என் மலர்
நீங்கள் தேடியது "Senthilnathan MLA"
- அ.தி.மு.க. சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கூறினார்.
- கூட்டணி கட்சிகள் பங்கேற்க கூடாது என்பதற்காக அரசியல் செய்துள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கையில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகங்கையில் ரெயில் மறியல் போராட்டம் போராட்டம் என்று எப்படி கூற முடியும்? சிதம்பரம் மத்திய அமைச்சராக பதவி வகித்தபோது விரைவு ெரயில்கள் சிவகங்கையில் நின்று செல்ல ஏன் நடவ டிக்கை எடுக்க வில்லை?
அனைத்து விரைவு ெரயில்களும் சிவகங்கையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவ கங்கை வழியாக ராமேசு வரத்துக்கு வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டும். அ.தி.மு.க. சார்பில் ெரயில்வே மண்டல மேலா ளரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் அ.தி.மு.க. சார்பில் தொடர் போராட் டம் நடத்துவோம்.
அ.தி.மு.க. கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்த போது, இண்டியா கூட்டணி சார் பில் நடத்தப்படுவதாக தெரிவித்து விட்டு அனைத்து கட்சி சார்பில் போராட்டம் என்று நோட்டீஸ் கொடுத் துள்ளனர். அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்க கூடாது என்பதற்காக அரசியல் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாலுகோட்டையில் ரூ.5 ½ லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைத்தற்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி கூறப்பட்டது.
- வார்டு உறுப்பினர் கண்ணன், அழகர் ஆகியோர் பெற்று கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை வடக்கு ஒன்றியம் நாலுகோட்டை கிராமத்தில் பயணியர் நிழற்குடை அமைத்திட சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான நிர்வாக அனுமதியினை சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் வழங்கினார்.
இதனை நாலு கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் துரைப்பாண்டி, முன்னாள் ஊராட்சி உறுப்பினர் கிளைச் செயலாளர் உடையப்பன், வார்டு உறுப்பினர் கண்ணன், அழகர் ஆகியோர் பெற்று கொண்டனர்.
நிழற்குடை அமைத்து நிதிஒதுக்கிய செந்தில்நாதன் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.