என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "server down"
- 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திர பதிவு தொடர்பான பல்வேறு பணிகளுக்கு தினமும் வந்து செல்கின்றனர்.
- தினமும் 100க்கும் அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
பல்லடம் :
பல்லடம் மங்கலம் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பத்திரம் பதிவு செய்வதற்காக பல்லடம், பொங்கலூர் மற்றும் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 30 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திர பதிவு தொடர்பான பல்வேறு பணிகளுக்கு தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் தினமும் 100க்கும் அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்தநிலையில் நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில், முகூர்த்த நாள் என்பதால் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். பத்திரப்பதிவுஅலுவலகத்தினுள், மற்றும் முன்புற வாயில் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கொண்டனர்.மேலும் அலுவலகத்திற்குள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இணையத்தள சர்வர் பிரச்சினையால் பத்திரப்பதிவு செய்வது தாமதமானது. இதனால் இரவு 8 மணிக்கு மேலும் பத்திரப்பதிவு நடந்தது. பத்திரப்பதிவுக்கு வந்திருந்த ஒருவர் கூறுகையில் :- பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கடந்த சில நாட்களாகவே மக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் இணையதள சர்வர் பிரச்சினையால் பத்திரப்பதிவு தாமதமாகிறது.
இருந்தபோதிலும் பத்திரப்பதிவு அலுவலர்கள் பணி நேரம் முடிந்தும் கூட பொதுமக்களுக்காக பணியாற்றி பத்திரங்களை பதிவு செய்து தந்தனர். அரசு இணையதள சர்வர் பிரச்சினையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் காலதாமதம் குறையும் என்றார்.
- பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்து வருகின்றனர்.
- ஏராளமான விவசாயிகள் இ சேவை மையங்களுக்கு வருகின்றனர்.
உடுமலை :
ஆண்டுக்கு ரூ. 6,000 பெறும் பிரதமரின் கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் உடுமலை, பல்லடம், தாராபுரம் என திருப்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த ஏராளமான விவசாயிகள் இணைந்துள்ளனர். விவசாயி அல்லாதவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் எ போலி பயனாளிகளை கண்டறிந்து அவர்களை நீக்கும் பணியில் வேளாண் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள், தங்கள் நில ஆவணங்களை அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் வழங்கி பி.எம்., கிசான் ஐ.டி.,யில் தங்களை இணைத்து வருகின்றனர்.
இதன் வாயிலாக அவர்களின் நில விபரம் 'அப்டேட்' செய்யப்படும். இதில் தங்களை இணைத்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே வரும் நாட்களில் கவுரவ ஊக்கத்தொகை கிடைக்கும் என்ற நிலையில், இப்பணியை இம்மாதம் இறுதிக்குள் முடிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நில ஆவணங்களை அப்டேட் செய்ய இ சேவை மற்றும் கம்ப்யூட்டர் நிலையங்கள் வாயிலாக சிட்டா நகலை விவசாயிகளை பெற வேண்டும். ஆன்லைன் வழியாகவே சிட்டா நகல் பெறப்படும் நிலையில், பல இடங்களில் சர்வர் பிரச்னையால், இதை பெற முடியாத நிலையில், விவசாயிகள் அலைமோதுகின்றனர்.கால அவகாசம் குறைவாக உள்ள நிலையில் தினமும் ஏராளமான விவசாயிகள் இ சேவை மையங்களுக்கு வருகின்றனர். தொடர் பயன்பாடால் வரும் நாட்களில் சர்வர் முடங்கும் நிலை ஏற்படும் என்பதால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏர்இந்தியா விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான எஸ்.ஐ.டி.ஏ. என்ற சர்வரில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானங்கள் வருகை, புறப்பாடு போன்ற தகவல்களை பயணிகளுக்கு தெரிவிக்க முடியவில்லை. இதனால் நாடு முழுவதும் ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டது.
இன்று அதிகாலை பல்வேறு நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு வந்த பயணிகள் ஏர்இந்தியா விமான சேவைகள் பற்றி தகவல்களை அறிந்து கொள்ள முடியாமல் தவித்தனர்.
அவர்களிடம் ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள், சர்வர் கோளாறு காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
நேரம் செல்ல செல்ல பயணிகள் கூட்டம் அதிகரித்தது. மும்பை, டெல்லி, விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் பல மணி நேரம் காத்து கிடந்தனர்.
விமானங்கள் எப்போது புறப்படும் என்ற தகவல் தெரியாததால் பொறுமை இழந்த அவர்கள் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து பயணிகளை போலீசார் சமாதானப்படுத்தினர்.
சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை பயணிகள் விமான சேவை பற்றிய அறிவிப்பை சரியாக பெற முடியாததால் தவிப்புக்கு உள்ளானார்கள். இதனால் மும்பை, கொச்சி நகரங்களுக்கும், சிங்கப்பூர், கொழும்பு ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரி கூறும்போது, “காலை 10.30 மணிக்கு பிறகு தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு விடும்” என்று தெரிவித்தார்.
இதேபோல நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களில் பயணிகள் குவிந்துள்ளார்கள். இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளிநாட்டு விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது.
எஸ்.ஐ.டி.ஏ. சர்வரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அஷ்வானி லோகானி கூறும்போது, “ஏர்லைன்சில் பயணிகள் சர்வரில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அது விரைவில் சரி செய்யப்பட்டு விடும்” என்று கூறினார்.
அதிகாலை 3.30 மணிக்கு ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை நிபுணர்கள் 9 மணிக்கு சரி செய்தனர். சுமார் 6 மணி நேரத்துக்கு பிறகு விமான சேவை மீண்டும் தொடங்கியது. இதையடுத்து விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
கடந்த ஆண்டும் ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வரில் ஏற்பட்ட கோளாறால் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #AirIndia
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்