என் மலர்
நீங்கள் தேடியது "Sayan"
- கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.
- கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
கோவை:
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக இடைக்கால விசாரணையை அறிக்கையையும் தாக்கல் ஊட்டி கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சயானிடம் விசாரணை நடத்துவதற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர்.
இதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி போலீசார், இன்று (11-ந் தேதி) ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர்.
இதையடுத்து அவர் இன்று கோவை காந்திபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது.
சயானிடம் விசாரணை நடத்த உள்ளதால் இந்த வழக்கில் மேலும் சில முக்கிய தகவல்கள் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சயான் ஆஜராகவில்லை என அவரது தரப்பில் இருந்து சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சயான் கேரளாவில் மற்றொரு வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும், அதன் காரணமாக அவரால் இன்று கொடநாடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் சயானிடம் வேறு ஒரு நாளில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவருக்கு விரைவில் மீண்டும் சம்மன் அனுப்பவும் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், உதகை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மனோஜ் மற்றும் சயான் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த சென்னை ஐகோர்ட், அவர்கள் இருவரையும் வரும் திங்கட்கிழமை வரை கைது செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. #Kodanadu #ManojSayan #MadrasHC


கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயன், தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடநாடு சம்பவத்தின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக சயன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசியலில் தங்களை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல் தவறான தகவலை பரப்புவதாகவும், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர் என்றும் கூறினார்.
பின்னர் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில், மேத்யூ சாமுவேல் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் மேத்யூ சாமுவேலிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் டெல்லி விரைந்தனர். சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை டெல்லி விரைந்தனர்.
இதனையடுத்து கொடநாடு விவகாரம் தொடர்பாக சயான், மனோஜ் ஆகியோரை சென்னையில் இருந்து சென்ற தனிப்படை காவல் துறையினர் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லியில் கைது செய்த சயான், மனோஜ் ஆகியோரை சென்னை தனிப்படை போலீசார் விமானம் மூலம் இன்று சென்னை அழைத்து வந்தனர். பின்னர் நீதிபதி முன்னர் ஆஜர் படுத்துவதற்காக போலீஸ் வாகனம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். சர்ச்சை வீடியோ வெளியிட்ட தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.#KodanadEstate #KodanadVideo