என் மலர்
OTT

X
ஓடிடியில் வெளியானது சம்யுக்தா விஜயனின் `நீல நிறச் சூரியன்' திரைப்படம்
By
மாலை மலர்10 March 2025 6:16 PM IST

- கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியானது நீல நிற சூரியன் திரைப்படம்.
- இப்படத்தை சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி நடித்து மற்றும் தயாரித்தும் உள்ளார்.
சம்யுக்தா விஜயன் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியானது நீல நிற சூரியன் திரைப்படம். இப்படம் திருநங்கை சமூதாயத்தின் வலிகளையும் வேதனைகளையும் பற்றி பேசுன் திரைப்படமாக அமைந்தது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை சம்யுக்தா விஜயன் எழுதி இயக்கி நடித்து மற்றும் தயாரித்தும் உள்ளார். படத்தின் இசை, படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவை ஸ்டீவ் பெஞ்சமின் மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திரைப்படம் தற்பொழுது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
Next Story
×
X