search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "seperation"

    • அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக குர்குரே தயாராகிறது
    • தினமும் மனைவிக்காக குர்குரே வாங்கி வந்துகொண்டிருந்த கணவன் , ஒரு நாள் மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் குர்குரே வாங்கி வர மறந்துள்ளார்.

    இந்தியாவில் சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் ஜங்க் நொறுக்குதீனியாக குர்குரே உள்ளது. அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக குர்குரே தயாராகிறதுகிறது. இதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் கூறிவந்தாலும் இன்றளவும் குர்குரே அதிகம் விரும்பி உண்ணப்படும் பண்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கணவன் குர்குரே வாங்கித் தராததால் மனைவி அவரைப் பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குர்குரே சாப்பிடுவதில் அதீத நாட்டம் இருந்துள்ளது. கிட்டத்தட்ட குர்குரேவுக்கு அடிமையான அப் பெண் தனக்கு தினமும் ஒரு பாக்கெட் குர்குரே வாங்கித்தர வேண்டும் என்று தனது கணவரிடம் வலியுறுத்தியுள்ளார். அதன்படி தினமும் மனைவிக்காக குர்குரே வாங்கி வந்துகொண்டிருந்த கணவன் , ஒரு நாள் மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் குர்குரே வாங்கி வர மறந்துள்ளார். இதனால் கணவரைப் பிரிய முடிவெடுத்து வீட்டை விட்டு அப்பெண் வெளியேறியுள்ளார்.

    பின்னர் காவல் நிலையத்துக்கு சென்ற அப்பெண் , தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக முறையிட்டுள்ளார். ஆனால் கணவர் அதை மறுத்துள்ளார். குடும்பநல ஆலோசனை மையத்துக்கு இருவரும் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களிடம் பல அமர்வுகளில் தொடர்ந்து பேசிய ஆலோசகர் தெரிவிக்கையில், அப்பெண்ணுக்கு குர்குரே மீது இருந்த அதீத நாட்டமே அவர் கணவரைப் பிரிய காரணம் என்று தெரிவித்துள்ளார். 

    • நவாஸ் என்பவரை கவுதம் சிங்கானியா திருமணம் செய்து கொண்டார்
    • அவர்கள் வீட்டிற்கு உள்ளே செல்ல நவாஸிற்கு அனுமதி மறுக்கப்பட்டது

    இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர், கவுதம் சிங்கானியா (58).

    பல கோடிகள் வருவாய் ஈட்டும் உயர்ரக ஆடைகளை விற்பனை செய்யும் ரேமண்ட்ஸ் குழுமத்தின் தலைவரான இவர், அதன் நிர்வாக இயக்குனராகவும் செயல்படுகிறார். அதி வேக கார்களை விரும்பி வாங்கும் பழக்கமுடைய இவர், கார் போட்டிகளிலும் கலந்து கொள்ள விருப்பமுடையவர்.

    கவுதம் சிங்கானியா, நவாஸ் மோடி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களாகவே சிங்கானியா தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக செய்திகள் வெளிவந்தன.

    சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிர மாநில, தானே (Thane) நகரில் உள்ள சிங்கானியா குழுமத்திற்கு சொந்தமான மிக பெரிய பண்ணை வீட்டில் தீபாவளி விருந்து நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள கவுதமின் மனைவி நவாஸிற்கு அனுமதி மறுக்கப்பட்டு கேட் அருகே தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த சம்பவம் குறித்த வீடியோவை நவாஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

    இந்நிலையில், கவுதம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் செய்தி பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    எங்கள் 32 வருட மண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்புடன் வாழ்ந்து வந்த எங்கள் வாழ்வு குறித்து பலர் விரும்பத்தகாத வதந்திகளை பரப்பி வந்தனர். இனி நானும், நவாஸும் வெவ்வேறு திசைகளில் பயணிக்க உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறேன். எங்கள் இரு குழந்தைகளுக்கும் நாங்கள் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்வோம். எங்கள் தனிப்பட்ட இந்த முடிவை மதித்து நிலைமை சீரடைய ஒத்துழையுங்கள். உங்கள் அனைவரின் நல்வாழ்த்துகளை கோருகிறேன்.

    இவ்வாறு கவுதம் பதிவிட்டுள்ளார்.

    32 வருடங்கள் இணைந்து வாழ்ந்து வந்த கோடீசுவர தம்பதியினரின் விவாகரத்து செய்தி ,சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    ×