search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shane Warne"

    • அஸ்வின் 2 ஆவது இன்னிங்சில் 96 விக்கெட்டுகள் வீழ்த்தி கும்ப்ளே சாதனையை முறியடித்தார்.
    • அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியர்கள் பட்டியலில் ஷேன் வார்னே சாதனையை அஷ்வின் சமன் செய்துள்ளார்.

    சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் முதல் இன்னிங்சில் சதம் விளாசிய அஷ்வின் 2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    2 ஆவது இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் இந்தியா சார்பில் 2 ஆவது இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அஷ்வின் படைத்துள்ளார்.

    இந்தியா சார்பில் 2 ஆவது இன்னிங்சில் 94 விக்கெட்டுகள் வீழ்த்திய அனில் கும்ப்ளேவின் சாதனையை 96 விக்கெட்டுகள் வீழ்த்தி அஷ்வின் முறியடித்துள்ளார்.

    மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுக்குள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே சாதனையை அஷ்வின் சமன் செய்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் அஷ்வின் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியல்:

    67 - முத்தையா முரளிதரன்

    37 - ரவிச்சந்திரன் அஸ்வின்

    37 - ஷேன் வார்னே

    36 - ரிச்சர்ட் ஹாட்லீ

    35 - அனில் கும்ப்ளே

    • கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஏபிடி வில்லியர்ஸ் அறிமுகமானார்.
    • சில சமயங்களில் அடி வாங்கினாலும் ரஷித்கான் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர்.

    தென்னாப்பிரிக்காவை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் வரலாற்றின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கடந்த 2004-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

    அவர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று அனைவரும் அழைக்கப்படுகிறார். அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 19000-க்கும் மேற்பட்ட ரன்களையும் 47 சதங்களையும் குவித்துள்ளார்.

    இந்நிலையில் தனது கேரியரில் 3 பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள கஷ்டப்பட்டதாக ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    2006-ல் முதல் முறையாக நான் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற போது ஷேன் வார்னே பெரிய சவாலை கொடுத்தார். குறிப்பாக நுணுக்கங்களை தாண்டி தம்முடைய பெயராலேயே அவர் பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார். மறுபுறம் அனுபவமின்றி இருந்த நான் அந்த சமயத்தில் அவரிடம் மிகவும் தடுமாறினேன்.அதன் பின் வயது அதிகரிக்கும் போது அனுபவமும் அதிகரித்தது.

    ஆனால் அதற்கு நிகராக பும்ரா போன்ற புதிய பவுலர்கள் மிகப் பெரிய சவாலை கொடுத்தனர். ஏனெனில் அதிக போட்டியை கொடுத்த அவர் எப்போதும் பின் வாங்காமல் உங்களது முகத்துக்கு நேராக சவாலை கொடுப்பார்.

    அதே போல் ரஷித் கான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமான ஒருவர். சில சமயங்களில் அடி வாங்கினாலும் அவரும் கம்பேக் கொடுக்கும் தன்மையை கொண்டவர்.

    அவர் ஓவரில் நான் ஒருமுறை 3 சிக்சர்களை அடித்தேன். ஆனால் அவர் அடுத்த பந்திலேயே என்னை அவுட்டாக்கினார். அந்த வகையில் அவர்களைப் போன்ற பவுலர்கள் நான் எதிர்கொள்வதற்கு மிகவும் கடினமாக உணர்ந்தேன். அதனால் அவர்கள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கிறது.

    என்று அவர் கூறினார்.

    • இன்று ஷேன் வார்னேவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.
    • ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாது சிறந்த நண்பராகவும் உங்களை நான் மிஸ் செய்கிறேன்.

    மும்பை:

    கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னேவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று.

    இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், மற்றொரு ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் அவர் குறித்த நினைவுகளை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

    அதில், களத்தில் மறக்க முடியாத ஆட்டங்களை நாம் இருவரும் ஆடியிருக்கிறோம். அதே அளவிற்கு களத்திற்கு வெளியிலும் நமது நட்புறவு தொடர்ந்தது. ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாது சிறந்த நண்பராகவும் உங்களை நான் மிஸ் செய்கிறேன். உங்கள் நகைச்சுவை உணர்வின் ஊடாக சொர்க்கத்தை அழகான இடமாக நீங்கள் மாற்றி இருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

    என சச்சின் தெரிவித்துள்ளார்.


    வார்னே குறித்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவரது நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக 1992 முதல் 2007 வரையில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் வார்னே விளையாடினார். 145 டெஸ்ட் மற்றும் 194 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். மொத்தமாக 1001 விக்கெட்டுகளை சர்வதேச கிரிக்கெட்டில் அவர் கைப்பற்றினார்.

    உலக கோப்பையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெல்லும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே நம்பிக்கை தெரிவித்தார்.
    லண்டன்:

    உலக கோப்பை போட்டி குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படாததால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி சோபிக்காது என்று பலரும் எழுதுகிறார்கள். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலிய அணி நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வருகிறது. முந்தைய கால ஆஸ்திரேலிய அணியை போல் எந்த இடத்திலும், எந்த அணியையும் வெல்லும் அளவுக்கு முன்னேற்றம் கண்டு இருக்கிறது.

    இந்த உலக கோப்பை போட்டியை இந்தியா, இங்கிலாந்து அணிகள் வெல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் ஒரு நாள் போட்டியில் அவர்கள் சமீபகாலங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். கடந்த கால வரலாறுகளை புரட்டி பார்த்தால் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி எவ்வளவு சிறப்பாக விளையாடி இருக்கிறது என்பது தெரியும். ஆஸ்திரேலிய அணி கடந்த உலக கோப்பையை வென்றது. கடைசி 6 உலக கோப்பை போட்டிகளில் 4-ல் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த உலக கோப்பை போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி நிச்சயம் பட்டம் வெல்லும் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு ஷேன் வார்னே கூறினார்.

    டோனியின் ஓய்வு குறித்து யாரும் விமர்சனம் செய்ய தேவையில்லை. அவரது ஓய்வு குறித்து அவரே முடிவு செய்வார் என்று வார்னே தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்த முக்கியமான வீரர்களில் ஒருவர் மகேந்திர சிங் டோனி என்றால் அது மிகையாகாது. இந்திய அணிக்கு இரண்டு உலகக்கோப்பையை (2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை) பெற்று கொடுத்து உள்ளார்.

    இந்திய அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக பணியாற்றிய டோனி 2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 37 வயதான அவர் பின்னர் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இந்த இரு அணியிலும் மட்டும் அவர் விளையாடி வருகிறார்.

    தற்போது நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் டோனி அதிக முக்கியத்துவம் வாய்ந்த வீரராக இருக்கிறார். தவிர்க்க முடியாத வீரரான அவர் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஒய்வு முடிவை வெளியிடுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்கள் அவரது இடத்துக்கான வரிசையில் காத்திருக்கிறார்கள்.

    இந்த நிலையில் டோனிக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய முன்னாள் பிரபல சுழற்பந்து ஜாம்பவான் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். டோனி எப்போது விரும்புகிறாரோ அப்போது ஓய்வு பெறலாம் என்று கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்திய கிரிக்கெட்டின் அற்புதமான வீரர் டோனி. அவர் இந்திய அணிக்கு பெருமைகளை தேடிக்கொடுத்து உள்ளார். டோனி இல்லாத உலகக்கோப்பைக்கான இந்திய அணியை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

    உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் அவர் இடம் பெற்று இருப்பது குறித்து சிலர் கேள்வி எழுப்புவதை என்னால் நம்ம முடியவில்லை. அவரது ஓய்வு குறித்து யாரும் எதுவும் நினைக்க தேவையில்லை.



    ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் எது என்று டோனிக்கு மட்டுமே தெரியும். அவர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறாரோ அவரே முடிவு செய்வார். தற்போது டோனி மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.

    இவ்வாறு வார்னே கூறியுள்ளார்.

    2018-ம் ஆண்டு டோனியின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. 20 ஒருநாள் போட்டியில் 275 ரன்களே எடுத்தார். இதில் சதமோ, அரைசதமோ இல்லை. அதிகபட்சமாக 42 ரன்களே எடுத்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.

    ஆனால் அதற்கு இந்த ஆண்டில் டோனி பதிலடி கொடுத்தார். அவரது ஆட்டம் அபாரமாக இருந்தது. 9 ஆட்டத்தில் 327 ரன்கள் குவித்தார். சராசரி 81.75 ஆகும். இதில் 4 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக 87 ரன் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் 78.22 ஆகும்.

    சமீபத்தில் நடந்த ஐபிஎல் போட்டியிலும் டோனி முத்திரை பதிக்கும் வகையில் ஆடினார். அவர் 12 இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தார். சராசரி 83. 20 ஆகும். ஸ்டிரைக் ரேட் 134.62 ஆக இருந்தது.
    இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரின்போது ரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக இறக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே கூறினார். #ShaneWarne #RishabhPant
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டோனி, ரிஷப் பந்த் இருவரும் விளையாட வேண்டும். ரிஷப் பந்த், அற்புதமான வீரர். ஒரு பேட்ஸ்மேனாக அவர் ஏன் தொடரக்கூடாது? என்னைக்கேட்டால் அவரை ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக கூட இறக்கலாம்.

    தற்போது தொடக்க வரிசை பணியை ஷிகர் தவான் சிறப்பாக செய்து வருகிறார். ஆனால் ரிஷப் பந்தை ரோகித் சர்மாவுடன் இறக்கும்போது, இந்திய அணிக்கு நெருக்கடி வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. அத்துடன் அது ஒரு வித்தியாசமான யுக்தியாக எதிரணிக்கு ஆச்சரியத்தை அளிக்கும். விரைவில் தொடங்க உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரின் போது ரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக விளையாட வைத்து சோதித்து பார்க்கலாம். ஷிகர் தவானை அதற்கு அடுத்த வரிசையில் ஆட வைக்கலாம்.

    இவ்வாறு வார்னே கூறினார். #ShaneWarne #RishabhPant

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு உதவத் தயார் என்று சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். #CA
    ஆஸ்திரேலியா அணி கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. கேப் டவுனில் நடைபெற்ற போட்டியின்போது பான்கிராப்ட் பந்தை உப்புத்தாளால் சேதப்படுத்தினார். இதற்கு மூளையாக செயல்பட்டவர் துணைக்கேப்டன் வார்னே என்பதும், இந்த விஷயம் கேப்டன் ஸ்மித்திற்கு தெரிந்தே நடந்தது என்றும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனால் பான்கிராப்டிற்கு 9 மாதமும், வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. வார்னர் மற்றும் ஸ்மித் இல்லாமல் ஆஸ்திரேலியா அணி சர்வதேச அளவில் திணறி வருகிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் மூவர் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.



    இதனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடையை நீக்க பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில்தான் சிட்னியை மையமாகக் கொண்ட நெறிமுறை மையம், ‘‘திமிரான போக்கு மற்றும் கிரிக்கெட்டை கட்டுக்குகள் வைத்துக் கொள்வது போன்ற கலாச்சாரத்தின் அடிப்படையில், எப்படியாக வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தை வீரர்களிடம் விதைத்ததே ஆட்சிமன்ற குழுதான்’’ என்று குற்றம்சாட்டியிருந்தது.

    இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் முக்கியமான தலைவர்கள் தங்களை பதவிகளில் இருந்து விலகி வருகிறார்கள். இந்நிலையில் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஆன வார்னே, இக்கட்டான நிலையில் தவிக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்திற்கு உதவத் தயார் என்று கூறியுள்ளார்.
    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட்டை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக பட்லரை நியமிக்க வேண்டும் என்று வார்னே தெரிவித்துள்ளார். #joeRoot
    ஜோ ரூட் 21 போட்டிகளில் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். இந்த நேரத்தில் அவரின் சராசரி 51.04-ல் இருந்து 46.80 ஆக குறைந்துள்ளது. 14 டெஸ்ட் சதங்களில் மூன்று மட்டுமே கேப்டனாக இருந்தபோது வந்துள்ளது. ஆனால் ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேப்டன் பதவியை பெற்ற பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக இருக்கும் ஜோ ரூட் இந்த தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். இவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி, பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ஆக அவரை பார்க்கலாம் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வார்னே கூறுகையில் ‘‘இங்கிலாந்தின் சிறந்த பேட்ஸ்மேன் ஜோ ரூட் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அரைசதத்தை சதமாக மாற்றுவதில் அவர் தோல்வியடைந்துள்ளார். அதேவேளையில் விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அசத்துகிறார்கள்.



    ஜோ பட்லர் சிறந்த கேப்டனாக முடியும். அவருடன் நான் பணியாற்றியதை வைத்து கூறுகிறேன். அவருடன் மிகவும் மகிழ்ச்சியாக பணியாற்றினேன். அவரால் இங்கிலாந்து அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட முடியும்.

    இங்கிலாந்து அணி ஜோ ரூட் அசைக்க முடியாத தலைசிறந்த பேட்ஸ்மேன் என்ற நிலையை உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும். அவருக்கு கேப்டன் பொறுப்பை வழங்கக் கூடாது. ஜோஸ் பட்லர் போன்ற ஒருவரிடம் கேப்டன் பொறுப்பை வழங்க வேண்டும்’’ என்றார்.
    எனது வாழ்க்கையில் பேட்டிங் என்றாலே சச்சின் தெண்டுல்கர்தான், கடைசி நாளில் சதம் அடிக்கும் வீரர் லாரா என்று வார்னே புகழராம் சூட்டியுள்ளார். #Warne #Sachin #Lara
    ஆஸ்திரேலியா அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஷேன் வார்னே. ‘லெக் பிரேக் ஹூக்ளி’ ஸ்டைலில் பந்து வீசிய வார்னே, உலக பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம் சொப்பனமாக இருந்தார். டெஸ்ட் போட்டியில் சர்வதேச அளவில் 708 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார்.

    இவர் ‘NO SPIN’ என்ற புத்தகத்தை எளிதியுள்ளார். இதில் சச்சின் தெண்டுல்கர், லாரா ஆகியோரின் பேட்டிங் திறமையை வெகுவாக புகழ்ந்துள்ளார்.

    சச்சின் தெண்டுல்கர், லாரா குறித்து வார்னே தனது புத்தகத்தில் ‘‘என்னுடைய காலக்கட்டத்தில், என்னுடைய நேரத்தில் சச்சின் தெண்டுல்கர், பிரையன் லாரா தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதை எளிதாக கூறிவிட முடியும்.



    டெஸ்ட் தொடரில் கடைசி நாளில் யராவது ஒருவர் செஞ்சூரி அடிக்க வேண்டும் என்று நான் விரும்பினால், லாராவை களம் இறக்குவேன். ஆனால், எனது வாழ்நாளில் ஒரு வீரர் பேட் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினால், சச்சின் தெண்டுல்கரைத்தான் களம் இறக்குவேன். சச்சின் தலைசிறந்த வீரர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் மிகவும் சுயநலவாதி என்று சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே குற்றம்சாட்டியுள்ளார். #Warne #SteveWaugh
    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே. இவர் புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். விரைவில் வெளிவரக்கூடிய ‘No Spin’ என்ற இந்த புத்தகத்திலும் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கை வசைபாடியுள்ளார். அவர் அந்த புத்தகத்தில் கூறி இருப்பது பற்றி டைம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த புத்தகத்தில் வார்னே கூறியிருப்பதாவது:-

    ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான ஸ்டீவ் வாக் மிகப்பெரிய சுயநலவாதி. அவரை போன்ற சுயநலவாதி வேறு யாருமில்லை. 1999-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது நான் அணிக்கு துணை கேப்டனாக இருந்தேன். முதல் 3 டெஸ்ட் போட்டியில் எனது பந்துவீச்சு சுமாராக இருந்தது. இதனால் 4-வது டெஸ்டில் என்னை அணியில் இருந்து ஸ்டீவ் வாக் நீக்கினார்.

    ஆலன் பார்டர் என் மீது நம்பிக்கை வைத்து இருந்தார். ஆனால் அவர் நீக்கியது ஏமாற்றமாக இருந்தது. முக்கியமான போட்டியில் அவர் என்னை நம்பவில்லை. ஸ்டீவ் வாக்கை நான் நல்ல நண்பராக கருதியவன். நான் எப்போதுமே அவருக்கு ஆதரவாக இருந்துள்ளேன். ஆனால் அந்த இடத்தில் என்னை கைவிட்டு விட்டார். இதனால் நான் மனம் உடைந்து போனேன்.

    முதல் 3 டெஸ்ட்டில் ஸ்டீவ் வாக்கின் கேப்டன் ஷிப் மற்றும் பீல்டிங் வியூகம் குறித்து சில வீரர்கள் என்னிடம் விமர்சனம் செய்தனர். நான் அப்போதும் கூட ஸ்டீவ் வாக்குக்கு ஆதரவாகவே பதில் அளித்தேன். ஆனால் அவர் எனக்கு கைமாறு செய்யவில்லை.

    கேப்டன் கனவுடன் ஸ்டீவ் வாக் முற்றிலும் வேறு ஒரு மனிதராகி விட்டார். அவர் என்னை நீக்கியதால் அல்ல. நான் சரியாக ஆடவில்லை எனில் நீக்குவது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் வெறும் ஆட்டம் மட்டுமே அங்கு வி‌ஷயமில்லை. அதையும் தாண்டி சில வி‌ஷயங்கள் இருந்தன என்பதுதான் முக்கியம்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது டெஸ்டில் என்னை நீக்கியதால் ஸ்டீவ் வாக்கை பழி தீர்க்க நினைத்தேன்.



    1999 உலக கோப்பையை வென்ற பிறகு இலங்கை சென்றோம். காயம் அடைந்த ஸ்டீவ் வாக் 2-வது டெஸ்டில் ஆட வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்தார். நான் அப்போது பழி தீர்க்க ஆசைப்பட்டேன். அவர் ஆடக்கூடாது என்று நான் நினைத்தேன். ஆனால் ஸ்டீவ் வாக் பக்கம் பயிற்சியாளர் இருந்ததால் அவருக்கு சாதகமாகி விட்டது.

    இவ்வாறு வார்னே தனது புத்தகத்தின் ஒரு பகுதியில் தெரிவித்துள்ளார்.

    ஸ்டீவ்வாக் 1999-ல் ஆஸ்திரேலிய அணிக்கு உலக கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    விராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, சர்வதேச அளவிலான சாதனையில் வார்னே உடன் இணைந்துள்ளார் அஸ்வின். #Ashwin #Viratkohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்தை 287 ரன்னுக்குள் சுருட்ட முக்கிய காரணமாக இருந்தார்.

    2-வது இன்னிங்சிலும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து திணற காரணமாக இருந்தார். இரண்டு இன்னிங்சிலும் 7 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் விராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    ஒரு கேப்டன் தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அஸ்வின், சர்வதேச அளவில் விரைவாக வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை ஷேன் வார்னே உடன் பகிர்ந்துள்ளார்.

    சனத் ஜெயசூர்யா தலைமையின் கீழ் முத்ததையா முரளீதரன் 30 போட்டியில் இந்த சாதனையைப் படைத்து முதல் இடத்தில் உள்ளார். வார்னே ரிக்கி பாண்டிங் தலைமையின் கீழ், அஸ்வின் விராட் கோலி தலைமையின் கீழ் 34 போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.



    மால்கம் மார்ஷல் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையின் கீழ், ஆலன் டொனால்டு குரோஞ்ச் தலைமையின் கீழ், டேல் ஸ்டெயின் ஸ்மித் தலைமையின் கீழ் 40 போட்டியில் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளனர்.
    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசுவதற்கு உத்வேகமாக அமைந்ததே வார்னேதான் என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். #IPL2018
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவரில் 142 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. முதல் விக்கெட்டுக்கு 4.5 ஓவரில் 62 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். இதனால் 200 ரன்னை சர்வ சாதரணமாக தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் சைனமேன் பந்து வீச்சாளரான ரிஸ்ட் ஸ்பின்னர் குல்தீப் யாதவ் பந்து வீச அழைக்கப்பட்டார்.

    இவர் அபாரமாக பந்து வீசி 4 ஓவரில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இந்த போட்டிக்கு முன்பு 12 போட்டிகளில் 9 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார்.



    தான் சிறப்பாக பந்து வீசியதற்கு ஷேன் வார்னே அங்கிருந்ததுதான் என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார். இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘நான் எப்போதுமே ஷேன் வார்னேயின் மிகப்பெரிய ரசிகன். அவர்தான் என்னுடைய முன்னுதாரணம். அவர் முன்னாள் விளையாடும்போது எப்போதுமே, மாறுபட்ட உத்வேகத்தை பெறுவேன். அவர் முன் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த விரும்புவேன்.

    போட்டிக்குப்பின் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். நான் ஏற்கனவே இங்கிலாந்து தொடருக்கான என்னுடைய திட்டத்தை தொடங்கிவிட்டேன். இது அவருடன் சிறிய உரையாடல்தான். ஐபிஎல் தொடருக்குப் பின் ஒருவேளை அவருடன் பேசுவதற்கான வாய்ப்பை பெறலாம்’’ என்றார்.
    ×