என் மலர்
முகப்பு » Sanitation inspectors
நீங்கள் தேடியது "Sanitation inspectors"
- தமிழகம் முழுவதும் துப்புரவு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதியின்படி மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
உடுமலை :
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதியின் படி நிர்வாக நலன் கருதி தமிழகம் முழுவதும் துப்புரவு ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன் ஒரு பகுதியாக உடுமலை நகராட்சியில் பணியாற்றி வந்த துப்பரவு ஆய்வாளர் பி.செல்வம் திருமுருகன் பூண்டி நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று மற்றொரு துப்புரவு ஆய்வாளர் ராஜ்மோகன் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோன்று தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் பணிபுரிந்த உதயகுமார் உடுமலை நகராட்சி நகரமைப்பு ஆய்வாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த தகவல் நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
×
X