search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shafi Parambil"

    • சுகாதாரத்துறை முன்னாள் மந்திரியுமான கே.கே.ஷைலஜா கண்ணூர் மாவட்டம் மத்தனூர் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார்.
    • ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த காங்கிரஸ் ஷாஃபி பரம்பில் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் களை கட்ட தொடங்கிவிட்டது. அங்குள்ள 16 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. அதேபோல் பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதிகளில் போட்டியிடுவோரின் விவரங்களை அறிவித்துள்ளது.

    அது மட்டுமின்றி மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது கட்சி சார்பில் களம் காண இருப்பவர்கள் விவரத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் ஒரே மக்களவை தொகுதியில் 2 எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட உள்ளனர்.

    இடது ஜனநாயக முன்னணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவரும், கேரள மாநில சுகாதாரத்துறை முன்னாள் மந்திரியுமான கே.கே.ஷைலஜா கண்ணூர் மாவட்டம் மத்தனூர் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக இருந்து வருகிறார்.

    ஐக்கிய ஜனநாயக முன்னணியை சேர்ந்த காங்கிரஸ் ஷாஃபி பரம்பில் பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இவர்கள் இருவரும் தான் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகரை மக்களவை தொகுதியில் தங்களின் கட்சி சார்பில் போட்டியிட உள்ளனர்.

    அவர்கள் இருவருமே சட்டப் பேரவை தேர்தலின் போது மக்களால் அங்கீகரித்து கொண்டாடப்பட்டவர்கள் ஆவர். அதிலும் முன்னாள் மந்திரி கே.கே. ஷைலஜா மத்தனூர் சட்டமன்ற தொகுதியில் மிகப்பெரிய வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்.

    மேலும் கொரோனா, நிபா வைரஸ் பரவிய காலக்கட்டத்தில் கேரள சுகாதாரத்துறை மந்திரியாக இருந்த ஷைலஜா மேற்கொண்ட துரித நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பலராலும் பாராட்டப்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரு மக்களவை தொகுதியில் எம்.எல்.ஏ.க்கள் இருவர் போட்டியிடுவது கேரள அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.

    ×