search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "scam case"

    • மோசடி வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
    • விசாரணைக்கு ஆஜராகுமாறு குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு மூன்றாவது முறையாக அழைப்பு விடுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தை சேர்ந்த பழங்கால பொருட்கள் விற்பனையாளர் மோன்சன் மாவுங்கல். இவர் பொதுமக்கள் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்தாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் மோன்சன் மாவுங்கல், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரித்தபோது, மோன்சன் மாவுங்கல் மோசடியில் போலீஸ் அதிகாரி உள்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில் மோன்சன் மாவுங்கல்லுக்கு எதிரான வழக்கு எர்ணாகுளம் மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. கேரள மாநில போலீஸ் ஐ.ஜி. லட்சுமணன் மீது மோசடி, உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்தன. அவர் அந்த மோசடி வழக்கில் 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.

    மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஐ.ஜி. லட்சுமணன் அழைக்கப்பட்டார். ஆனால் அவர் மருத்துவ காரணங்களை கூறி இரண்டு முறை விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஆகவே விசாரணைக்கு ஆஜராகு மாறு குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு மூன்றாவது முறையாக அழைப்பு விடுத்தனர்.

    மேலும் மோசடி வழக்கில் ஐ.ஜி. லட்சுமணனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி குற்றப்பிரிவு போலீசார் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மோசடி வழக்கு விசாரணையை தவிர்க்க முயற்சிப்பதாகவும், முரண்பாடான மருத்துவ சான்றிதழ்களை அளித்து விசாரணை அதிகாரி முன்பு ஆஜராவதை தவிர்க்க முயற்சிப்பதாக வும் ஐ.ஜி. லட்சுமணன் மீது குற்றப்பிரிவு தெரிவித்தது.

    இந்நிலையில் மோசடி வழக்கில் ஐ.ஜி.லட்சுமணனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை அதிகாரி அவரிடம் விசாரணை நடத்தினார்.

    அதே நேரத்தில் ஐ.ஜி. லட்சுமணனுக்கு கேரள ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவரை குற்றப்பிரிவு போலீசார் விடுவித்தனர்.

    • வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுதாகரனை போலீசார் திடீரென கைது செய்தனர்.
    • பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுதாகரன். இவர் போலி புராதனப்பொருட்கள் விற்பனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மோன் சன் மாவுங்கல் என்பவருடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுதாகரனை போலீசார் திடீரென கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    சுதாகரன் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். மேலும் ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரம் தலைமை செயலகம் உள்பட பல்வேறு இடங்களில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இந்த சம்பவங்கள் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பெருநாட்டின் முன்னாள் அதிபரை ஊழல் வழக்கில் கைது செய்ய முயன்றதால் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். #AlanGarcia
    லிமா:

    பெரு நாட்டின் முன்னாள் அதிபர் ஆலன் கார்சியா (69). பதவியில் இருந்த போது ஊழல் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே அவர் மீது விசாரணை நடைபெற்று வந்தது.

    ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய போலீசார் லிமாவில் உள்ள ஆலன் கார்சியா வீட்டுக்கு நேற்று காலை 6.30 மணியளவில் சென்றனர்.

    அதை அறிந்த அவர் வீட்டில் இருந்த தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டார். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த தகவலை அவரது கட்சி ‘அப்ரா’ உறுதி செய்துள்ளது. ஆலன் கார்சியா ஏற்கனவே 3 தடவை மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இருதய ஆபரேசன் நடந்துள்ளது.

    ஆலன் கார்சியா மறைவுக்கு அதிபர் மார்டின் விஷ்காரா டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கல் கூறியுள்ளார். #AlanGarcia
    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது மகனும், அமைச்சருமான லோகேஷ் மற்றும் உறவினர் ஆகியோர் போலி கம்பெனிகளை உருவாக்கி ஊழல் செய்துள்ளதாக ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #Chandrababunaidu
    நகரி:

    ஆந்திராவில் உள்ள முண்தகுடு கட்சி நிறுவன தலைவர் ஜெ.ராவண் குமார்.

    முன்னாள் நீதிபதியான இவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

    அதில், “ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது மகனும், அமைச்சருமான லோகேஷ் மற்றும் உறவினர் வேமுரி ரவிக்குமார் ஆகியோர் போலி கம்பெனிகளை உருவாக்கி ஊழல் செய்துள்ளனர்.

    இது தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார். இந்த மனுவை கோர்ட்டு விசாரணைக்கு ஏற்று கொண்டது. #Chandrababunaidu #Hyderabadcourt
    ×