என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Bag"

    • மாணவன் பையில் புத்தகங்களுக்கு பதிலாக துப்பாக்கி இருப்பதைக் கண்டு மிரண்டனர்.
    • இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் நஜப்கர் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரத் தொடங்கினர்.

    அப்போது ஒரு மாணவன் தயக்கத்துடன் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தான். இதைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர், அந்த மாணவனை அழைத்தனர். அவன் வைத்திருந்த புத்தகப் பையை சோதனையிட்டனர். அந்தப் பையில் புத்தகங்களுக்கு பதிலாக துப்பாக்கி இருப்பதைக் கண்டு மிரண்டனர்.

    உடனே இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் துப்பாக்கியை வாங்கி பரிசோதித்தனர். விளையாட்டுப் பொருள் என நினைத்து அதை கொண்டு வந்ததாக மாணவன் கூறினான்.

    துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீசார் உடனே அதற்கான உரிமத்தை ரத்துசெய்யும் நடவடிக்கையில் இறங்கினர்.

    விசாரணையில், அந்த துப்பாக்கி மாணவனின் தந்தைக்குச் சொந்தமானது என்பதும், அவரது பெயரில் உரிமம் வாங்கப்பட்டுள்ளதும், சில மாதங்களுக்கு முன் மாணவனின் தந்தை காலமானதும் தெரிய வந்தது.

    புத்தகப் பையில் துப்பாக்கி கொண்டு வந்த மாணவனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஸ்கூல்பேக், லஞ்ச்பேக் வாங்க வற்புறுத்தக்கூடாது என தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    கோவை மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக ஹேமலதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாடப் புத்தகங்களுக்கு ரூ. 5,000, சீருடை, லஞ்ச் பேக் போன்ற பொருட்களுக்கு ரூ.500 கேட்பதாக புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.  

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக்கூடாது என்றும், பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் தவிர பிற பொருட்களை வாங்கும்படி நிர்ப்பந்திக்க கூடாது என அறிவுறுத்தியது. இந்த வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை, காலணிகள் நவம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என அதிகாரி தெரிவித்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி தொடர்பாக அனைத்து பொருட்களும் விலை இன்றி அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.



    ஜூன் மாதம் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டவுடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து புத்தகப்பை, காலணி, கலர் பென்சில் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது.

    6, 9, 10-வது படிக்கும் 16 லட்சத்து 16 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு ஜியாமெண்ட்ரி பாக்ஸ், 3-வது முதல் 5-வது வரை படிக்கும் 15 லட்சத்து 15 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு கலர் பென்சில், 1-வது முதல் பிளஸ்-2 வரை படிக்கும் 72 லட்சத்து 55 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு புத்தகப்பை, 1-வது முதல் 10-வது வரை படிக்கும் 58 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு காலணிகள் உள்ளிட்டவை கொடுக்கப்பட உள்ளன.

    இவை அனைத்தும் நவம்பர் மாதத்துக்குள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் என சென்னை டி.பி.ஐ. வளாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ×