search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shambhavi mudra"

    சாம்பவி முத்திரை மன அழுத்தத்தையும், கோபத்தையும் நீக்கி மனதை அமைதிப்படுத்தும். இன்று இந்த முத்திரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பெயர் விளக்கம் : சம்பு என்றால் சிவம். சாம்பவி என்றால் சிவபெருமானின் மனைவி பார்வதியாகும். சாம்பவி என்பதில் சிவம் மற்றும் சக்தி ஆகிய இருவரையும் குறிக்கும் பொருள் உள்ளது. இம்முத்திரையினால் சிவஸ்தானமான புருவ நடுவில் சக்தியின் வடிவான மனம் லபம் அடைவதால் சாம்பவி முத்திரை என்று அழைக்கப்படுகிறது.

    செய்முறை: அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். இரு கைகளையும் நீட்டி முழங்கால்களின் மேல் கை விரல்களால் சின் முத்திரை செய்யவும். கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். கண்களை மெதுவாக திறந்து புருவ நடுவை நோக்கி உயர்த்தி, கருவிழிகள் இரண்டையும் ஒன்றாக இமைத்து புருவ நடுவை பார்க்கவும்.

    கண்களின் தசைகளை அழுத்தாமல் ஓய்வாக வைத்துக் கொள்ளவும். கருவிழிகளை இணைக்கும் போது தலை இடது அல்லது வலது பக்கம் திரும்பாதபடியும் தலை, முகம் மற்றும் கழுத்து பகுதி இறுக்கம் அடையாதபடியும் பார்த்துக் கொள்ளவும். கண்களை உயர்த்தும் போது மூச்சு சாதாரணமாக இருக்கட்டும். இம்முத்திரையில் மூச்சை சில விநாடிகள் நிறுத்தலாம். அல்லது நிதானமாகவும் ஆழமாகவும் இருக்கட்டும். பிறகு கண்களை மூடி ஓய்வு பெறவும்.

    ஆரம்பத்தில் ஒரு சுற்றுக்கு சில விநாடிகள் என 5 சுற்றுவரை பயிற்சி செய்யலாம். தொடர்ந்த பயிற்சியில் 10 சுற்று வரையில் அதிகரித்து 10 நிமிடம் வரை செய்யலாம்.

    மேற்கண்ட முறைப்படி இந்த முத்திரையை நன்கு பழகிய பிறகு பிராணாயாமம் மற்றும் தியானத்தின் போது, இந்த முத்திரையில் இமைகளை முடிய நிலையில் வைத்துக் கொண்டும் பருவ நடுவை கண்களால் பார்க்கும்படியும் செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்: கருவிழிகள் இரண்டையும் இணைத்து வைத்திருப்பதின் மீதும், ஆக்ஞாசக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயன்கள்:
    சக்தி, சிவ வடிவான இடா நாடியும், பிங்களா நாடியும் புருவ நடுவில் சுஷிம்னா நாடியுடன் இணைகிறது. இம்முத்திரையினால் இரு நாடிகளும் சமமாக தூண்டப்பட்டு இரண்டு நாசிகளின் வழியாக மூச்சு சமமாக இயங்கும். இதனால் சுஷிம்னா நாடியில் பிராண சஞ்சாரம் அதிகரிக்கும். குண்டலினி சக்தி விழிப்படையும். ஆக்ஞா சக்கரம் நன்கு செயல்படும். மன அழுத்தத்தையும், கோபத்தையும் நீக்கி மனதை அமைதிப்படுத்தும். பீனியல் சுரப்பு நன்கு செயல்பட தூண்டும். உணர்ச்சிகள் கட்டுப்பாட்டில் இருக்கும். புலனடக்கம் வாய்க்கும்.
    ×