search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sean abbott"

    • டி20 பிளாஸ்ட்டில் குறைந்த பந்தில் சதம் அடித்த சைமண்ட்ஸ் சாதனையை ஷான் அபாட் சமன் செய்துள்ளார்.
    • அனைத்து டி20 கிரிக்கெட் வடிவத்திலும் ஷான் அபாட் அடித்த அதிவேக சதம் 4-வது இதுவாகும்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சர்ரே - கென்ட் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சர்ரே அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்கள் எடுத்து மோசமான நிலையில் இருந்தது.

    அப்போது களமிறங்கிய ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷான் அபாட் அதிரடியாக விளையாடினார். அவர் 44 பந்துகளில் 110 எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் சர்ரே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய கெண்ட் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 41 ரன்கள் வித்தியாசத்தில் சர்ரே அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் டி20 பிளாஸ்ட்டில் குறைந்த பந்தில் சதம் அடித்த சைமண்ட்ஸ் சாதனையை ஷான் அபாட் சமன் செய்துள்ளார். சைமண்ட்ஸ் 2004-ல் அவர் குறைந்த பந்தில் சதம் அடித்தார்.

    இதற்கு முன்பாக ஷான் அபாட் அடித்த அதிகபட்ச டி20 ஸ்கோர் 41 ரன்கள்தான். அனைத்து டி20 கிரிக்கெட் வடிவத்திலும் ஷான் அபாட் அடித்த அதிவேக சதம் 4-வது இதுவாகும்.

    2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக கிறிஸ் கெய்ல் 31 பந்துகளில் சதம் விளாசியதுதான் டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமாகும்.

    கிறிஸ் கெய்ல் 30 பந்துகளில் சதம் ஆர்சிபி / புனே வாரியர்ஸ்- 2013

    ரிஷப் பண்ட் - 32 பந்துகளில் சதம் டெல்லி / இமாச்சல பிரதேசம்-2018

    விஹான் லுப்பே - 33 பந்துகளில் சதம் நார்த்வெஸ்ட் / லிம்போபோ- 2018

    ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 34 பந்துகளில் சதம் - கெண்ட் / மிடில்செக்ஸ் - 2004

    சான் அபாட் - 34 பந்துகளில் சதம் - சர்ரே / கெண்ட்- 2023

    ஜேசன் ராய் காயம் காரணமாக ஷான் அபாட் கொஞ்சம் முன்னால் களமிறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×