என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "SC judge"
- இதற்கான உத்தரவை உச்சநீதிமன்ற கொலிஜியம் வெளியிட்டது.
- உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை.
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ஆர் மகாதேவன் மற்றும் என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டர். இவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த 16 ஆம் தேதி என் கோடீஸ்வர் சிங் மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கான உத்தரவை உச்சநீதிமன்ற கொலிஜியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
அதில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர் மகாதேவன், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி என் கோடீஸ்வர சிங் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை செய்வதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆர் மகாதவேன் மற்றும் என் கோடீஸ்வர் சிங் இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பேற்றனர். இதன் காரணமாக உச்சநீதிமன்ற நீதிபதி பணியிடகள் முழுமை பெற்றுள்ளன.
சி.பி.ஐ. இயக்குனராக இருந்து வந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குனராக பதவி வகித்து வந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போரில் கடந்த அக்டோபர் மாதம் 23-ந் தேதி மத்திய அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்தது. அவர்கள் இருவரையும் இரவோடு இரவாக கட்டாய விடுப்பில் அனுப்பி விட்டு, இடைக் கால இயக்குனராக எம்.நாகேஸ்வரராவை நியமித்தது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அலோக் வர்மா வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்ட நாகேஸ்வர ராவின் நியமனத்தை ரத்து செய்து கடந்த 8-ந் தேதி தீர்ப்பு அளித்தது.
அதே நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் அதிகார குழு கூடி, அலோக் வர்மாவை சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து நீக்க முடிவு எடுத்தது.
அதைத் தொடர்ந்து புதிய இயக் குனர் நியமிக்கப்படும் வரையில் நாகேஸ்வரராவை இடைக் கால இயக்குனராக நியமித்து 10-ந் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ‘காமன் காஸ்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்த 21-ந் தேதி விலகினார். சி.பி.ஐ.யின் புதிய இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் தான் இருப்பதால் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார். மேலும், சுப்ரீம் கோர்ட்டில் 2-வது இடத்தில் உள்ள நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமயிலான அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் எனவும் அவர் அறிவித்தார்.
இந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் துஷ்யந்த் தவேயிடம் நீதிபதி ஏ.கே.சிக்ரி, “நீங்கள் என் நிலையை அறிவீர்கள். நான் இந்த வழக்கை விசாரிக்க முடியாது” என கூறினார்.
மேலும், “இந்த வழக்கின் விசாரணையில் இருந்து நான் விலகுவதால் வேறு எதுவும் கூற முடியாது” என குறிப்பிட்டார்.
இந்த வழக்கு இனி வேறொரு நீதிபதியின் அமர்வு முன் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும்.
சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மாவை நீக்குவதற்கு முடிவு எடுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான உயர் அதிகார குழுவில் நீதிபதி சிக்ரி இடம் பெற்றிருந்தது நினைவுகூரத்தக்கது.
நீதிபதிகளை வழக்கு தொடர்பாக தனிப்பட்ட முறையில் அவர்களது செல்வாக்கை பெறுவதற்கு யாரும் அணுகுவதில்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பெண் நீதிபதி ஒருவரையே இதுபோல் ஒரு வழக்கில் சிலர் தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளும்படி அணுகிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த 30-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி (சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றவர்) ஆகியோர் ஓட்டல் ராயல் பிளாசா தொடர்பான ஒரு வழக்கை விசாரித்தனர்.
அப்போது நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில், “வக்கீல்களை சந்திக்கும் சாதாரண நிகழ்வுகளின்போது, சில மூத்த வக்கீல்கள் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிப்பது தொடர்பாக பேச ஆரம்பித்து விடுகின்றனர். சிலர் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு இதே விஷயத்தை பேசுகின்றனர். இதுபோல் நீதிபதிகளின் செல்வாக்கை வழக்கு விசாரணைக்காக பெற முயற்சிப்பது தீவிரமானதாக எடுத்துக் கொள்ளப்படும்” என்றார்.
இதையடுத்து, மூத்த வக்கீல் ஷியாம் திவான், “இந்த வழக்கை விசாரணை செய்வதில் இருந்து நீதிபதி இந்திரா பானர்ஜி விலகி விடக் கூடாது. அப்படிச் செய்தால் மற்ற நீதிபதிகளும் இதைப் பின்பற்றும் நிலை உருவாகும்” என்று கேட்டுக் கொண்டார்.
அப்போது, நீதிபதி அருண் மிஸ்ரா, “வழக்கு விசாரணைகளில் நீதிபதிகளின் செல்வாக்கை பெறுவதற்கு முயற்சிப்பது, கோர்ட்டை அவமதிக்கும் செயலாகும்” என்று எச்சரித்தார்.
பெண் நீதிபதியின் இந்த குற்றச்சாட்டு சுப்ரீம் கோர்ட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #SupremeCourt #IndiraBanerjee
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்