என் மலர்
நீங்கள் தேடியது "samyuktha"
- தனுஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் வாத்தி படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.
- ’வாத்தி’ திரைப்படம் வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா மேனன். தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'வாத்தி' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சம்யுக்தா
இந்நிலையில் வாத்தி படத்தின் விளம்பர நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் நடிகை சம்யுக்தா கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர், சம்யுக்தாவை அழைத்த போது அவரது சாதி பெயரான மேனன் என்பதையும் சேர்த்து கூறினார். உடனே சம்யுக்தா, அந்த தொகுப்பாளரிடம், தனது பெயரில் இப்போது சாதி பெயர் இல்லை, எனவே நீங்கள் என்னை சம்யுக்தா என்று மட்டுமே அழைத்தால் போதும். முன்பெல்லாம் எனது பெயருடன் சாதி பெயரும் இணைந்தே இருந்தது. இப்போது அதனை நானே நீக்கிவிட்டேன். எனவே மற்றவர்கள் என்னை இனி சம்யுக்தா என்றே அழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- சமீபத்தில் வெளியான 'வாத்தி' திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
- இப்படம் உலக அளவில் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான சம்யுக்தா தமிழில் களரி, ஜூலை காற்றில் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்த 'வாத்தி' திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் உலக அளவில் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

சம்யுக்தா
இந்நிலையில், நடிகை சம்யுக்தாவை மலையாள தயாரிப்பாளர் சாண்ட்ரா தாமஸ் புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது, "நான் தயாரித்த 'எடக்காடு பட்டாலியன்' படத்தில் நடித்ததற்காக சம்யுக்தாவுக்கு 65 சதவிகித சம்பளத்தைதான் கொடுத்தேன். படம் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெறவில்லை. பாக்கி ஊதியத்தைக் கொடுக்க முயன்றபோது அவர் வாங்க மறுத்துவிட்டார்.
முழு ஊதியமும் தரவில்லை என்றால் டப்பிங் பேசவும் படத்தின் புரமோஷனுக்கும் வர மறுக்கும் நடிகர்களுக்கு மத்தியில் சம்யுக்தா ஒரு பாடப்புத்தகம் போன்றவர். வருடத்துக்கு 300 படங்களுக்கு மேல் தயாராகும் மலையாள சினிமாவில் 5 சதவிகித படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. இந்த நிலையில் சம்யுக்தா போன்றவர்கள் தயாரிப்பாளர்களுக்குத் தேவை என்பதை என் அனுபவத்தில் சொல்கிறேன்" இவ்வாறு சாண்ட்ரா தாமஸ் கூறியுள்ளார்.
- நடிகர் மகேஷ்பாபு தற்போது ‘குண்டுர் காரம்’ என்ற திரைப்படத்தில் நடிக்கிறார்.
- இப்படத்தை இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு தற்போது 'குண்டுர் காரம்' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை 'ஆலா வைகுந்தபுரமுலோ' படத்தை இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 'குண்டுர் காரம்' திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த படத்திலிருந்து நடிகை பூஜா ஹெக்டே விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பூஜா ஹெக்டேவிற்கு போதிய கால்சீட் இல்லாததால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் 'வாத்தி' பட நடிகை சம்யுக்தா இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பூஜா ஹெக்டே- சம்யுக்தா
சமீபத்தில் 'குண்டுர் காரம்' திரைப்படத்தில் இருந்து தமன் விலகியுள்ளதாகவும் அவருக்கு பதில் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியானது நீல நிற சூரியன் திரைப்படம்.
- இப்படத்தை சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி நடித்து மற்றும் தயாரித்தும் உள்ளார்.
சம்யுக்தா விஜயன் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியானது நீல நிற சூரியன் திரைப்படம். இப்படம் திருநங்கை சமூதாயத்தின் வலிகளையும் வேதனைகளையும் பற்றி பேசுன் திரைப்படமாக அமைந்தது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி நடித்து மற்றும் தயாரித்தும் உள்ளார். படத்தின் இசை, படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவை ஸ்டீவ் பெஞ்சமின் மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரைப்படம் தற்பொழுது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
- இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை சம்யுக்தா பகிர்ந்துள்ளார்.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த சம்யுக்தா, வாரிசு படம் பற்றிய தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
காஃபி வித் காதல் ஆடியோ வெளியீட்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த சம்யுக்தா, "வாரிசு படம் பயங்கரமா வந்திருக்கு. ரொம்ப பிரம்மாண்டமா இருக்கு. எனக்கு அவர்கூட டயலாக் எதுவும் இல்லை, ஆனால் இது குடும்பப்படம் என்பதால் அவர் வரும் சில காட்சியில் எல்லோரும் இருப்போம். அவர் நடிப்பு எல்லாம் வேற லெவல்ல இருக்கு.

சம்யுக்தா
முதல் முறையாக இதை நேரில் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஒரு ஆசீர்வாதமாக நினைத்து கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில எல்லார்கிட்டயும் நல்லா பழகுவார். ஒரு ஸ்டார் மாதிரி நடந்து கொள்ளாமல் எளிமையான ஒருத்தராக நடந்துகொள்வார். சொல்லப்போனால் படப்பிடிப்பு தளத்தில் அவரது குடையை அவரே பிடித்து கொள்வார்" என கூறினார். வாரிசு திரைப்படம் 2023- ஆம் ஆண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.