என் மலர்
நீங்கள் தேடியது "Sanipradosh worship"
- மானாமதுரை பகுதியில் சனிபிரதோஷ வழிபாடு செய்யப்பட்டது.
- 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள குறிச்சிகாசி விஸ்வநாதர் கோவிலில் சனிபிரதோஷ வழிபாடு நடந்தது. காசிவிஸ்வநாதர், காசிநந்திக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கங்கை தீர்த்தத்தால் சிவலிங்கத்திக்கு அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.
இதேபோல் இடைக்காட்டூர் மணிகண்டேஸ்வரர், மேலெநெட்டூர் சொர்ண வாரீஸ்வரர், வேம்பத்தூர் கைலாசநாதர், கட்டிக்குளம் ராமலிங்கம் சுவாமி, மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர், சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள சந்திர மவுலீசுவரர் ஆகிய கோவில்களிலும் சனிபிரதோஷம் வழிபாடு-அபிஷேகம் பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.