என் மலர்
நீங்கள் தேடியது "SAvENG"
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 298 ரன் குவித்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து 271 ரன் மட்டுமே எடுத்தது.
கேப் டவுன்:
இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. வான் டெர் டுசன் சிறப்பாக ஆடி சதமடித்து 111 ரன்கள் எடுத்தார். டேவிட் மில்லர் அரை சதமடித்து 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்தின் சாம் கர்ரன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் பொறுப்புடன் ஆடி சதடித்தார். அவர் 113 ரன்னில் அவுட்டானார். டேவிட் மலான் 59 ரன் எடுத்து வெளியேறினார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், இங்கிலாந்து 271 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 27 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் நூர்ஜே 4 விக்கெட்டும், சிசந்த மகளா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
- 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
- இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என கைப்பற்றியது.
புளோம்பாண்டீன்:
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 342 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் 80 ரன்னும், கேப்டன் ஜோஸ் பட்லர் 94 ரன்னும் மொயீன் அலி 51 ரன்னும் விளாசினர்.
343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. கேப்டன் பவுமா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 109 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டேவிட் மில்லர் 58 ரன்னும், மார்கோ ஜேன்சன் 32 ரன்னும் எடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 49.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 347 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பவுமாக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என கைப்பற்றியது.
இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 1-ம் தேதி நடக்கிறது.
- இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணியை தீர்மானிக்கும் 2வது அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது.
- தென் ஆப்பிரிக்காவின் லாரா வல்வார்ட் 53 ரன்களும், டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்களும் எடுத்தனர்.
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுடன் மோதும் அணி எது என்பதை தீர்மானிக்கும் 2வது அரையிறுதி போட்டி இன்று நடக்கிறது. இதில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது, டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் லாரா வல்வார்ட் 53 ரன்களும், டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. 11 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது. சிறப்பாக ஆடிய சோபியா 28 ரன்னிலும், டேனி வியாட் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலைஸ் கேப்சி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதன்பின்னர் நாட் ஷிவர் பிரன்ட், கேப்டன் ஹீதர் நைட் நிதானமாக ஆடினர்.
+2
- 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா ககா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கேப் டவுன்:
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் 2வது அரையிறுதி போட்டி இன்று கேப்டவுனில் நடந்தது. இதில் போட்டி தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியுடன் மோதியது, டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்களும், லாரா வல்வார்ட் 53 ரன்களும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. சிறப்பாக ஆடிய சோபியா 28 ரன்னிலும், டேனி வியாட் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலைஸ் கேப்சி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதன்பின்னர் நாட் ஷிவர் பிரன்ட், கேப்டன் ஹீதர் நைட் நிதானமாக ஆடினர். நாட் ஷிவர் பிரன்ட் 40 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின்னர் கேப்டன் ஹீதர் நைட் வெற்றிக்காக கடுமையாக போராடினார். ஆனால் மறுமுனையில் அமி ஜோன்ஸ் (2 ரன்), சோபி (1 ரன்), கேத்ரின் ஷிவர் பிரன்ட் (0) என விரைவில் பெவிலியன் திரும்பியதால் ஆட்டம் தென் ஆப்பிரிக்காவிற்கு சாதகமாக திரும்பியது.
கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தை எதிர்கொண்ட கிளென் ஒரு ரன் தட்டிவிட்டு அடுத்த வாய்ப்பை கேப்டனுக்கு கொடுத்தார். ஆனால் 2வது பந்தில் கேப்டன் நைட் ரன் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 25 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த டீன், 4வது பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். கடைசி இரண்டு பந்துகளில் கிளென் 4 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா ககா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஷப்னிம் இஸ்மாயில் 3 விக்கெட் வீழ்த்தினார். டாஸ்மின் பிரிட்ஸ் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.
நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன், தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை நடத்த உள்ளது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 163 ரன்களை எடுத்தது.
- டி காக் 38 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன் குவித்தார்.
செயிண்ட் லூசியா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. ஹென்ரிக்ஸ், டி காக் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
இருவரும் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினர். டி காக் அரை சதம் அடித்து அசத்தினார். முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்த நிலையில் ஹென்ரிக்ஸ் 19 ரன்னில் அவுட்டானார். டி காக் 38 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கிளாசன் 8 ரன்னிலும், மார்கிரம் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய டேவிட் மில்லர் 28 பந்தில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களை எடுத்துள்ளது.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
- முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 248 ரன்களில் டிக்ளேர் செய்தது.
- அடுத்து ஆடிய இங்கிலாந்து கடைசி நாளில் 251 ரன்கள் எடுத்து வென்றது.
செஞ்சுரியன்:
இங்கிலாந்து அணி கடந்த 2000-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. 4 போட்டிகள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2-0 என முன்னிலை பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் லான்ஸ் குளூஸ்னர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டேரில் கலினன் 40 ரன்னும், ஷான் பொல்லாக், பீட்டர் ஸ்டிரைடோம் தலா 30 ரன்னும் எடுத்தனர்.
மழை காரணமாக 2, 3, 4-ம் நாள் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. கடைசி நாளில் போட்டி தொடர்ந்தது. டிராவில் முடியும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் 3வது நடுவரின் ஒப்புதலுடன் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடாமலும், தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை ஆடாமலும் இருந்தனர்.
5வது நாளில் இங்கிலாந்து வெற்றிபெற 249 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அலெக் ஸ்டூவர்ட், மைக்கேல் வாகன் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர். ஸ்டூவர்ட் 73 ரன்னும், வாகன் 69 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இங்கிலாந்து 75.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஆனாலும், தென் ஆப்பிரிக்க அணி 2-1 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
147 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் இந்த டெஸ்ட் போட்டியில் தான் ஒரே இன்னிங்ஸ் மட்டும் ஆடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- 38.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து இங்கிலாந்து 179 ரன்னில் சுருண்டது.
- தென்ஆப்பிரிக்கா 29.1 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் "பி" பிரிவு கடைசி லீக் போட்டி இன்று கராச்சியில் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பில் சால்ட், டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சால்ட் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேமி ஸ்மித் டக்-அவுடடில் வெளியேறினார்.
அதன்பின் சீரான இடைவெளியில் இங்கிலாந்து விக்கெட்டுகளை இழந்தது. டக்கெட் 24 ரன்னிலும், ஜோ ரூட் 37 ரன்னிலும், ஹாரி ப்ரூக் 19 ரன்னிலும், பட்லர் 21 ரன்னிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து 38.2 ஓவரில் 179 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்கோ யான்சன், முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். மகாராஜ் 2 விக்கெட்டும் லுங்கி நிகிடி, ரபாடா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஸ்டப்ஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரிக்கெல்டன் 27 ரன்னில் வெளியேறினார்.
இதனால் தென்ஆப்பிரிக்கா 47 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு வான் டர் டுஸ்சன் உடன் ஹென்ரிச் கிளாசன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவரும் அரைசதம் விளாசினர்.
வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலையில் கிளாசன் 56 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து டுஸ்சன் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார்.
29.1 ஓவரில் 81 ரன்கள் எடுத்து தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டுஸ்சன் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்பிரிக்கா "பி" பிரிவில் முதல் இடம் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 2-வது இடம் பிடித்துள்ளது.
ஏ பிரிவில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இதில் தோல்வியடையும் அணியடன் தென்ஆப்பிரிக்கா அரையிறுதியில் மோதும்.