானது நடைபெறுகிறது.
இந்நிகழ்வின் முக்கிய அறிமுகமாக கேலக்ஸி எஸ் 25 சீரிஸ் இருக்கும். எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் அறிமுகமாகிறது. S25, S25+, S25 Ultra ஆகிய 3 மாடல்கள் வெளியாகும் என எதிர்பார்காப்படுகிறது. இதற்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கியுள்ளது.
இந்த நிகழ்வில், Project Moohan என அழைக்கப்படும் எக்ஸ்டென்டட் ரியாலிட்டி (Extended reality - XR) ஹெட்செட்டையும் சாம்சங் அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
- சாம்சங் ஊழியர்கள் 91 பேரின் பணி நீக்க உத்தரவையும் ரத்து செய்ய மனுவில் கோரிக்கை.
- மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
சாம்சங் ஊழியர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவன ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரி காஞ்சிபுரம் சிஐடியு செயலாளர் முத்துக்குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
மேலும், இதில், சாம்சங் ஊழியர்கள் 91 பேரின் பணி நீக்க உத்தரவையும் ரத்து செய்ய மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்க சட்டத்தில் அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
மேலும், மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நவம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
- சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் அமைந்துள்ள சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் 1,200 பேர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டத்தைக் கைவிட வேண்டும் என பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, தொழிலாளர்களின் முக்கிய 14 கோரிக்கைகளை நிறைவேற்ற சாம்சங் சம்மதம் தெரிவித்துள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பவேண்டும் என தமிழக அரசு சார்பிலும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன்பு நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சாம்சங் தொழிலாளர்கள் 09.09.2024 அன்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டத்தை விரைவில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்குமாறு முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்கள். இதன்படி பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன்-திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆகியோரின் தலைமையில் பல்வேறு துறைகளின் அரசு அலுவலர்கள் இருதரப்பினரிடமும் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்தைகளை நடத்தினார்கள்.
இப்பேச்சுவார்த்தையின் பயனாக சாம்சங் நிர்வாகம், தொழிலாளர்களின் நலனைக் கருதி பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக 15.10.2024 அன்று தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் முன் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நிர்வாகத்தரப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தப் பேச்சு வார்த்தையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன.
தொழில் அமைதி மற்றும் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை உடனடியாக கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும்போது நிர்வாகம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக மட்டும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்தினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.
தொழிலாளர்கள் முன்வைத்த ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கையின்மீது நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகப் பதிலுரையை சமரச அலுவலர் முன்பு தாக்கல் செய்யவேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டு, வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு, தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புவதாக தெரிவித்தனர். இதனால் சாம்சங் தொழிற்சாலையில் நடந்து வந்த வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது. தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
- சாங்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் என்றனர்.
சாம்சாங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் உள்ள தொழிலாளர்களை திமுக கூட்டணி தலைவர்வர் சந்தித்து பேசினர்.
இந்நிலையில், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், "
சாம்சங் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். சாம்சங் தொழிலாளர்கள் அமைதியாக போராடிய நிலையில் வழக்கு போடப்பட்டுள்ளது.
சாங்சங் தொழிலாளர்கள் பிரச்சினையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும்" என்றார்.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், "சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளோம்" என்றார்.
மேலும் அவர்கள், "அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தைக்கு பின்னரும், பிரச்சினை தொடர்கிறது. போராட்டத்தில் ஈடுபடும் சங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்தாமல், பிற சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தொழிலாளர்கள் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் ஆரோக்கியமானது அல்ல.
காஞ்சிபுரம் காவல்துறை, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. காஞ்சி காவல்துறையின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
அடக்குமுறைகள் மூலம் போராட்டத்தை ஒடுக்க முடியாது. தெழிாலளர்களின் கோரிக்கைகளளை ஏற்க மறுப்பது ஏன் ? தொழிலாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.
சாம்சங் தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றனர்.
- சாம்சங் தொழிலாளர்கள் 25 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
- சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 25 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்திட உள்ளிட்ட நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. ஆனாலும் தொடர்ந்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணசேன் ஆகியோர் தலையிட்டு தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதனையடுத்து, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு நேற்றும் இன்றும் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் போராட்டக்குழுவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தியது
இந்நிலையில், சாம்சங் ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. உடன்பாட்டால் காஞ்சிபுரம் சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் 25 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது
- சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் உடன் வரும் திங்கட்கிழமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை.
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 25 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்திட உள்ளிட்ட நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் வேலைக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்தது. ஆனாலும் தொடர்ந்து தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமைச்சர்கள் டிஆர்பி.ராஜா, தா.மோ.அன்பரசன், கணசேன் ஆகியோர் தலையிட்டு தீர்வு காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சாம்சங் நிறுவனம் மற்றும் தொழிலாளர்கள் உடன் வரும் திங்கட்கிழமை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
- ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்ற டார்க்கெட் எல்லாம் இல்லை என சாம்சங் விளக்கம் அளித்துள்ளது.
- ஆட்குறைப்பு படலத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது ஊழியர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு அபாயத்தை சந்திக்க நேரிடும். குறிப்பாக, 10ல் ஒரு ஊழியர் வேலை இழக்கக் கூடிய சூழல் உருவாகும் என கூறப்படுகிறது!
நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், ஊழியர்கள் படிநிலையை சீர் செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேநேரம், இத்தனை ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்ற டார்க்கெட் எல்லாம் இல்லை என சாம்சங் விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 25 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆட்குறைப்பு படலத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது ஊழியர்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சாம்சங் நிறுவனம் தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சாம்சங் கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போனிற்கு அமேசான் தளத்தில் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி M55s ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் விலை அறிமுகத்தின் போது முறையே ரூ. 19 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 22 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 256 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான அமேசான் கூப்பன் வழங்கப்படுகிறது.
இதே போன்று கேலக்ஸி M55s 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலுக்கு 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவற்றை சேர்க்கும் போது, இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 20 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 17 ஆயிரத்து 999 என மாறிவிடுகிறது.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M55s 5ஜி மாடலில் டூயல் டோன் பேக் பேனல், மெல்லிய டிசைன் கொண்டுள்ளது. இத்துடன் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று லென்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ 6.1 கொண்டுள்ள கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் புளூ, கிராஃபைட் மற்றும் மின்ட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி ஓ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், எக்சைனோஸ் 2400e பிராசஸர், 8 ஜிபி ரேம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஓஎஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஏழு ஓஎஸ் அப்டேட்கள், ஏழு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 8MP டெலிபோட்டோ லென்ஸ், OIS, 10MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
விலையை பொருத்தவரை கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 65 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி துவங்குகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேலக்ஸி M15 5ஜி பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன்-ஐ அறிமுகம் செய்தது. முன்னதாக சாம்சங் நிறுவனம் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்திய கேலக்ஸி M15 மாடலில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் புதிய மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி புதிய கேலக்ஸி M15 5ஜி மாடலில் 6.5 இன்ச் FHD+ 90Hz AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க இந்த மாடலில் 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 13MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி M15 5ஜி பிரைம் எடிஷன் மாடலில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ 6 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 ஆண்ட்ராய்டு அப்டேட்கள், ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக சாம்சங் தெரிவித்துள்ளது.
இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் சாம்சங் நிறுவனம் சார்ஜர் வழங்கவில்லை.
புதிய சாம்சங் கேலக்ஸி M15 5ஜி பிரைம் எடிஷன் மாடல் புளூ டோபாஸ், செலஸ்டியல் புளூ மற்றும் ஸ்டோன் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் டாப் என்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கூப்பன் சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 10 ஆயிரத்து 999, ரூ. 11 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 13 ஆயிரத்து 499 என மாறுகிறது. இதன் விற்பனை அமேசான், சாம்சங் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ரீடெயில் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.