search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sennheiser"

    சென்ஹெய்சர் நிறுவனத்தின் புதிய இன்-இயர் வயர்லெஸ் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சென்ஹெய்சர் நிறுவனத்தின் CX SPORT இன்-இயர் வயர்லெஸ் ஹெட்செட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 

    எடை குறைவாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஹெட்செட், வியர்வை மற்றும் ஸ்ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ள நிலையில், இந்த இயர்போன் ஒரே சமயத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைந்து கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் இதில் வழங்கப்பட்டு இருக்கும் ரிமோட் மூன்று பட்டன் கொண்டிருப்பதால் மிக எளிமையாக இயக்க முடியும். இத்துடன் வாய்ஸ் பிராம்ப்டகளையும் மிக சுலபமாக வழங்க முடியும். ஹெட்செட்-இன் ஃபின்கள் இயர்பட்களை சவுகரியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளும்.

    இந்த ஹெட்செட்-ஐ கழுத்தில் மாட்டிக் கொண்டோ அல்லது முன்பக்கம் வைத்து பயன்படுத்தவும் முடியும். இதற்கென கேபிள் ஆர்கனைசர் வழங்கப்பட்டிருப்பதோடு காலரில் பொருத்திக் கொள்ள க்ளிப் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.



    சென்ஹெய்சர் CX SPORT சிறப்பம்சங்கள்:

    ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்ட, சென்ஹெய்சர் டிரான்ஸ்டியூசர்கள்
    தெளிவான ஆடியோ மற்றும் டைனமிக் பேஸ் வசதி
    இம்பென்டன்ஸ்: 28 Ohm (பேசிவ்), 480 Ohm (ஆக்டிவ்)
    வியர்வை மற்றும் ஸ்ப்ளாஷ் ரெசிஸ்டண்ட்
    ப்ளூடூத் 4.2 மற்றும் மல்டி-பாயின்ட் கனெக்டிவிட்டி
    ஆடியோ கோடெக்கள்: apt-X  / apt-X  LL / AAC / SBC

    சென்ஹெய்சர் புதிய இன்-இயர் ஹெட்செட்கள் (S/M/L) என மூன்று வித ஃபின் அளவுகளிலும், (XS, S, M, L) என நான்கு வித அளவுகளில் இயர் அடாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை வெளிப்புற ஒலியை கட்டுப்படுத்தி அதிகபட்சம் ஆறு மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும். 

    இத்துடன் க்விக் சார்ஜிங் வசதி கொண்டிருப்பதால் யுஎஸ்பி மூலம் சார்ஜ் செய்தால் பத்தே நிமிடங்களில் ஒரு மணி நேரத்திற்கும், 1.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.

    சென்ஹெய்சர் CX SPORT மாடலின் விலை இந்தியாவில் ரூ.9,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் ஜூன் 1-ம் தேதி துவங்குகிறது. ஜூன் 15-ம் தேதி வரை புதிய சென்ஹெய்சர் CX SPORT இயர்போன் முன்பதிவு செய்வோருக்கு புதிய இன்-இயர் ஹெட்செட் வாங்குவோருக்கு ரூ.3,990 மதிப்புடைய ஹெட்போன் இலவசமாக வழங்கப்படுகிறது. 
    ×