search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shanghai"

    • வானிலை சீரானதும் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
    • சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    பீஜிங்:

    கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்த சூறாவளி சுமார் 151 கி.மீ. வேகத்தில் இன்று கரையை கடக்கும் என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கிழக்கு கரையோர பகுதிகளில் 254 மி.மீ. அளவிலான மழைப்பொழிவு பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் நகரில் இருந்து சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பெபின்கா சூறாவளி கரையை கடக்கும் வரை சுமார் 600 விமானங்கள் ரத்துசெய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வானிலை சீரானதும் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீனாவில் கட்டுமானப் பணி நடைபெற்றுவந்த தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் 10 பேர் உயிரிழந்தனர்.
    பீஜிங்:

    சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஷாங்காய் நகரில் உள்ள சாவோஹுவா சாலையில் ஒரு தொழிற்சாலையை புனரமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    நேற்று மாலை திடீரென்று இந்த கட்டிடத்தின் பெரிய சுவர் உடைந்து கீழே விழுந்தது. அந்த அதிர்ச்சியில் கட்டிடத்தின் ஒருபகுதி தரைமட்டமானது. அங்கு பணியாற்றி கொண்டிருந்த சுமார் 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி தவித்தனர்.



    தகவலறிந்து விரைந்துவந்த மீட்பு படையினர் இரவு முழுவதும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை நிலவரப்படி 10 பிரேதங்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்த மற்றவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    5ஜி நெட்வொர்க் சேவை பெறும் உலகின் முதல் மாவட்டம் என்ற பெருமையை சீனாவின் ஷாங்காய் மாவட்டம் பெற்றுள்ளது. #5G



    5ஜி நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் சேவையை பெறும் உலகின் முதல் மாவட்டமாக ஷாங்காய் இருப்பதாக தெரிவித்துள்ளது. உலக நாடுகளிடையே அடுத்த தலைமுறை செல்லுலார் மற்றும் மொபைல் நெட்வொர்க் சேவையை உருவாக்குவதில் கடும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

    அந்த வகையில் 5ஜி தொழில்நுட்பம் அடுத்த தலைமுறை செல்லுலார் தொழில்நுட்பமாக இருக்கிறது. தற்போதைய 4ஜி எல்.டி.இ. நெட்வொர்க்களை விட 5ஜி சேவையை பயன்படுத்தும் போது டவுன்லோடு வேகம் 10 முதல் 100 மடங்குவரை அதிகமாக இருக்கும். அந்த வகையில் ஷாங்காய் மாவட்டத்தில் 5ஜி சிக்னல் பரப்பளவு மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் நெவொர்க் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.



    சைனா மொபைல் சார்ந்து 5ஜி நெட்வொர்க் சோதனை ஷாங்காயின் ஹாங்கௌவில் துவங்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 5ஜி பேஸ் ஸ்டேஷன்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சேவையை துவங்கி வைத்த ஷாங்காய் மாவட்ட துணை மேயர் வு கிங் 5ஜி சேவையில் முதல் வீடியோ கால் மேற்கொண்டார். இதற்கு அவர் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை பயன்படுத்தினார்.

    சீராக இயங்க துவங்கும் போது பயனர்கள் தங்களது சிம் கார்டுகளை அப்டேட் செய்யாமல் புதிய நெட்வொர்க் சேவையை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது. ஹூவாய் நிறுவனம் 5ஜி சேவையை வழங்குவதற்கு அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகளில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. 

    5ஜி சேவை மையங்கள் சீனாவின் பல்வேறு பகுதிகளில் இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகின்றன. ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனினும், ஹூவாய் சீன அரசாங்கத்துடன் தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென ஹூவாய் தெரிவித்துள்ளது.
    சீனாவில் சூகுய் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் மாணவர்கள் மீது நடத்திய கத்திக்குத்து தாக்குததில் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். #KnifeWielding #SchoolChildren
    ஷாங்காய்:

    சீனாவில், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் வன்முறை சார்ந்த குற்றச்செயல்கள் நடப்பது அபூர்வம். அதிலும் குறிப்பாக நகரங்களில் எந்த வன்செயலும் நடைபெறாது. அந்த அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும்.

    இந்த நிலையில், அந்த நாட்டின் மிகப்பெரிய நகரமான ஷாங்காய் நகரத்துக்கு உட்பட்ட சூகுய் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப்பள்ளிக்கூடம் ஒன்றின் வாசலில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 11.30 மணிக்கு 3 மாணவர்களையும், ஒரு மாணவரின் தாயாரையும் ஒரு மர்ம நபர் காய்கறி வெட்டும் கத்தியால் சரமாரியாக குத்தினார். அவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர்.



    உடனடியாக அவர்கள் அங்கு இருந்து மீட்கப்பட்டு, ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். எஞ்சிய ஒரு மாணவருக்கும், படுகாயம் அடைந்த மாணவர் ஒருவரின் தாயாருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், தாக்குதல் நடத்திய நபரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் 29 வயதானவர். வேலை இல்லாதவர். சமூகத்தின் மீது மிகுந்த கோபம் கொண்டவர். அந்தக் கோபத்திலும், வெறுப்புணர்விலும்தான் அப்பாவி மாணவர்களையும், ஒரு மாணவரின் தாயாரையும் கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார் என தெரியவந்து உள்ளது.

    இந்த சம்பவம், ஷாங்காய் பகுதியில் உள்ள பெற்றோர்களிடமும், மாணவ, மாணவிகளிடமும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    ×