search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SAvAFG"

    • டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்துள்ளன.
    • முதல் மற்றும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி நாளை நடைபெறுகின்றன.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து அரையிறுதிப் போட்டிகள் நாளை தொடங்குகின்றன.

    முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளும், இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகளும் மோதுகின்றன.

    தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதியில் வென்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற உள்ளதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் ராப் வால்டர் கூறியதாவது:

    கடந்த காலங்களில் மிக முக்கியமான போட்டிகளில் நெருங்கி வந்து தோற்றுள்ளோம். தற்போதைய அணி அப்படி தோற்கவில்லை. இந்த அணி வித்தியாசமான அணி.

    நாங்கள் இந்தத் தொடரில் எல்லைகளை தாண்டி இருக்கிறோம். நாங்கள் சரிசெய்த விஷயங்கள் குறித்து யோசிக்கிறோம். இது ஒரு உலகக் கோப்பையின் அரையிறுதி. அதை நாங்கள் பாராட்டுகிறோம், அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

    அதிர்ஷ்டத்தால் கிரிக்கெட் விளையாட்டில் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கவில்லை. சில விஷயங்கள் உங்கள் வழியில் செல்லக்கூடும் என்று நான் நினைக்கிறேன். திறமை எப்போதும் அதிர்ஷ்டத்தை வெல்லும், அது நிச்சயம்.

    நவீன கிரிக்கெட்டில் அணிகளைப் படிப்பது கடினம் அல்ல. ஏராளமான தொழில்நுட்பம் அதன் வசம் உள்ளது. அவர்களின் பல வீரர்கள் உலகெங்கிலும் உள்ள பல லீக் போட்டிகளில் விளையாடுகிறார்கள்.

    டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு ஆப்கானிஸ்தான் வந்துள்ளது கிரிக்கெட் விளையாட்டிற்கு அற்புதமானது. அவர்கள் விளையாடும் விதம் மற்றும் அவர்கள் அதை ஆதரிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி போட்டிகள் நாளை தொடங்குகின்றன.
    • முதல் அரையிறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    டிரினிடாட்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் முடிந்து அரையிறுதி சுற்றுகள் நாளை தொடங்குகின்றன.

    குரூப் 1 பிரிவில் முதல் இரு இடங்கள் பிடித்த இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் குரூப் 2 பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    முதல் அரையிறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு தரூபா பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில், தான் ஆடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

    பேட்டிங்கில் டி காக் 199 ரன்கள், டேவிட் மில்லர் 148 ரன்கள், கிளாசென் 138 ரன்கள், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 134 ரன்கள் அடித்துள்ளனர்.

    பந்துவீச்சில் அன்ரிச் நார்ஜே 11 மற்றும் ரபாடா 10 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். கேசவ் மகராஜ் 9, ஷம்சி 8 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

    உலகக் கோப்பை வரலாற்றில் அரையிறுதி வரை முன்னேறும் தென் ஆப்பிரிக்கா அணி இந்த முறை இறுதிப்போட்டிக்கு சென்று சாதித்துக் காட்டவேண்டும் என்ற எழுச்சியுடன் உள்ளது.

    இதேபோல், ஆப்கானிஸ்தான் அணி இந்த முறை வலுவான அணிகளை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றில் உகாண்டா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா அணிகளையும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, வங்காளதேசத்தையும் வீழ்த்தி உள்ளது.

    ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறது.

    பேட்டிங்கில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 281 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் சட்ரான் 229 ரன் அடித்து 3-வது இடத்தில் உள்ளர்.

    பவுலிங்கில் ஃபசல்ஹக் பரூக்கி 7 போட்டியில் 16 விக்கெட் வீ்ழ்த்தி முதலிடத்தில் நீடிக்கிறார். கேப்டன் ரஷித் கான் 14 விக்கெட் எடுத்ததுடன், கடைசி கட்டங்களில் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்க்கிறார். நவீன் உல் ஹக் 13 விக்கெட் எடுத்துள்ளார்.

    எனவே இம்முறை ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

    இரு அணிகளும் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைய கடுமையாகப் போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    ×