search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sengundram rowdy murdered"

    செங்குன்றம் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த நல்லூர், நாகாத்தம்மன் நகர், வி.பி.சிங் தெருவைச் சேர்ந்தவர் தாஸ் என்கிற அருள்தாஸ் (வயது27). ரவுடி.

    இவர் மீது ராஜமங்கலம், கொடுங்கையூர் போலீஸ் நிலையங்களில் 2 கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இவரது மனைவி சுகந்தி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தாஸ் பிரிந்து கடந்த ஒரு மாதமாக அதே பகுதி அம்பேத்கார் நகர் பெருமாள் அடிபாதம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தார்.

    நேற்று இரவு தாஸ் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு தூங்கினார். நள்ளிரவு 12 மணியளவில் மர்ம வாலிபர் ஒருவர் தாஸ் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவரை பேசுவதற்காக வெளியே அழைத்து சென்றார்.

    அப்போது அங்கு பதுங்கி இருந்த 5 பேர் கும்பல் தாசை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். கை, கால், கழுத்தில் பலத்த காயம் அடைந்த தாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். உடனேகொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

    இதுகுறித்து சோழவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி. சக்கரவர்த்தி, டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. சமீபத்தில் தாஸ் யாருடனும் மோதலில் ஈடுபட்டாரா? என்ற விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் டேனி வரவழைக்கப்பட்டது. அது சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்று விட்டது. கொலை கும்பல் அங்கிருந்து வாகனத்தில் தப்பி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.

    தாஸ் கொலை செய்யப்பட்ட இடம் அவரது வீட்டில் இருந்து சுமார் 10 மீட்டர் தூரம் ஆகும்.

    எனவே அவருக்கு நன்கு அறிமுகமான நபரே அழைத்து சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

    ×