search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Seoul"

    • வடகொரியாவின் இந்த செயல் மனிதாபிமானமற்றது.
    • இந்த செயலை உடனடியாக நிறுத்த வலியுறுத்தியது.

    கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்து தென்கொரியாவை எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.

    அந்த வகையில், கடந்த சில நாட்களாக ராட்சத பலூன்கள் முழுக்க குப்பைகளை கட்டி அவற்றை தென்கொரியா எல்லைக்குள் அனுப்பி வைத்தது. இருநாட்டு எல்லையில் அமைந்துள்ள தென்கொரிய பகுதிகளுக்குள் ஏராளமான பலூன்கள் இவ்வாறு பறந்து வந்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அந்த பலூன்களில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், ஷூ பகுதிகள், சாணம், சிகரெட் துண்டுகள் இடம்பெற்று இருந்தன. வடகொரியாவின் இந்த செயல் மனிதாபிமானமற்றது என்றும் மிகவும் தரம்தாழ்ந்த ஒன்று என தென்கொரியா தெரிவித்தது. மேலும், வடகொரியாவின் இந்த செயலை உடனடியாக நிறுத்தவும் வலியுறுத்தியது.

    இந்த நிலையில், வடகொரியா துணை பாதுகாப்பு துறை அமைச்சர் கிம் காங் II, "எல்லைப்பகுதியில் ராட்சத பலூன்களில் குப்பை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துகிறோம். குப்பைகளை சுத்தம் செய்ய எவ்வளவு கூட்டு முயற்சி தேவைப்படுகிறது, இப்படி குப்பைகளை கொட்டினால் எப்படி இருக்கும் என்பதை தென் கொரியர்கள் அறிந்து கொள்ள வேண்டும்," தெரிவித்தார்.

    தென் கொரியா சார்பில் நீண்ட காலமாக பலூன்கள் அனுப்பப்பட்டு வருவதற்காகவே இவ்வாறு பலூன்கள் அனுப்பப்பட்டன என்று கிம் காங் II தெரிவித்தார்.  

    • மாநகரப் பகுதியில் 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என எச்சரிக்கை
    • தலைநகர் பகுதியில் உள்ள 230 குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.

    சியோல்:

    தென்கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் மற்றும் மேற்கு துறைமுக நகரமான இன்சியான் பகுதிகளில் நேற்று வரலாறு காணாத மழை பதிவானது. ஒரு மணி நேரத்தில 100 மில்லிமீட்டர் மழை பெய்ததாக அந்நாட்டைச் சேர்ந்த யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கனமழைக்கு குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேரை காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மழை பாதிப்பு காரணமாக தலைநகர் பகுதியில் உள்ள 230 குடும்பங்களைச் சேர்ந்த 391 பேர் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

    சாலைகள், ஆற்றங்கரை வாகன நிறுத்துமிடங்கள், ஐந்து தேசிய மலைப் பூங்காக்கள் பாதுகாப்புக்காக மூடப்பட்டன. எட்டு பயணிகள் படகுகளில் இருந்த எண்பத்தெட்டு பேர் மீட்கப்பட்டனர்.

    மேலும் மாநகரப் பகுதியில் 300 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என தென்கொரியா வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ள சேதம் குறித்து கண்காணித்து வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தென்கொரியாவின் சியோல் நகரில் இரண்டாம் உலகப்போரின் போது அமைக்கப்பட்ட அமெரிக்க ராணுவத்தின் முகாம் சுமார் 70 ஆண்டுகளுக்கு பின் மூடப்பட்டுள்ளது. #SouthKorea #Seoul #USmilitaryheadquarters #YongsanGarrison

    சியோல்:

    வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை, உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. தடையை மீறி, அணு ஆயுத சோதனை, ஹைட்ரஜன் குண்டு சோதனை என பல்வேறு நாடுகளின் கண்டனத்திற்கு ஆளானது. 

    இதையடுத்து ஐ.நா சபை, அமெரிக்க உள்ளிட்டவை வடகொரியா மீது பொருளாதார தடைகளை விதித்தது. இதனால் கொரிய தீபகற்பம் பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியது. எனவே தென்கொரியாவிற்கு பலம் சேர்க்கும் வகையில் அமெரிக்க ராணுவத்தினர் செயல்பட்டனர். இருநாடுகளும் இணைந்து, பல்வேறு ராணுவப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். 

    இதனிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் கடந்த 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பால், இருநாடுகளுக்கு இடையே தற்போது மோதல் போக்கு முடிவுக்கு வந்துள்ளது. 

    இந்நிலையில் சியோல் நகரின் தெற்கு பகுதியில், அமெரிக்க ராணுவம் புதிய தலைமையகத்தை உருவாக்கியுள்ளது. இதையடுத்து தென்கொரிய தலைநகரான சியோலில் இருந்த ராணுவ முகாமை அமெரிக்கா காலி செய்துள்ளது. 



    இந்த ராணுவ முகாம் கடந்த 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் போது உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா வெற்றி பெற்ற பின், தென்கொரியா, அமெரிக்கா இடையேயான நட்புறவால் அந்த முகாம் தொடர்ந்து நீடித்து வந்தது. இதன்மூலம் தென்கொரியாவின் சியோல் நகரில் கடந்த 70 ஆண்டு காலமாக செயல்பட்டுவந்த அமெரிக்க ராணுவத்தினரின் செயல்பாடு முடிவுக்கு வந்துள்ளது.  #SouthKorea #Seoul #USmilitaryheadquarters #YongsanGarrison
    ×