search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sarath sandhiran"

    • அனீசியா என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் சரத் சந்திரன்.
    • இவர் திடீரென நேற்று உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

    மலையாள திரையுலகில் இளம் நடிகராக வலம் வந்தவர் சரத் சந்திரன். இவருக்கு வயது 37. அனீசியா என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் வெளியான அங்கமாலீ டைரீஸ் படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் சி.ஐ.ஏ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

    சரத் சந்திரன்

    சரத் சந்திரன்

    இந்நிலையில் நடிகர் சரத் சந்திரன் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார். இவரது மறைவு மலையாள திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இவரின் இறப்பிற்கான காரணம் குறித்து எந்தவிதமான தகவலும் இதுவரை வெளிவரவில்லை. சரத் சந்திரனின் மறைவிற்கு மலையாள திரையுலகினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    ×