என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "sarwanand"
- தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பிரபலமானவர் சர்வானந்த்.
- சர்வானந்த், சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டியை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பிரபலமானவர் சர்வானந்த். ஜே, கே.எனும் நண்பனின் வாழ்க்கை படத்திலும் நடித்து இருந்தார். சமீபத்தில் வெளியான கணம் படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சர்வானந்த் திருமணம் குறித்து ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.
சர்வானந்த், வெளிநாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் பெண்ணை சர்வானந்த் திருமணம் செய்து கொள்ள முடிவாகி இருப்பதாக சமீபத்தில் தகவல் பரவியது. திருமண நிச்சயதார்த்தத்தை நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து வருகிற 26-ந் தேதி ஐதராபாத்தில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் கசிந்தது.
![சர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி சர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி](https://media.maalaimalar.com/h-upload/2023/01/26/1827084-sar2.webp)
சர்வானந்த் - ரக்ஷிதா ரெட்டி
இந்நிலையில் சர்வானந்த் சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டியை கரம் பிடிக்க உள்ளார். சர்வானந்த்-ரக்ஷிதாவின் நிச்சயாதார்த்தம் எளிய முறையில் இன்று நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை நடிகர் சர்வானந்த் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.