என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Sarayu
நீங்கள் தேடியது "Sarayu"
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள ஆறுகளில் குறிப்பிட்ட அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. #JammuKashmir #Sarayu
ஸ்ரீநகர்:
வட மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் மற்றும் அணைகளின் நீர்மட்டங்கள் வெகுவேகமாக அதிகரித்து வருகின்றன.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும், லட்சக்கணக்கிலான ஹெக்டேர் விளைநிலங்கள் சேதமாகியுள்ளன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்திலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201808140726201900_1_Jammu-Kashmir-Flood2._L_styvpf.jpg)
இதனால் ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். #JammuKashmir #Sarayu
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் குறிப்பிட்ட அளவை தாண்டி சரயு நதி பெருக்கெடுத்து ஓடுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. #Sarayu #Flood
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சரயு நதி ஓடுகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் அயோத்யாவில் சரயு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் தண்ணீர்ின் அளவு குறிப்பிட்ட அளவைத் தாண்டிசென்று கொண்டிருக்கிறது. சரயு ஆற்றில் சேமிக்கப்பட்டு வரும் நீரின் அளவும் 93 அடியை தொட்டுள்ளது. மேலும் நீரின் வேகமும் அதிகரிதத்துள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201808090724594314_1_Sarayu2._L_styvpf.jpg)
இதனால் சரயு ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர். #Sarayu #Flood
×
X