என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Saud Shakeel"
- முதலில் பேட் செய்த இங்கிலாந்து 267 ரன்களில் ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 344 ரன்கள் எடுத்தது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜேமி சுமித் 89 ரன்னும், பென் டக்கெட் 52 ரன்னும், கஸ் அட்கின்சன் 39 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் சஜித் கான் 6 விக்கெட்டும், நோமன் அலி 3 விக்கெட்டும் எடுத்தனர்.
அடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. பாகிஸ்தானின் ஷான் மசூத் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். சாத் ஷகீல் சிறப்பாக விளையாடி சதமடித்து 134 ரன்களில்ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் நோமன் அலி 45 ரன்களும், சஜித் கான் 48 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 344 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து சார்பில் ரெஹான் அகமது 4 விக்கெட்டும், சோயப் பஷீர் 3 விக்கெட்டும், கஸ் அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
77 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
- நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கமிந்து மென்டிஸ் சதம் விளாசினார்.
- இதன் மூலம் பாகிஸ்தானின் சவுத் ஷகீலின் உலக சாதனையை மென்டீஸ் சம் செய்துள்ளார்.
காலே:
இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 106 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களம் புகுந்த கமிந்து மென்டிஸ் நிலைத்து நின்று ஆடி அணியை சிக்கலில் இருந்து மீட்டார். அவருக்கு குசல் மென்டிஸ் (50 ரன்) நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
இதனால் தனது 4-வது சதத்தை நிறைவு செய்த கமிந்து மென்டிஸ் 114 ரன்களில் (173 பந்து, 11 பவுண்டரி) கேட்ச் ஆனார். ஆட்ட நேரம் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் சேர்த்துள்ளது.
கமிந்து மெண்டிஸ் சதம் விளாசியதன் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் 50-க்கு அதிகமான ரன்களை குவித்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் சவுத் ஷகீல் தனது முதல் ஏழு டெஸ்டிலும் 50-க்கும் அதிகமான ஸ்கோரை அடித்த முதல் டெஸ்ட் வீரர் ஆனார்.
இதற்கு முன், இந்தியாவின் சுனில் கவாஸ்கர் , பாகிஸ்தானின் சயீத் அகமது , மேற்கிந்தியத் தீவுகளின் பசில் புட்சர் மற்றும் நியூசிலாந்தின் பெர்ட் சட்க்ளிஃப் ஆகியோர் தங்களின் முதல் ஆறு டெஸ்டிலும் தலா அரை சதம் அடித்தனர்.
- முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
- சவுத் ஷக்கில் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்ததன் மூலம் 146 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை அவர் படைத்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் தொடங்கியது. முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாளில் 28.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளில் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து இருந்த போது பலத்த மழை பெய்ததால் அத்துடன் ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது.
இதனை தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்த சவுத் ஷக்கில் இரண்டாவது டெஸ்டில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்ததன் மூலம் 146 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைத்திடாத புதிய சாதனையை அவர் படைத்துள்ளார். இதன்படி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஏழு டெஸ்ட் போட்டிகளில் 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர் என்று பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.
முன்னதாக அவர் முதல் டெஸ்டில் 76 ரன்களும், இரண்டாவது டெஸ்டில் 63 மற்றும் 94 ரன்களும், மூன்றாவது டெஸ்டில் 53 ரன்களும், நான்காவது டெஸ்டில் 55 ரன்களும், ஐந்தாவது டெஸ்டில் 125 ரன்களும், ஆறாவது டெஸ்டில் 208 ரன்களும், ஏழாவது டெஸ்டில் 53 ரன்களும் எடுத்து புதிய சாதனையை அவர் படைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்