என் மலர்
நீங்கள் தேடியது "Semolina Wheat Roll"
- குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
- வித்தியாசமான சுவையில் தயார் செய்து கொடுக்கலாம்.
வீட்டிலிருக்கும் ரவை,கோதுமை மாவை வைத்து சுவையான இரவு நேர உணவு தயார் செய்து விடலாம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. தினமும் இட்லி, தோசை, சப்பாத்தி என்று சாப்பிடுவதற்கு பதிலாக கொஞ்சம் வித்தியாசமான சுவையில் இந்த உணவை தயார் செய்து கொடுக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதில் நாம் நமக்குத் தேவையான காய்கறிகளை சேர்த்துக்கலாம். பெரியவர்களும் சாப்பிடுவார்கள். இதை பத்து நிமிடங்களில் தயார் செய்து விடலாம்
தேவையான பொருட்கள்
ரவை- ஒருகப்
கோதுமை மாவு- அரை கப்
சில்லி பிளேக்ஸ்- ஒரு ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
தயிர்- 3 ஸ்பூன்
வெள்ளை எள்- ஒரு ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி தழை- 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் ரவையை மிக்சியில் போட்டு பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் கோதுமை மாவு சில்லி பிளேக்ஸ், சீரகம், தயிர் மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் கொத்தமல்லி தழை போட்டு ரவா தோசை பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்த கலவையை 10 நிமிடத்திற்கு அப்படியே மூடி வைக்க வேண்டும்.
பின்னர் இந்த மாவினை ஒரு பிளேட்டில் எண்ணெய் தடவி அதில் தோசை மாதிரி மெல்லியதாக ஊற்ற வேண்டும். இந்த பிளேட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து இட்லி பாத்திரத்தில் இருந்து பிளேட்டை வெளியே எடுத்து பிளேட்டில் உள்ள தோசையை நீளவாக்கில் வெட்டி ரோல் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒவ்வொறு முறையும் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது செய்து வைத்துள்ள ரோல்களை எல்லாம் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் வெள்ளை எள் போட்டு தாளித்து ரோல்களை போட்டு எடுத்து பரிமாறவும். இதற்கு தொட்டுக்கொள்ள செஸ்வான் சாஸ் மற்றும் டொமேட்டோ சாஸ் சூப்பராக இருக்கும்.