search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sea trials"

    • விமானம் புறப்பட்டுச் செல்லுதல் உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற்றன.
    • ஆகஸ்ட் 22 முதல் இந்த கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

    கொச்சி:

    தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் விக்ராந்த் போர் கப்பலை, இந்திய கடற்படை மற்றும் கொச்சி கப்பல் கட்டும் தளம் ஆகியவை இணைந்து முற்றிலும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட பாகங்களை கொண்டு உருவாக்கி உள்ளன.

    இந்தக் கப்பலின் முதற்கட்ட கடல் ஒத்திகை ஆகஸ்ட் 2021-ல் மேற் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்ட ஒத்திகை பயிற்சிகள், கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டது. 


     இதன் தொடர்ச்சியாக 4-ம் கட்ட கடல் ஒத்திகை நேற்று நிறைவடைந்துள்ளது. இந்த ஒத்திகையின்போது, விமானம் புறப்பட்டுச் செல்லுதல் உள்ளிட்ட பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

    விக்ராந்த் போர் கப்பல் இந்த மாத இறுதியில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22 அன்று இந்த கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    சீனா இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி உள்ளது. இந்த கப்பல் நேற்று டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது. #China #Aircraft
    பீஜிங்:

    சீனாவிடம் ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல்தான் இருந்து வந்தது. இந்த நிலையில், இரண்டாவது விமானம் தாங்கி போர்க்கப்பலை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி உள்ளது.

    இந்த கப்பல் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு லயோனிங் மாகாணத்தில் உள்ள டாலியன் கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடல் சோதனைகளுக்காக புறப்பட்டது.

    கடல் சோதனை, பயிற்சிகளுக்கு பின்னர் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல், 2020-ம் ஆண்டுக்கு முன்பாக அந்த நாட்டின் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்படும்.

    சீனா 3-வதாக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை ஷாங்காயில் வடிவமைத்து கட்டி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 2030-ம் ஆண்டுக்குள் 4 விமானம் தாங்கி போர்க்கப்பல்களை பெற்றிருக்க வேண்டும் என்று சீனா திட்டமிட்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    உலகிலேயே இந்தியா, அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிடம் தான் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இந்த நாடுகள் அனைத்திலும் சேர்த்து மொத்தம் 18 விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன.  #China #Aircraft
    ×