search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Scientists create image"

    கடவுளின் உருவம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஆராச்சியாளர்கள் கடவுளின் முகத்தை வரைந்துள்ளனர்.
    நியூயார்க்:

    கடவுள் எப்படி இருப்பார்? கடவுள் எங்கோ வானில் ஒளிந்து கொண்டிருக்கவில்லை. கடவுள் நீக்க மற நிறைந்தவர் அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். ஆனால் எப்படி இருப்பார். கடவுள் உருவம் என்பது அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப என ஆய்வு கூறுகிறது.

    ‘கடவுள் எப்படி இருப்பார்?, கடவுளின் குணம் எப்படிப்பட்டது? கடவுள் எந்த வண்ணம் கொண்டவர்?’ உலகில்  நெருப்பில் இருந்து அனைத்திலும் கடவுள் இருப்பதாக ஆதிகாலம் தொட்டு மனிதன் வணக்கி வந்து இருக்கிறான். அதில் உருவம் இல்லாமலும் கடவுளை வணங்குகிறோம்.

    புதிய ஆய்வு ஒன்றில் கடவுள் பெண்ணின் அம்சங்களைக் கொண்ட ஒரு இளமையான முகத்துடன் இருப்பார் என கூறப்படுகிறது.

    வட கரோலினாவைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் வினோதமான ஆய்வு ஒன்றை நடத்தினர். ஆய்வு முடிவு சுவாரஸ்யமாக, வேதாகம பதிவுகளிலிருந்து ஒரு பழைய மனிதராக இருந்தது. அவர்கள் இளம் வயதினரைப் போல் கடவுளைப் புரிந்துகொள்வார்கள்.

    சேப்பல் ஹில்லில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் உளவியலாளர்கள் குழு 511 அமெரிக்க கிறிஸ்தவர்களின் உதவியுடன் இந்த ஓவியத்தை உருவாக்கியது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள்  நூற்றுக்கணக்கான தோற்றமளிக்கும் முகம்-ஜோடியைப் பார்த்து, ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் முகத்தைத் தேர்வு செய்தனர்.

    தேர்ந்தெடுத்த முகங்களை இணைப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் கடவுளை எவ்வாறு தோற்றமளிக்க நினைத்தார்கள் என்பதைப் பிரதிபலிக்கும் ஒரு கலப்பு 'கடவுளின் முகத்தை' கொண்டு வந்தார்கள். அவர்களின் முடிவு ஆச்சரியம் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. ஆய்வின் முழுமையான முடிவுகள் PLOS பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

    ×