என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Sangamithra"
- விரைவில் வெளிவரவிருக்கிற அலங்கு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
- இருவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள 'அலங்கு' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு சங்கமித்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
விரைவில் வெளிவரவிருக்கிற 'அலங்கு' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.
அய்யா ஜெயாராவ் மகன் ஜான்சன் திருமணம் இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்வில், அலங்கு படத்தின் நாயகன் தம்பி குணாநிதி அவர்களையும் படத்தின் தயாரிப்பாளர் சகோதரி சங்கமித்ரா அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.
இருவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம் என்று தெரிவித்துள்ளார்.
விரைவில் வெளிவரவிருக்கிற #அலங்கு திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.அய்யா ஜெயாராவ் மகன் ஜான்சன் அவர்களது திருமணம் இன்று நடைப்பெற்றது.நிகழ்வில்,அலங்கு படத்தின் நாயகன் தம்பி குணாநிதி அவர்களையும்படத்தின் தயாரிப்பாளர் சகோதரி சங்கமித்ரா அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.… pic.twitter.com/7sTqtfBtQb
— வன்னி அரசு (@VanniKural) October 24, 2024
- அன்புமணி ராமதாஸ்க்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என 3 மகள்கள் இருக்கிறார்கள்.
- அலங்கு என்ற திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸின் மனைவியான செளமியா அன்புமணி போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேர்தல் நேரத்தில் தனது அம்மாவிற்கு ஆதரவாக மகள் சங்கமித்ரா தொடர் பிரச்சாரங்கள் மேற்கொண்டது மக்களிடையே கவனம் பெற்றது.
அன்புமணி ராமதாஸ் - சவுமியா தம்பதிக்கு சங்கமித்ரா, சம்யுக்தா, சஞ்சுத்ரா என 3 மகள்கள் இருக்கிறார்கள். இவர்களில் சங்கமித்ரா தற்போது அலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் தற்போது சினிமா தயாரிப்பாளராக மாறியுள்ளார்.
புலம்பெயர்ந்து தொழில் செய்யும் பழங்குடியினரின் வாழ்க்கையை பதிவு செய்யும் அலங்கு என்ற திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே 'உறுமீன்', 'பயணிகள் கவனிக்கவும்' என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் மலையாள நடிகர் செம்பன் வினோத் , காளிவெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா ஆகியோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்